சென்னையில் அன்றாடம் வேலைக்கு, கல்லூரிகளுக்கு வெகு தொலைவு பயணிக்க வேண்டி இருக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இந்த ஷேர் ஆட்டோ ஒரு வரம் என்றே சொல்லலாம்.
ஷேர் ஆட்டோ என்றால் என்னவென்று தெரியாத சிலருக்காக ஒரு சின்ன அறிமுகம். சாதாரண ஆட்டோவை விட ஒன்றரை மடங்கு பெரிதாக இருக்கும். ஆனால் முன்று நான்கு மடங்கு அதிக நபர்களை ஏற்றிச்செல்லும் வல்லமை படைத்தது. ஒரு மினி வேன் போல் பின்னால் இரு வரிசைகள் எதிரில் ஒரு சின்ன வரிசை இருக்கும். சிலவற்றில் பின்னால் மட்டும் நான்கு பேர் அமரும் படி மினி ஷேர் ஆட்டோ வாக இருக்கும்.
சாதா ஆட்டோவில் 50 ரூபாய் ஆகும் இடத்துக்கு இதில் 5 ரூபாய் கொடுத்தால் போதும். பேருந்து நிறுத்தங்களில் காலை மற்றும் மாலை அவசர நேரங்களில் கிடைக்கும் ஷேர் ஆட்டோக்களில் (குறிப்பிட்ட இடத்துக்குச் செல்லும்) ஏறி அவரவர் வேண்டிய இடங்களில் இறங்கிக் கொள்ளலாம்.
மாநகரின் எழுதாத விதிப்படி இதிலும் இவ்வளவு பேரைத் தான் ஏற்றலாம் என்ற வரை முறை இல்லை. எப்போதும் டிரைவருக்கு இருபுறமும் இருவர், பின்பு சீட்களில் நெருக்கியடித்து எவ்வளவு பேர் முடியுமோ அவ்வளவு. சில ஆட்டோக்களில் கட்டணம் வசூலிக்க ஒரு சிறுவன் (ஆம் குழந்தைத் தொழிலாளி தான்) இருப்பான்.
அன்று மாலை வழக்கம் போல் நானும் சக பயணி ஒருவரும் பேர்ந்து நிறுத்தத்தில் நின்றிருந்தோம். வெகு நேரம் கழித்து வந்தது ஒரு ஷேர் ஆட்டோ. அதிலிருந்து சிலர் இறங்கவும் நாங்கள் அடித்துப் பிடித்து ஏறினோம். மழை வேறு வரும் போலிருந்தது. ஆட்டோ புறப்பட்ட பின்பு தான் பார்க்கிறேன் பதின்மூன்று பதிநான்கு வயதிருக்கும் அவனுக்கு, ஆட்டோவின் வாசலைப் பிடித்து நின்றபடி வருகிறான். நன்றாகக் கவனியுங்கள் இது பஸ் இல்லை. மேலேயோ பக்கவாட்டிலோ பிடித்துக் கொள்ள கம்பிகள் இல்லை. நான் அதிர்ந்தே போனேன். ஏனென்றால் அவன் எழுந்து கொண்ட இடத்தில் தான் நான் அமர்ந்திருந்தேன். அவன் இறங்கவில்லை. கட்டணம் வசூலிப்பவன் என்று புரிந்தது.
பின்னால் அமர்ந்திருந்த பெண்மணிகளில் சிலர் "மடியில் தான் உக்கார்த்தி வெச்சுக்கணும் இவனை.." என்று கிண்டலடித்தபடி இருந்தார்கள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கொஞ்சம் நகர்ந்து அவனை உட்காரும்படி சொன்னேன் (கீழே தான். சிட்டில் எனக்கே இடமில்லை) அவன் மறுத்து விட்டான். அவன் விழுந்துவிடக் கூடாதே என்று அனைவருமே தவிப்புடன் இருந்தோம். என் அருகில் இருந்த பெண் மட்டும் என் காதில் குனிந்து, "ஏய் கவலைப்படாதே. இதெல்லாம் இவர்களுக்கு ஸ்டைல்! பஸ்ஸில் பார்த்ததில்லை? இடமிருந்தால் கூட உட்காராமல் ஸ்டன்ட் காண்பிப்பார்கள்." ஏனோ எனக்கு முணுக்கென்று கோபம் வந்தது. "அது வேறு இது வேறு" என்று மட்டும் சொல்லிப் பேசாமல் இருந்து விட்டேன்.
