Monday, September 13, 2010

பாதுகாப்பாகச் Chat செய்ய வழிமுறைகள்

இணையம், பதிவுலகம், குழுமங்கள் என்பதெல்லாம் எந்த அளவுக்கு மனிதர்களை இணைக்கின்றனவோ அதே அளவு பிரச்னைகளையும் கொண்டு வருகின்றன‌. முகம் தெரியாத யாருடனோ chat செய்யும் போது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்...

இல்லை இல்லை... ஆண்களுக்குத் தான் பிரச்னை அதிகமாக இருக்கிறது. அவர்களுக்காகப் போராட யாருமே வருவதில்லை.

:((

பதிவுலக ஆண்களின் பரிதாபநிலை கண்டு ஒரு பெண்ணாக வெட்கப்படுகிறேன் என்று எழுதினால் என்னை பெண்ணாதிக்கவாதிகள் குதறிவிடுவார்கள் என்று பயப்பட்டு ஒன்றும் சொல்லாமல் போகிறேன்...

சரி, விஷய‌த்துக்கு வருவோம்...பாதுகாப்பாகச் chat செய்ய என்ன வழி?
10...................

9.................

8.........

7........

6......

5. கணினியை ஆஃப் செய்யுங்கள்.

4. தொலை பேசியில் மறந்து போன பழைய நண்பர்கள் எண் இருக்கும். தேடி எடுத்து மனம்விட்டுப் பேசுங்கள்.

3. மூலைத் தெருவில் பெட்டிக் கடை வைத்திருப்பவர் போரடித்துக் கொண்டிருப்பார். அவரிடம் சென்று chat செய்யுங்கள்.

2. அக்கம் பக்கத்து வீடுகளுக்குச் செல்லுங்கள்; முடிந்தால் குழந்தைகளை அழைத்துக் கொண்டு.

1. அவர்கள் வீட்டிலிருப்பவர்களுடன் அளவளாவுங்கள். குழந்தைகளை விளையாட விடுங்கள்.

இவைதான் எனக்குத் தெரிந்த சில‌ பாதுகாப்பான chat வழி முறைகள். இன்னும் இருந்தால் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

30 comments:

சந்தனமுல்லை said...

:-)

இல்லன்னா, தெரு மூலையில் இருக்கும் சாட் கடையில் சாட் வாங்கி சாப்பிடவும்...ஹிஹி....

நட்புடன் ஜமால் said...

நல்ல வழிமுறை...

சந்தனமுல்லை said...

நான் கூட சமையல் குறிப்போன்னு பயந்துட்டேன்....எனக்கு தெரிஞ்ச ஒரே சாட் பேல்பூரி...அடுப்பே பத்த வைக்க வேண்டாம்...எல்லாத்தையும் வாங்கி கலந்தா ரெடி...எப்பூடி? பாதுகாப்பான வழிமுறை இல்லே...:))

நியோ said...

தோழர் .. தயவு செய்து மொக்கை என்ற லேபிளை எடுத்து விடுங்கள் ... நீங்கள் பகிர்ந்தது அனைத்தும் உண்மை தானே ... இணைய நட்பின் எல்லைகள் குறித்த புரிதலின்றி செயல்படும் தோழர்கள் எல்லா வயதினரிடையேயும் உள்ளார்கள் என்பது எனக்கு அன்று வியப்பாக இருந்தது !

Deepa said...

முல்லை!

நீ சோம்பேறின்னு தெரியும்..இந்த அளவுக்குன்னு இப்போ தான் தெரியும்.

நன்றி ஜமால்!

நன்றி நியோ!

You are right. ஆனா நான் மெய்யாலுமே மொக்கை தான் போட்ருக்கேன். :)

சேட்டைக்காரன் said...

சே, ஆண்களுக்காக இவ்வளவு கரிசனமா? சும்மா சொல்லக் கூடாதுங்க! இதை விட சுலபமான வழியிருக்குது! Chat-லே log in பண்ணாமலே இருந்திட்டா,தொல்லையிருக்காது. என்ன, நிறைய பேருக்குப் பொழுது போகாது பாஆஆஅவம்! :-)

அம்பிகா said...

\\பதிவுலக ஆண்களின் பரிதாபநிலை கண்டு ஒரு பெண்ணாக வெட்கப்படுகிறேன் என்று எழுதினால் என்னை பெண்ணாதிக்கவாதிகள் குதறிவிடுவார்கள் என்று பயப்பட்டு ஒன்றும் சொல்லாமல் போகிறேன்...
:-)))

Anonymous said...

:)) சரிங்க ஆபிசர், அப்படியே ஃபாலோ பண்ரேன் :)

VELU.G said...

பரவாயில்லைங்க இது ரொம்ப ஈசியா இருக்குங்க

இனிமே நானும் இதையே பாலோ பன்றேங்க

ஹ ஹ ஹ ஹ ஹ ஹா

VELU.G said...

பரவாயில்லைங்க இது ரொம்ப ஈசியா இருக்குங்க

இனிமே நானும் இதையே பாலோ பன்றேங்க

ஹ ஹ ஹ ஹ ஹ ஹா

Gokul Rajesh said...

phone அதிகம் பேசுனா brain cancer வரும். தெரியாதா? :)

Deepa said...

சேட்டைக்காரன், அம்பிகா அக்கா, விஜி, வேலு!
ரொம்ப நன்றீ!

கோகுல்!
தனக்கு இல்லாட்டியும் அடுத்தவங்களுக்காகக் கவலைப் படறியே, ஐ லைக் இட்!

Dr.Rudhran said...

good one

கையேடு said...

இது நல்லாருக்கே..

