Tuesday, October 5, 2010

எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்!

இன்றைய தினமணியில் வந்திருக்கும் எந்திரன் குறித்த விமர்சனம்

எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்!
----------------------------------------------

ஏறத்தாழ 5 ஆண்டுகள் உழைப்பில் - 6 மில்லியன் டாலரில் (இன்றைய மதிப்பில் ரூ. 140 கோடி) "ஜெமினி பிலிம்ஸ்' உருவாக்கிய இந்தியாவின் பிரம்மாண்டமான படமான "சந்திரலேகா' 1948-ல் தமிழிலும் தொடர்ந்து ஹிந்தியிலும் வெளியானது. இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. படிப்படியாக 609 பிரதிகள் போடப்பட்டன. அமெரிக்காவிலும் திரையிடப்பட்டது, இடையிடையே ஆங்கிலத்தில் கதைச் சுருக்கத்துடன். இந்தியத் திரை வரலாற்றில் இவை எல்லாமே அப்போதுதான் முதல் முறை.

தஞ்சாவூரில் "சந்திரலேகா' வெளியானபோது கூடுதலாக தன்னுடைய திரையரங்கிலும் வெளியிட விரும்பினார் மற்றொரு திரையரங்கின் அதிபர். தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர் என்ற உரிமையில் வாசனை நேரடியாகவே அவர் அணுகினார். வாசனோ மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்: ""ஒரு சின்ன நகரத்தில் பல திரையரங்குகளில் படம் வெளியிடுவது நல்லதல்ல. யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது. நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. எல்லோரும் பிழைக்க வேண்டும் அல்லவா?''

படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. படத்தின் வெற்றியில் எல்லோருக்கும் பங்கு தரப்பட வேண்டும் என நினைத்தார் வாசன். படத் தயாரிப்புக் குழு மேலாளரிலிருந்து படம் ஓடிய திரையரங்குகளில் டிக்கெட் கிழித்த தொழிலாளிகள் வரை எல்லோருக்கும் சிறப்பு ஊக்கப் பரிசு அளித்தது "ஜெமினி ஸ்டுடியோ'. "சந்திரலேகா' வரலாறானது. தொழில் தர்மத்துக்காக இன்றளவும் வாசன் நினைவுகூரப்படுகிறார்!

ஏறத்தாழ ரூ.160 கோடி முதலீடு, ஒரே நேரத்தில் 3 மொழிகளில் 2,200 பிரதிகளுடன் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியீடு, ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு, இதுவரை இந்திய கதாநாயகிகள் யாரும் பெற்றிராத ரூ. 6 கோடி சம்பளத்தில் கதாநாயகியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், ஆஸ்கர் விருதுபெற்ற ஏ.ஆர். ரஹ்மான் இசை, எல்லாவற்றுக்கும் மேலாக "சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்...

வரலாறுதானா "சன் பிக்சர்'ஸின் "எந்திரன்'?

நிச்சயமாக "எந்திரன்' ஒரு வரலாறுதான். ஒரு ஜனநாயக நாட்டில் விஞ்ஞானத்தின் உதவியுடன், அரசாங்கத்தின் ஆசியுடன் வணிக மோசடியும் வணிக ஏகாதிபத்தியமும் எப்படி ஜனநாயகமாக மாற்றப்படுகிறது என்கிற வரலாறு.

மொத்தம் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள். முதல் நாளன்று சராசரியாக ஒரு திரையரங்குக்கு 500 இருக்கைகள்; 4 காட்சிகள்; டிக்கெட் விலை ரூ. 250 எனக் கொண்டால்கூட முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 150 கோடி. "சன் குழும' ஊடகங்கள் பறைசாற்றும் தகவல்களின்படி, தமிழகம் மட்டும் இன்றி ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கமான "கோலோஸியம்' உள்பட எல்லா இடங்களிலும் முன்பதிவில் புதிய சாதனைகளை "எந்திரன்' உருவாக்கி இருக்கிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் ஒரு வாரத்துக்குள் மட்டும் குறைந்தது ரூ. 1,000 கோடி வருமானம்! எனில், மொத்த வருமானம்?

