மழையில் நனைவது: எனக்கு ரொம்ப ஆசை. ஆசை தீர நிறையவே நனைந்திருக்கிறேன். அதுவும் பெருமழையின் போது மழைத்துளிகள் சுள் சுள்ளென்று ஊசி போல் உடலைக் குத்துவதை உணர்ந்திருக்கிறீர்களா? குடையின்றி முற்றாக மழையில் நனையும் சுகத்தை அதை அனுபவித்தால் தான் புரியும். அலுவலுக்குச் செல்லும் அவசரத்தில் அரைகுறையாக நனைவது தான் எரிச்சல்!
சரி, விஷயத்துக்கு வருவோம். கீழே உள்ள படங்களைப் பார்த்து ரசித்த பின் அவற்றுக்குப் பொருத்தமான, உங்கள் நினைவுக்கு சட்டென்று வரும் தமிழ்த் திரைப்படப் பாடல்வரிகளைப் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். மிகவும் சிறந்த பின்னூட்டத்துக்கு ஒரு சர்ப்ரைஸ் பரிசு காத்திருக்கிறது!
Ok... ஸ்டார்ட் ம்யூஸிக்!
(பி.கு: கவிஞர்கள் கவிதை கூடச் சொல்லலாம். ஆனால் அவை போட்டியில் சேர்த்துக் கொள்ளப் பட மாட்டா!)




