Thursday, October 20, 2016

Books

பிள்ளைகளைப் பள்ளியில் விட்டு விட்டு வருகையில் நேரான ழி இருந்தாலும், வெயில் அதிகமில்லாத இளங்காலைப் பொழுதுகளில் அந்த விரிந்து அகன்றநிழற்சாலையைத் தேர்ந்தெடுப்பதே வழக்கம்.
இருமருங்கிலும் மரங்கள் நிறைந்த அச்சாலையில் அதிகபட்ச வாகனப் போக்குவரத்து இளம்பெண்கள் ஸ்கூட்டி ஓட்டப் பழகுவதாகத் தான் இருக்கும்.

வாகனம் ஓட்டிப் பழகியது முதல், மணமாவதற்கு முன் காதலித்த காலங்கள் வரை பல ஞாபகங்களைக் கொண்டிருந்தாலும், இச்சாலையில் அமர்ந்து புத்தகம் வாசித்தது அழிக்கவியலா நினைவாகிப் போனது.
எட்டாவது வகுப்பில் என்று நினைக்கிறேன். அப்போது பள்ளியிலேயே, வகுப்புகள் முடிந்ததும் பாட்டு வகுப்பு நடக்கும். நானும் என் தோழியும் சேர்ந்திருந்தோம். பாட்டை விட சுவாரசியமானதொரு விஷயத்தை விரைவிலேயே எதிர் நோக்கத் தொடங்கினோம். அது... புத்தகங்கள் திருடுவது!

பள்ளி நூலகத்தில் தான் ஆர்மோனியப்பெட்டி இருக்கும். நூலகம் என்றால் பெரிதாக எதிர்பார்த்து விட வேண்டாம்; என்சைக்ளொபிடியா வகையறா, சிறுவர்களுக்கான நீதிக் கதைகள் நிறைந்த மலிவு விலை வெளியீடுகள், காமிக் புத்தகங்கள் இவ்வளவு தான். பெரும்பாலும் ஆங்கிலப் பாடங்களில் துணைப்பாடங்கள், ஆங்கில இலக்கியங்களின் சுருக்கப்பட்ட பதிப்புகளாகியஅப்ரிட்ஜ்ட்’ (abridged) புத்தகங்களாக இருக்கும். இவை மீது பெரு விருப்பு இருந்தது அப்போது. எளிய மொழியில் ஒரு முழுதான நல்ல நாவல் படித்த திருப்தி கிடைத்து விடும். பிற்பாடு முழுநாவலையும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஜேன் ஆஸ்டன், மார்க் ட்வெயின், சார்லஸ் டிக்கன்ஸ் ஆகியோரின் புகழ்பெற்ற காவியங்களின் சுருக்கங்கள் துணைப்பாட நூல்களாக வெளியிடப்படுவது இன்றும் மரபாக இருக்கிறது. (தமிழில் புகழ் பெற்ற நவீன கால இலக்கியங்களை இது போல் செய்ய முடியுமா?) 

புத்தகங்களை ஆர்மோனியப்பெட்டிக்குள் ஒளித்து எடுத்து வந்து புத்தகப்பைக்குள் வைத்துக் கொண்டு, பாட்டு வகுப்பு முடிந்து வீடு திரும்புகையில், மேற் சொன்ன சாலையோரம், மரத்தடியில் (ஆம், யாராவது வீட்டுக்கு முன்பு தான்) அமர்ந்து தினமும் சில பக்கங்கள் படித்து விட்டு வீட்டுக்கு ஓடுவது வாடிக்கையானது.
அப்படி ஒரு நாள் மும்முரமாகப் படித்துக் கொண்டிருந்த போது, திறந்திருந்த ஒரு வீட்டின் கேட் வழியாகப் பாய்ந்து வந்த நாயொன்று என் காலைப் பதம் பார்த்தது.
நடுங்கி அலறிய தோழியும் நானும் அந்த வீதியெங்கும் ஓட்டம் பிடித்ததை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.

'புத்தகத்தைத் திருடிக்கிட்டு வந்தோம்ல, அதான் இப்படி ஆயிடுச்சு' என்று திருந்தி பிறகு புத்தகங்கள் எடுப்பதை விட்டு விட்டோம்.
நூலகத்திலிருந்து நேரமாகிவிட்டதென்று வேகமாக வீடு திரும்புகையில் சைக்கிளில் பைக் மோதி மண்டையில் அடிபட்டது இன்னொரு சம்பவம்!