ஒரு தொழில் நிறுவனம் தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி இப்படிச் சம்பாதிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். நியாயம்தான். தொழில் நிறுவனம்தான், புத்திசாலித்தனமாகத்தான் சம்பாதிக்கிறார்கள்; "வால்மார்ட்'டுக்கும் "கோகோ கோலா'வுக்கும் "ரிலையன்ஸ் ஃப்ர'ஷுக்கும்கூட இந்த நியாயம் பொருந்தும். ஆனால், நாம் அவர்களை ஆதரிக்கவில்லையே, ஏன்? அவர்களை எந்தக் காரணங்கள் எதிர்க்க வைக்கின்றனவோ அதே காரணங்கள்தான் "எந்திர'னையும் எதிர்க்கவைக்கின்றன.

சென்னையில் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் "எந்திரன்' வெளியாகி இருக்கிறது. ஆனால், ஆச்சர்யம் இது இல்லை. தமிழகத்தின் மிக சாதாரண நகரங்களில் ஒன்றான (தமிழகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் தங்கிய மாவட்டத்தின் தலைநகரமும்கூட) புதுக்கோட்டையில்கூட 4 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுதான் நிலை.இந்தச் சூழல் இதுவரை ஒருபோதும் இல்லாதது. இந்தியத் திரையுலகம் முன்னெப்போதும் எதிர்கொண்டிராதது. ரசிகனுக்கு "எந்திரன்' படத்தைத் தவிர, வேறு எந்தப் படத்தையுமே பார்க்க முடியாத சூழலை ஏற்படுத்தி, தங்களது பணபலத்தாலும், அரசியல் செல்வாக்காலும் பெருவாரியான திரையரங்குகளில் தங்களது படத்தை மட்டுமே திரையிட வைத்திருக்கும் ஏகபோக மனோபாவம்.

படம் வந்த சில நாள்களுக்குள் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வமே பரந்துபட்ட "எந்திரன்' பட வெளியீட்டுக்கான வியாபார சூட்சமமாக மாறியிருக்கிறது. பொதுவாக, எந்த ஒரு வெற்றித் திரைப்படத்துக்கும் அதிகபட்சம் 10 நாள்களுக்குத்தான் கூடுதல் விலையில் டிக்கெட்டை விற்க முடியும். நூறு நாட்கள் ஓடக்கூடிய ஒரு வெற்றிப் படம் ஓர் ஊரில் ஒரேயொரு திரையரங்கில் திரையிடப்பட்டால், முதல் 10 நாட்களில் பார்க்கும் ரசிகர்கள்தான் கூடுதல் கட்டணத்தில் படம் பார்க்க நேரிடும். எஞ்சிய 90 நாட்களில் படம் பார்க்கும் ரசிகர்கள் சாதாரண கட்டணத்திலேயே படம் பார்த்துவிடலாம். ஆனால், ஒரு திரையரங்குக்குப் பதில் ஊரிலுள்ள 10 திரையரங்குகளிலும் படத்தை வெளியிட்டால், 100 நாள்களும் படத்தைக் கூடுதல் கட்டணத்திலேயே ஓட்டியதற்குச் சமம். இதுதான் "எந்திரன்' அறிமுகப்படுத்தி இருக்கும் "ஏகபோக' (மோனாப்பலி) வியாபார சூட்சமம்.


