ஒரே ஒரு முறை செய்திருக்கிறேன். ஏதோ ஒரு சேவை நிறுவனம் (ஸாய் ஸ்ம்ருதி என்று நினைக்கிறேன், நினைவில்லை) டி. நகரில் ஒரு பள்ளியில் நடத்துவதாக நாளிதழில் விளம்பரம் வந்திருந்தது.
சனிக்கிழமையாக இருந்ததாலும், அப்போது வேறு கமிட்மெண்ட்ஸ் இல்லாததாலும் ஆர்வத்துடன் சென்றேன்.
ஒரு கூடம் நிறைய மாணவர்கள். பல்வேறு கல்லூரிகள், துறைகளில் படிப்பவர்கள். அங்கங்கு சிலர் புத்தகத்தை வைத்துக் கொண்டு ஒருவருக்கு ஒருவராகவோ ஒரு குழுவுக்கு ஒருவராகவோ வாசித்துக் கொண்டிருந்தனர்.
நிர்வாகி ஒருவர் வந்து முகமன் கூறி என்னை அழைத்துச் சென்றார். இளங்கலை தமிழ் பயிலும் மூன்று மாணவிகளுக்கு வாசிக்கும் படி சொன்னார். புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கினேன். முதலில் சற்றுத் தயக்கமாக இருந்தது. ”திரும்பத் திரும்ப வாசிக்க வேண்டுமா” என்று கேட்டேன். அவர்களோ, “நீங்க பாட்டுக்குப் படிங்க அக்கா; வேணும்னா நாங்க சொல்றோம்.” என்றனர். மேலும் அவர்கள் ஏற்கனவே படித்தது தான் என்றும் தேர்வுக்கு முன் மறுவாசிப்பு செய்வதாகவும் சொன்னார்கள்.
இரண்டரை மணி நேரம் படித்திருப்பேன். அதற்குள் என்னிடம் மிகவும் நெருங்கி விட்டனர். நான் தெளிவாகவும், அவர்களுக்கு வேண்டியது போலவும் வாசித்ததாகச் சொன்னார்கள் . அவர்களின் அந்த வார்த்தைகள் எனக்கு அதுவரை அனுபவித்தறியா மனநிறைவைத் தந்தது. பள்ளி நாட்களில் பேச்சுப் போட்டிகளில் நான் தவற விட்ட பரிசுகள் எல்லாம் ஒன்றாய்க் கிடைத்தது போல் இருந்தது.
வீட்டுக்குத் திரும்பிப் போக எனக்குச் சுலபமான வழியும் கூடச் சொன்னார்கள்.
அடிக்கடி வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் அதற்குப் பின் ஏனோ அழைப்பு வந்தும் செல்ல முடியவில்லை. அந்தச் சிறுமிகளின் நட்பையும் தவறவிட்டு விட்டேன்.
பாடப்புத்தகங்கள் என்றில்லை, நாம் படித்து மகிழும் எத்தனை புத்தகங்கள் பார்வையற்றோருக்கு வாய்க்கும்? ப்ரெயிலில் மிக முக்கியமான புத்தகங்கள் வருவதே அரிது தான். புத்தகம் வாசிப்பு என்பதே அகக்கண்களுக்காகத் தானே? அது இருக்கும் யாருக்குமே அந்த அனுபவம் மறுக்கப் படக்கூடாதல்லவா?
அது மட்டுமல்ல நாம் ரசித்த புத்தகத்தைப் பிறரும் ரசிக்க வேண்டும் என்று ஆசைப்படும் நம் மனதுக்கும் இது நிறைவாக இருக்குமே?
ஏற்கனவே செய்து கொண்டிருப்பவர்கள், விருப்பமுள்ளவர்கள் வழிகாட்டினால் தொடரலாம் என்று மிகவும் விரும்புகிறேன்.
21 comments:
மனநிறைவான செயல். பாராட்டுக்கள்
http://scribes-readers.blogspot.com/2007/08/reading-session-for-visually-challenged.html
Shankar
9840085673
pls. check this person if you are looking for option to help
its in chennai t-nagar Psbbss school chennai
there is one person called sasi.kannan who was (hope still is) running marx library and doing this. try to find it. he is one of the best and honest persons doing service
ஊர் பக்கம் வந்த பிறகு இப்படி ஏதாவது உருப்படியாக செய்யனும்.
தங்களின் நல்மனத்திற்கும் பரிவுக்கும் தலைவணங்குகிறேன் தீபா! நல்ல காரியத்தை துவங்கியிருக்கிறீர்கள்!
வாழ்த்துக்கள்.
என்னிடம் சில முகவரிகள் உண்டு அனுப்புகிறேன் தீபா!