//தொலை பேசியில் மறந்து போன பழைய நண்பர்கள் எண் இருக்கும். தேடி எடுத்து மனம்விட்டுப் பேசுங்கள்.//

அப்படியே இன்னும் கொஞ்சம் தேடினால் ஏதாவது ஆட்டோகிராஃப் புத்தகத்தில் முகவரி மட்டும் இருக்கும். கடிதம் கூட எழுதலாம்.

க.பாலாசி said...

அந்த கார்டூன் மாதிரி செஞ்சிக்கலாம் போலருக்கு... அவ்வ்வ்வ்வ்.....

ponraj said...

//தொலை பேசியில் மறந்து போன பழைய நண்பர்கள் எண் இருக்கும். தேடி எடுத்து மனம்விட்டுப் பேசுங்கள்.//

தேடிக்கொண்டே இருக்கிறேன் கிடைக்கவில்லை!!!!

நல்ல idea!!!

வெறும்பய said...

ஆஹா... அருமை... மிக மிக பயனுள்ள பதிவு...

நல்ல நேரத்தில் ஒரு பதிவை போட்டு எங்கள் பிரச்னையை தீர்த்து வைத்திருகிறீர்கள்... நன்றி...

ரிஷபன் said...

சரியான கருத்துதான்

Madumitha said...

குழந்தைகளை விளையாட
விடுங்கள்.
இது எனக்கு பிடித்திருக்கிறது.

Sethu said...

எப்பிடியெல்லாம் பதிவு, பின்னூட்டம்னு போட்டு, எல்லோரையும் கிளப்பி ஒருத்தருக்கு ஒருத்தர் அடிச்சிகிரத வேடிக்கை பார்ப்பதில் அப்பா என்ன சந்தோசம் நம்ம மக்களுக்கு. என்னையும் சேர்த்து தான். ஒருத்தரும் ஒருத்தரையும் விடமாட்டங்க. இப்பிடின்னா அப்பிடி, அப்படினா இப்பிடி.இதுக்கெல்லாம் மக்களுக்கு நல்லாவே டைம் இருக்குது.

விளையாடும் வார்த்தைகள ஆளுக்கு அல்லது குரூப் கு ஒரு வார்த்தைய குத்தகை எடுத்து வச்சிருக்காங்க. ஏதாவது ஒரு குரூப் இன்னொரு குரூப் வார்த்தைய use பண்ணிட்டால் அவங்க தீர்தாங்க. நீ நல்லவனா கெட்டவனான்னு ஆரம்பிச்சிடுவாங்க. இல்ல ஆணாதிக்கமா பெண்ணாதிக்கமா, இது மாதிரி 100 இருக்கு போல.நண்பர் காமராஜ் மாதிரி வெள்ளந்தியா ஒருத்தரையும் புண்படுத்தாம ஒரு மனித நேயத்தை ஏற்படுத்தக்கூடிய பதிவு, பின்னூட்டம்னு போடறவங்க ரொம்ப ரொம்ப rare. நல்லா தான் மாதவராஜ் இத பதிவரசியல்னு கண்டுபிடிச்சிருக்கார். எல்லோரும் எதாவது ஒரு வகையில் இந்த பதிவு அரசியலுக்கு இரை அல்லது இலக்கு தான்.

Not blaming anyone individually. Hats off to everyone. Enjoy the life.

Jeeves said...

பிரச்சினை நேரத்துல இது மாதிரி நீர்த்துப் போகிற பதிவா போடுறீங்களே... அட்லீஸ்ட் ஜூனியர் அரசவைக் கோமாளி பட்டமாவது கிடைக்குமா உங்களுக்கு :)) ஜஸ்ட் கிட்டிங்.

enjoyed the post.

Sriakila said...

ஆஹா!

பதிவுலகில் நமக்கு ரொம்ப முக்கியமான டிப்ஸ் தான்னு வேகவேகமா படிக்க ஆரம்பிச்சேன்.

ப‌டிச்ச‌ பிற‌கு தான் தெரிஞ்சது, இது தின‌ச‌ரி வாழ்க்கைக்கு ரொம்ப‌ முக்கிய‌மான‌ டிப்ஸ்‍ன்னு.

ஆரம்பத்தில் எனக்கு பல்பு கிடைச்சாலும் இந்த‌ப் ப‌திவை நான் ரொம்ப‌ ர‌சிச்சேன் தீபா.

ராம்ஜி_யாஹூ said...

அடுத்த வீட்டிற்க்கு சாட் செய்ய போனால் ஒரே டாபிக், மாமியார், நாத்தனார் தொந்தரவு பற்றியே. அல்லது பங்கு வர்த்தகம் பற்றிய பேச்சு

அந்த தொந்தரவில் இருந்து விடுதலை பெறவே இங்கே வந்து சினிமா விமர்சனனம், என் எழுத்து அந்த பத்திரிக்கையில் வந்தது இந்தப் பத்திரிக்கையில் வந்தது ...

ஆயில்யன் said...

//Deepa said...

முல்லை!

நீ சோம்பேறின்னு தெரியும்..இந்த அளவுக்குன்னு இப்போ தான் தெரியும். //

சூப்பரேய்ய்ய்ய் :)))

சௌந்தர் said...

ரொம்ப நல்ல வழி சொன்னிங்க

சே.குமார் said...

நல்ல வழிமுறை...

Gokul Rajesh said...

thanks :|

ஜெயந்தி said...

நம்ம வீட்டிலயோ பக்கத்து வீட்டுலயோ பெரியவங்க இருந்தா அவங்களோட சாட் பண்ணலாம்.

இரா கோபி said...

இந்த மாதிரியும் சட பண்ணலாம். ஒரு பிரச்சனையும் வராது.

http://ramamoorthygopi.blogspot.com/2010/09/blog-post_14.html

Chitra said...

1 to 4 tips.....practical and social benefits தருமே! நன்றி.