தயாரிப்பாளர்கள் சங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர்களைப் பாதுகாப்பதற்காக ஒரு எழுதப்படாத விதியை அறிவித்தது. அதன்படி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் போன்ற ஆரம்ப எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதாநாயகர்கள் நடித்த திரைப்படத்தை தீபாவளி, பொங்கல், சித்திரைப் புத்தாண்டு போன்ற விசேஷ தினங்களில் மட்டுமே திரையிட வேண்டும். ஏனைய நாள்களில் சிறிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு அவை குறைந்தது இரண்டு வாரங்களாவது ஓடி விநியோகஸ்தர்களுக்கு குறைந்தபட்ச லாபத்தையாவது ஏற்படுத்திக் கொடுக்கும். மற்றவர்களுக்கு நியாயம் சொல்லும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமோ, விநியோகஸ்தர்கள் சங்கமோ, "எந்திரன்' விஷயத்தில் வாயைத் திறக்கவே இல்லையே, ஏன்? பயமா இல்லை ஆட்சியாளர்களின் பாததூளிகளுக்கு சாமரம் வீசும் அடிமைத்தன மனோபாவமா!

"எந்திரன்' திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட்டிருந்தால் திரையிடக் காத்திருக்கும் பல சிறிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டு இரண்டு, மூன்று வாரங்கள் ஓடியிருக்கும். "எந்திரன்' வெற்றிப்படமாகவும் அமைந்துவிட்டால், பாவம் சிறிய படங்களைத் தயாரித்து வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வெளியிட மேலும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை திரையரங்குகள் கிடைக்காது. கிடைத்தாலும் "எந்திரன்' படத்தின் வெற்றி ஜுரத்தில் அந்தப் படங்கள் ஓடாது. போட்ட முதலும், அதிகரித்த வட்டியும், அந்தத் தயாரிப்பாளர்களை திவாலாக்கி நடுத்தெருவில் நிறுத்தும். ஏகபோகத்தின் கோர முகம் இதுதான்!
- சமஸ்

23 comments:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

முழுக்க முழுக்க உண்மை தீபா.

பகிர்விற்கு நன்றி.

கிறுக்கன் said...

அருமையான பதிவு!!!

தெரிந்த உண்மை...தெளியாத சமூகம்...

காமராஜ் said...

அத்தியாவசியமான பதிவு.வாழ்த்துக்கள்.

Gayathri said...

அருமையான அலசல்

அம்பிகா said...

பொழுதுபோக்கு படம் தானே என்பவர்களுக்கு, அதன் ஏகாதிபத்தியத்தை புரியவைக்கும் பகிர்வு.
சந்திரலேகா - வரலாறு.
எந்திரன் - வரலாறு ஆக்கப்படுகிறது

Madumitha said...

இந்த அநியாயத்தையெல்லாம்
தட்டி கேட்க வேண்டிய அரசே
சான்றிதழ் கொடுக்கிறது.
நாம் தான் புறக்கணிக்க வேண்டும்.

Unknown said...

What else ine can say when CM certified its even better thanChandramuki".This apart the family's clout in electronic media wil make the First family look colosol in the next election!I don't dare to think on that line..

hariharan said...

ஏகாதிபத்தியம் நிச்சயம் வீழ்த்தப்படும், அது அரசியலிலும் ஸ்ரீ வியாபரத்திலும் சரி.

அரசியலையும் வியாபாரத்தையும் ஒன்றுடன் ஒன்றை தொடர்பு கொண்டே ச்ன் டிவியும் திமுகவும் வள்ர்ந்து வந்திருக்கிறது. மக்கள் எப்போதும் பார்த்து சகித்துக் கொண்டே இருக்கமாட்டார்கள்.

'பரிவை' சே.குமார் said...

முழுக்க முழுக்க உண்மை தீபா.

பகிர்விற்கு நன்றி.

Unknown said...

This is a such a narrow minded view, comparing "சந்திரலேகா" with now days film only shows your ignorance. In this day of piracy if you release a movie it will be out in DVD in two days(I saw endhiran cam print in youtube already).

so only way for any movie with huge budget to avoid loses is to run in as many screens as possible. this will only help other small cinemas since after a week every one would have seen this movie and in second week half the screens will be free for new movies. this means even small movies can be screened in big cinema halls in the following week, not like old days where big cinema halls will be screening only big stars movie for months. now that this movie is release now, we will see some more movies by diwali. I am sure if this movie got release on diwali you will say your point in opposite way.