அருமை.வாழ்த்துக்கள் தீபா!
பாராட்டுக்கள்
மனதுக்கு நெருக்கமான, நிறைவான இடுகை..
வாழ்த்துகள் தீபா
எவ்வளவு நல்ல விஷயம் தீபா. சந்தோஷமாயிருக்கிறது.
வாழ்த்துக்கள். தீபா.
//நாம் ரசித்த புத்தகத்தைப் பிறரும் ரசிக்க வேண்டும் என்று ஆசைப்படும் நம் மனதுக்கும் இது நிறைவாக இருக்குமே?//
நிச்சயம்....
நல்ல பதிவு... வாழ்த்துக்கள் தீபா....
கருத்துப் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி.
பாராட்டுக்குரிய செயல் எதையும் நான் செய்யவேவில்லை.
மனநிறைவு அளிக்கும் ஒரு செயலுக்கு உண்டான வழிகாட்டுதலையும், விருப்பமுள்ளவர்களின் துணையையும் பெறவே இவ்விடுகையை எழுதினேன்.
மீண்டும் நன்றி.
அந்த 2.5 மணி நேரத்தை நிறைவாகக் கழித்திருக்கிறீர்கள். அருமையா எழுதியிருக்கீங்க!!
இனிய பாராட்டுகள் தீபா.
மனதுக்கு நிறைவு தரும் செயல்.
சந்தோஷமாக இருந்தது.
இது போன்ற காரியங்களில் இருக்கும் ஆர்வமும், ஈடுபாடும் தொடரமுடியாமல் போவது வருத்தமானது. லௌகீக வாழ்வின் பணிகள் நம்மை அழுத்திவிடுகின்றன.
கோவிலுக்குச் செல்கிற, டி.வி பார்க்கிற நேரங்களில் நாம் இது போன்ற செயல்களுக்கு நேரத்தை ஒதுக்கலாமே!
http://www.parisalkaaran.com/2009/11/041109.html
http://scribes-readers.blogspot.com/2007/08/reading-session-for-visually-challenged.html
இங்கே விபரமாக கொடுத்துள்ளார்கள். இன்றும் இது வாரவாரம் நடந்து கொண்டு தான் இருக்கு தீபா. நான் நாலைந்து வாரங்கள் தொடர்ந்து சென்றேன் என் பெண்ணையும் அழைத்துக் கொண்டு. பல அலுவல்களில் தொடர முடியவில்லை.
மீண்டும் இந்த ஞாயிறு போவேன் எம்பொண்ணையும் கூட்டி கொண்டுதான்.. முடிந்தால் சந்திக்கலாம். :)
வித்யா
பார்வை இழந்தவர்களுக்காக பரிட்சையும் எழுதலாம் தீபா. சென்னை லயோலா கல்லூரியில் அதற்கான ஏற்பாடுகள் செய்கிறார்கள். நாம் ஒருமுறை பெயர் கொடுத்தால் போதும், அடுத்த முறை தேவைப்பட்டால் அவர்களே நம்மை தொடர்பு கொள்வார்கள். எஸ்.கே. அனுப்பிய லின்க்கும் அவ்வாறனதே.
கடந்த புத்தககண்காட்சியில் நான் பார்த்து வியந்த ஒரு விஷயம்.
நான்கு பார்வையற்றோர்கள் அவ்வளவு கூட்டத்திலும் ஒருவர் பின் ஒருவராக வந்தார்கள். தமிழினி பதிப்பகத்தில் ஒரு புத்தகம் வாங்கினார்கள். புத்தகத்தின் பெயர் நினைவில்லை. அவர் கையால் புத்தகத்தை தடவிப்பார்த்தார். பில் போடும்முன் தான் எடுக்க வந்த புத்தகம்தானா என்று அங்கிருந்த பெண்ணிடம் உறுதிப்படுத்தினார். பணம் செலுத்திவிட்டு மூவரும் அதே போல் வரிசையில் சென்றுவிட்டார்கள்.
அவர்கள் விட்டு போனபிறகும் ரொம்ப நேரம் அந்தக்காட்சி மனதை விட்டு அகலவில்லை. எல்லாவற்றையும் இவர்களுக்கு யார் அந்த புத்தகத்தை படிப்பார்கள் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. உங்களின் இந்தப்பதிவு அதை ஞாபகப்படுத்தியது.
நல்ல சிந்தனை, மிகவும் நல்ல பதிவு.
நல்ல பகிர்வு தீபா.
நல்ல நோக்கம் - நல்ல உதவி - வாய்ப்பை தேடிப்போக இயலவில்லை - வாய்ப்பு கிடைக்கையில் அவசியம் கடமையாற்றுவேன். - நன்றி.
Post a Comment