Friday, April 15, 2011
சின்னக் குயிலுக்கு...
என் இனிய சின்னக் குயில் சித்ராவுக்கு இந்தக் கொடுமை நிகழ்ந்திருக்கக் கூடாது. எப்போதும் குழந்தை போலச் சிரித்துக் கொண்டிருக்கும் அவரது முகம் இப்போது எப்படி இருக்கும் என்று நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. குழந்தைகளுக்கான பொருட்கள் விற்கும் கடையொன்றில் "பாடகி சித்ரா எங்கள் வாடிக்கையாளர்" என்று சொன்னதால் அந்தப் பக்கம் செல்லும் போதெல்லாம் அவர் வந்திருக்கிறாரா என்று எட்டிப் பார்ப்பேன். 'அவர் குழந்தையை அழைத்துக் கொண்டு வரும் போது எனக்குத் தெரிவியுங்கள்' என்று கூட அந்தக் கடைக்காரரிடம் சொல்லி வைத்திருந்தேன். அந்த அளவுக்குச் சித்ராவைப் பிடிக்கும். இசை என்னும் சஞ்சீவி அவரது துயரை மாற்றட்டும். வேறெதுவும் சொல்ல எனக்குத் தோன்றவில்லை.
Subscribe to:
Posts (Atom)