Most of your points are emotional statements, I want to know what is your expertise in the field of film industry and distribution to make these claims? did you checked with some people who got affected by this? did you interview them? resisting something which you don't understand is not bright idea. stop writing only from your point of view and come up with constructive argument and then let the reader decide which is right.

Unknown said...

one more point, don't look for "ஏகாதிபத்திய" in everything, its a paranoia gives you lot of irrational relives. just because lot of comments from your friends agree with you doesn't makes it right.

Gokul Rajesh said...

நீங்கள் உபயோகிக்கும் operating system என்ன?
நீங்கள் பயன் படுத்தும் internet search engine எது?
நீங்கள் எழுதும் blog எந்த இணையதளத்தை சேர்ந்தது?

Microsoft Windows, Google Search, Google Blogger என்று நீங்கள் சொன்னால், நீங்களும் monopoly-ஐ தடுக்கவில்லை தானே?

ஸ்ரீரசா said...

அருமையான கட்டுரை. இவை வெறும் சினிமா தொடர்பான நிகழ்வுகள் மட்டுமல்ல. சினிமாவை ஏகபோக சினிமாவாக மாற்றும் சமுகத்தின் நிகழ்வுகளும் கூட. சினிமா, சினிமாவை ஒட்டிக் கட்டமைக்கப்படும் ஊடக உளவியல், சமுக உளவியல், வாதங்கள், எதிர் வாதங்கள்,அரசின் பங்களிப்பு, ரசிக உளவியல், அதை மட்டுமே பேசு பொருளாக்கும் தந்திரம், எல்லாமே சமுகத்தில் பாடுபட்டு உழைப்பவர் செல்வங்களைக் கொள்ளையடிக்கும் ஒற்றைப் புள்ளியில் மையங்கொள்வது என்று பல முனைகளில் நாம் விவாதிக்க வேண்டியுள்ளது.

VIRALGAL said...

A VERY GOOD POST. PLEASE WATCH THIS YOUTUBE VIDEO ABOUT ENDIRAN STUNTS WHICH ARE PERFORMED BY THE REAL SUPERSTAR "ALEX MARTIN" WEARING RAJINI MASK.

http://www.youtube.com/watch?v=zi0sfRQ9Bx0&feature=related

vels-erode said...

This is stupid idea. As per ur idea,If 'ENTHIRAN' would released on , some of the low budget film, those waiting for release-also met sooper dooper flap. This is good - ie ENTHIRAN released before DEEPAVALI.
There no way connection with goverment and This film, then how can u say, govt given their blessings to ENTHIRAN to make fraudulant business ideas. After all , nowadays all of the films, including all VIJAY films also doing the same idea too. But you are pointing only SUN PICTURES.????Is this good?

vels-erode said...

The same was re-written in

http://pitchaipathiram.blogspot.com/2010/10/blog-post_3728.html

Sure ?

Ramesh said...

பின்னூட்டங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடியவையே...

ஹுஸைனம்மா said...

தானாகவே பழுத்திருக்கக்கூடியதை, கெமிக்கல் போட்டு பழுக்கவைக்கிறார்கள். விளைவு - சுவையும் கெடும்; சீக்கிரம் அழுகியும் போகும்!!

Anonymous said...

இதைப்பற்றிய என்னுடைய பதிவையும் பாருங்கள்...http://kuwaittamils.blogspot.com/2010/10/blog-post_06.html

Bala said...

As th blogger himself has written at the top, this is an article that has come in Dinamani today. It seems none of the people who have commented here has noted it.

Nari said...

velaumani1 anna unkalluku politics puriyaleye

Sun TV Group is making their business and well Dinamani is maaking theirs, hope you will accept

Nari said...

well sun tv group is making their money and dinamani theirs. Fooish are people of Tamil Nadu and Tamils of Eelam (refugess of the world)

Nari said...

suntv and dinamani are making their own money