குடிப்பதும் அரைகுறை ஆடைகளுடன் இரவு விடுதிகளில் நடனமாடுவதும் தான் நாகரிகமென்றும் இது தான் பெண் விடுதலை என்றும் நம்பி, பெண்களுக்கான தடைகள் எல்லாவற்றையும் மொத்தமாக வென்று விட்டதாக எண்ணி இறுமாந்திருந்த பெண்களை நினைத்தால் வேறு என்ன நினைப்பது?
அது கலாசாரப் பேரழிவு என்றோ பாரம்பரியமாகப் பெண்களுக்குரிய லட்சணங்களை இவர்கள் துறந்து விட்டார்கள் என்றோ வருந்த வில்லை. எந்த நாட்டில் நாம் இருக்கிறோம், பெண்கள் பற்றிய பார்வை இங்கு எப்படி இருக்கிறது? பில்கிஸ் பானோவுக்கும், ப்ரியங்கா போட்மாங்கேவுக்கும், ஸ்மாலின் ஜெனிட்டாவுக்கும் இன்னும் நூற்றுக்கணக்கான இளம் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் நாள் தோறும்

செருப்பால் அடிக்கத் தகுந்த அந்த அமைப்பைப் பற்றி நாம் பேசக்கூட வேண்டாம். அவர்களை சட்டம் பார்த்துக் கொள்ளும். அவர்கள் எதிர்பார்ப்பது விளம்பரம் தான். அதை இந்தச் சிறு வலைப்பூவின் மூலம் கூடக் கொடுக்க நான் விரும்பவில்லை. ஆனால் அவர்களின் ந்டத்தையை அவ்வளவு சாமன்யமாக புறந்தள்ளி விட முடியாது. இப்படிப்பட்ட அத்துமீறல்களால் இரு அநியாயங்கள் நடக்க வாய்ப்புண்டு: நியாயமான சுதந்திரத்தைக் கூடப் பெறப் போராடும் பெண்கள் மேலும் கட்டுப்பாட்டுக்கு உள்ளாக்கப்படுவார்கள். பாதிக்கப்பட்ட அந்த வகைப் பெண்கள் (க்ளப் கலாசார வகை) தங்களுக்குக் கிடைத்த அநுதாபங்களை வைத்துத் தங்கள் நடத்தைக்கு நியாயம் தேடப் பார்ப்பார்கள்.