என் சிந்தனையை அவன் குரல் த்டை செய்தது. இடம் தரச் சொல்லிக் கேட்கிறானோ என்று நினைத்து "என்னப்பா?" என்றேன் நெகிழ்ந்து. ஒரு அலட்சியப் புன்னகையைச் சிதறவிட்டபடி "உம்? காசெடுங்க" என்று அதட்டினானே பார்க்கவேண்டும்! அப்போது தான் புரிந்தது; தான் விழுந்து விடுவோமோ என்பதை விடக் காசு தராமல் யாரும் இறங்கி விடக் கூடாது என்பதிலேயே அவனுக்கு அதிக கவன்ம் இருந்திருக்கிறது.
Friday, November 28, 2008
Saturday, November 8, 2008
கற்றது சிவில்!
"கற்றது தமிழ்" படம் பார்த்தேன். பரபரப்புக்காகப் பல மிகைப்படுத்தப் பட்ட காட்சிக்ளும் அதிர்ச்சி தரும் சைக்கோத்தனங்களும் இருந்தாலும் சொல்ல வந்த மையக் கருத்து என் இயல்பு நிலையை வெகுவாகத் தொந்தரவு செய்த்து. குறிப்பாக ஐ.டி தொழிலை நம்பித் தான் நாங்களும் ஜீவனம் நடத்துகிறோம் என்பதால். தமிழில் தொடங்கி வரலாறு, புவியியல், அறிவியல், தத்துவம் என்று எந்தப் படிப்பினைப் படித்தவனுக்கும் நம் நாட்டில் வேலை வாய்ப்பில்லை, ஆனால் "பொட்டி" தட்டும் படிப்பினைக் கற்றவர்களுக்கு மட்டும் வசதி மிகுந்த வாய்ப்புக்கள் கொட்டிக் கிடப்பதாக நாயகன் குமுறுவது உண்மையில் சிந்திக்க வேண்டிய ஒன்று.
ஒரு சந்ததியே அயல்நாடுகளுக்கு கூலி வேலை செய்து பிழைக்கும் வண்ணம் இருக்கிறது.
தேசிய பொருளாதாரம், உலகமயமாக்கல் இவை பற்றி எல்லாம் பேச எனக்கு அதிக அறிவும் தெளிவும் போதாது. ஆகையால் அதை விட்டு விடுகிறேன்.
என் சொந்த அனுப்வத்தை விவரிக்கட்டுமா?
நான் 1999 ஆம் ஆண்டு சிவில் எஞ்சினியரிங் பட்டப் படிப்பை முடித்தேன். அப்போதே என்னுடன் படித்த பலர் கணிப்பொறி படிப்பையும் கையோடு முடித்து வேலை பெற்றிருந்தார்கள். நானும் சிலரும் படித்த கட்டடப் பொறியியல் துறையிலேயே வல்லுனர்களாக வேண்டும் என்று விரும்பி அந்தப் பக்கமே போகவில்லை. சிறந்த மதிப்பெண்கள் பெற்று வெகு விரைவில் பெரிய பெரிய கட்டடங்களும் அணைக்கட்டுக்களும் கட்டப் போகும் கனவுகளுடன் கல்லூரி விட்டு வந்த எனக்கு எங்கு சென்றாலும் ஏமாற்றங்கள் தான் மிஞ்சின.
