அவற்றுக்கு மலர்களைப் பற்றி என்ன தெரியும்?
வாசம் தான் புரியுமா?
லேசாகப் பூங்காற்று வீசினாலும் மூச்சடைத்துத் தான் போகும்.
விமர்சன ஊசிகளையும் உளிகளையும் சிற்பக்கற்கள் மீது பயன்படுத்துவோம்.
அழுகிய தக்காளிகள் ஊசி குத்தினாலும் ஊரையே நாறடிப்பவை.
ஒப்பனைகள் கலைத்து அழுகிய முகம் காட்டி அசிங்கமாய் நிற்பது தெரிகிறதா?
என்றோ தெரிந்து கொண்டவர்கள் பாக்கியவான்கள்.
இப்போது தான் தெரிந்ததா? அதிர்ச்சியாக இருக்கிறதா? பாவம் நீங்கள்!
இன்னும் தெரியவில்லையா? சீ!..புழுக்களே எட்டிப் போங்கள்!!!