மகள் மொழி
தாய்மொழியை மீண்டும் அரிச்சுவடி முதல் பயில்கிறேன்.
உன் மழலையில் ஒவ்வொரு சொல்லும் புத்தம்புதிதாக...
தூக்குத் தூண்டில்
பசியே இல்லாத மீனைப் பிடிக்க,
மணிக்கணக்காய்த் தூண்டிலிட்டார் - பின்
மீனுக்கு வைத்திருந்த புழுக்களையே
பசி தாங்காமல் தின்று செத்தார்!
வலைச்சரத்தில் எனது இந்தக் கவிதையையும் (கவிதை என்றே குறிப்பிட்டு!) அறிமுகப்படுத்தி இருக்கிறார் பா.ராஜாராம். மகிழ்ச்சியையும் அவருக்கு எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.