முதல் காரணம், ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் கட்டடத் தொழிலில் பெண்களை வேலையில் எடுக்கத் தயங்கினர். மேலும் உண்மையிலேயே வேலை வாய்ப்புகளும் மிகவும் குறைவாக இருந்தன. சரி, விரிவுரையாளர் வேலைக்கு முயன்றால் புதிதாகத் தொடங்கப்பட்ட கல்லூரிகளில் கட்டடப் பொறியியல் பாடமே இல்லை. பொறியியல் பட்டதாரி என்பதை மறன்து விட்டு "ஏதோ ஒரு வேலை" என்று நாளிதழில் தென்பட்ட விளம்பரங்களைத் தொடர்ந்து எங்கெங்கொ வேலை தேடி அலைந்தேன். எதுவும் பயனளிக்க வில்லை.
இதனிடையில் தரமணி தர்மாம்பாள் பெண்கள் தொழில்நுட்பப் பட்டயப் படிப்புச் சாலையில் ஆறு மாதங்கள் பணி புரிந்தேன். கல்வி கற்பிக்கும் அந்தப்பணி மனதுக்குத் திருப்தியாக இருந்த போதும் சம்பளமே இல்லாமல் எவ்வளவு நாள் பணியாற்றுவது?
ஆம், அங்கு நிரந்தர விரிவுரையாளர்களுக்கு மட்டுமே ஒழுங்காகக் கைநிறையச் சம்பளம் வரும். என்னைப் போல் கான்ட்ராக்ட்டில் பணிபுரிபவர்கள் எங்கள் வேலை நேரங்களைக் குறிப்பெடுத்து மேலதிகாரிகளிடம் கையொப்பம் பெற்று அலுவலகத்தில் ஒப்படைத்து 15 நாட்களுக்குப் பின்பு சம்பளம் வரும். ஆனால் என்ன நேரமோ நான் வேலைக்குச் சேர்ந்து முதல் மாதம் மட்டுமே ஒழுங்கக சம்பளம் வந்தது. பின்னர் "அரசிடமிருந்து நிதி வராத" காரணத்தால் 5 மாதங்களுக்கு சம்பளமே வரவில்லை. மேலும் ஒன்றரை மணி நேரம் நகரப் பேருந்தில் நசுங்கிக் கொண்டு போய் வர வேண்டி இருந்தது. வெறுத்துப் போய் அந்த வேலையை விட்டேன்.(அந்தப் பணம் இன்னொரு ஆறு மாதங்கள் கழித்து மொத்தமாகக் கிடைத்தது என்னவோ உண்மை)
அப்போது தான் இந்த இன்டர்னெட் புரட்சி சூடு பிடிகத் தொடங்கி இருந்த நேரம் நான் வெட்டியாகத் தானே இருந்தேன். வேலை தேட, சும்மா வேலையில் இருந்த என் நண்பர்களுடன் "சட்" செய்ய என்று பிரௌசிங் சென்டருக்குச் செல்வது என் வழக்கமாகி இருந்தது. அப்படி நான் வழக்கமாகச் செல்லும் இடத்தின் முதலாளி என் நண்பராகி இருந்தார். அவர் தான் எனக்கு ஒரு நாள் சொன்னார். "நீ ஏம்மா சிவில் துறையையே பிடிச்சுக் கிட்டு இருக்கே. கம்ப்யுட்டர் படிப்பு ஏதாவது படி. நல்லா வருவே." என்றார். ஏற்கனவே என் மீது அகறை உள பல பேர் சொல்லி இருந்தாலும் அன்று ஒரு வேகம் வந்தது. சைக்கிளை எடுத்து நேரே விட்டேன், அருகில் இருந்த கம்ப்யூட்டர் ட்ரெய்னிங் சென்டருக்கு!
அங்கேயே படித்து, பின்பு அங்கேயே ஒரு வேலையும் பெற்று, பின்பு படிப்படியாக முன்னேறி இப்போது ஓரளவு வாழ்வில் காலூன்றி நிற்க முடிந்தது என்றால் அது நான் பாதை மாறி வந்ததால் தான்.
ஆனால், இப்போது ஒரு கட்டடப் ப்ளானைப் பார்த்தால் என்ன ஏது என்று ஒன்றும் புரியவில்லை. சுத்தமாக எல்லாம் மறந்து விட்டது!

Subscribe to:
Posts (Atom)