  
தீவிரமான ஆழ்ந்த வாசிப்பு பழக்கம் இருப்பதாக நிச்சயம் சொல்லமுடியாதெனினும் புத்தகங்களுடனான உறவு ஏனோ அதிகம் உணர்வு ரீதியாகவே இருந்திருக்கிறது. காத்திருந்த கணங்களில் கைகளில் இருந்த ஹாரி ஊடலிலிருந்தும், கூட்டம் மிகுந்த பஸ்ஸில் படித்த அகதா கிரிஸ்டி நெரிசலின் எரிச்சலில் இருந்தும் காப்பாற்றி இருக்கின்றனர்நிகழ்காலத்தினின்று தப்பி வேறொரு காலத்துக்கும் இடத்துக்கும் கண்கட்டி அழைத்துச் செல்லும் மாயக் கம்பளங்களாகவே புத்தகங்களைப் பார்க்கும் போக்கு இன்னும் மாறவில்லை.
வீட்டுச் சூழலில் இலக்கிய வாசமும் ஓரளவு வாசிக்கும் வழக்கமும் இருந்ததாலும், கையிலெடுத்து பத்து நிமிடங்களுக்குள் கவனத்தைக் கவரும் நூல்களே என் வாசிப்பு அனுபவங்களுக்குள் அடங்கும்.

சின்னஞ்சிறுவர்கள் யோசிதமாய் சூன்யக்காரர்களையும், ந்திரவாதிகளையும் வெற்றி கொள்ளும் தைகள், ஏழை னிதனின் திடீர் அதிர்ஷ்டத்தைப் பார்த்துப் பொறாமை கொண்டு தனக்குத் தானே அழிவைத் தேடிக் கொள்ளும் க்காரன் தைகள், எத்தனுக்கு எத்தன் தைகள், முல்லா தைகள், அசட்டுச் சிறுவன் என்று தூற்றப்பட்ட டைசிச் சிறுவன் ராஜகுமாரியை ப்பது, பீர்பால், தெனாலிராமன், போன்ற விகவி தைகள். இவையெல்லாம் த்து து ரை டித்த தைப் புத்தங்களில் விரும்பி விரும்பிப் டித்தவை.
ஒரே புத்தகத்தை வெவ்வேறு கால இடைவெளியில் வாசிக்கும் போது கலைடோஸ்கோப்பைக் கலைத்துக் கலைத்து வெவ்வேறு பிம்பங்கள் விழுவதற்கொப்பான அனுபவம் கிடைப்பது அலாதியானது. அப்படி மீண்டும் மீண்டும் படித்து வியப்புறும் பட்டியல் நீளமானது!
'நல்ல நூல்கள், கெட்ட நூல்கள் எல்லாம் இல்லை; நன்றாக எழுதப்பட்டவையும் மோசமாக எழுதப்பட்டவையும் தான் இருக்கின்றன' என்பார் ஆஸ்கர் ஒயில்ட். மோசமாக எழுதப்பட்டிருந்தால் ஒரு புத்தகத்தை நாம் படிக்கவே முடியாது. ஆதலால் ஒரு புத்தகததைப் படிப்பது என்பது எப்படியும் நேர விரயம் அல்ல. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பது போல் வாசிக்க வாசிக்க, நமக்குள் ஒரு தெளிவும் தேர்வும் பிறப்பது நிச்சயம்.

எழுத்து பொழுது போக்கு அல்ல தவம் என்பது மேன்மையான எழுத்தாளர்கள் கருத்து. ஆனால் இணையங்களும் ஊடகங்களும் பெருகி விட்ட காலகட்டத்தில் சரளமாக எழுதுபவர்கள் பெருகி விட்டனர். இது வரவேற்கத்தக்கதெனினும், வாசிப்பைத் தவமாகத் தேர்ந்து செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்பது காலத்தின் கட்டாயங்களில் ஒன்று.
வாசகசாலையின் தொடர்ந்த நிகழ்வுகளும் கூட்டங்களும் தமிழ்ச்சமூகத்தில் செறிவானதொரு வாசிப்புக் கலாசாரத்தை உருவாக்கி வருகிறதென்றால் மிகையாகாது.