செய்தித்தாள்களில் சில விஷயங்கள் கண்ணில் படும் போது அடுத்தநாள் பேப்பரைக் கையிலெடுக்கவே நடுக்கமாக இருக்கிறது.. சே... மனிதர்களில் சிலர் ஏன் இப்படி மிருகங்களை விட.. (வேண்டாம் மிருகங்கள் தங்கள் இயல்பு மீறி எதுவுமே செய்வதில்லை) பிசாசுகளைப் போல் நடந்து கொள்கிறார்கள். குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளைப் படிக்கும் போதெல்லாம் மூச்சடைத்துப் போகிறது. குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு.
”கஜினி” படத்தில் அசின் சொல்வது போல் ’பெண்கள் எத்தனை பேருக்குத் தான் பயந்து ஓடுவது?’ அதில் இன்னொன்றும் சேர்க்க வேண்டும் கள்ளமில்லாக் குழந்தைப் பருவத்தில் கூட அவர்கள் நிம்மதியாக இருக்க இந்த சமுகம் பாதுகாப்பானதாக இல்லையே. இப்படிப் பட்டவர்களுக்கு எந்த வகையில் குரூரமானத் தண்டனை கொடுத்தாலும் தகும்.
சரி, இந்தப் பொருமல்களையும் சற்றே ஒதுக்கி வைத்து விட்டு இதைத் தடுக்க நம்மால் என்ன செய்ய முடியும் என்பதைச் சிந்திப்போம்.
பொதுவாக இந்தக் க்ளாஸ், கோச்சிங் இவற்றைக் கொஞ்சம் கம்மி பண்ணி விட்டு கூடுமானவரை குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஓடியாடி விளையாட விடுங்கள். இடமில்லை என்ற காரணம் வேண்டாம். நிஜம்மா சொல்லுங்க, நாலு குழந்தைகள் விளையாட உங்கள் வீட்டுக்கு முன் இடமில்லாமலா இருக்கிறது?
நம் குழந்தைகள் எல்லோருமே நாம் பார்த்துப் பெருமைப்படும் விதமாக, நமக்குப் பாடம் கற்றுக் கொடுக்கும் வகையில் அற்புதமான ஒரு சமுதாயத்தை உருவாக்கப் போகிறார்கள். அதற்கு அவர்களுக்கு நம்மாலான சின்ன உதவியைச் செய்வோம். அவர்களின் உலகத்தைத் தள்ளியிருந்து ரசிப்போம். அவர்கள் கனவுக்குள் மூக்கை நுழைக்காமல்.
”கஜினி” படத்தில் அசின் சொல்வது போல் ’பெண்கள் எத்தனை பேருக்குத் தான் பயந்து ஓடுவது?’ அதில் இன்னொன்றும் சேர்க்க வேண்டும் கள்ளமில்லாக் குழந்தைப் பருவத்தில் கூட அவர்கள் நிம்மதியாக இருக்க இந்த சமுகம் பாதுகாப்பானதாக இல்லையே. இப்படிப் பட்டவர்களுக்கு எந்த வகையில் குரூரமானத் தண்டனை கொடுத்தாலும் தகும்.
சரி, இந்தப் பொருமல்களையும் சற்றே ஒதுக்கி வைத்து விட்டு இதைத் தடுக்க நம்மால் என்ன செய்ய முடியும் என்பதைச் சிந்திப்போம்.
அதற்கு முன்: எனக்குத் தெரிந்ததை மட்டுமே இங்கே சொல்லி இருக்கிறேன். இதைப் பற்றி இன்னும் அதிகம் தெரிந்தவர்கள், விஷயமுள்ளவர்கள் தயவு செய்து அவர்கள் கருத்தையும் சொல்லி உதவ பணிவன்புடன் வேண்டுகிறேன்.
முதலாவதாக, குழந்தைகளுக்கு குட் டச் பேட் டச் சொல்லிக் கொடுப்போம். ஆண் பெண் இரு பால் குழந்தைகளுக்கும்.
இதைக் குழந்தை ஸ்கூலுக்குப் போக ஆரம்பிக்கும் வயதிலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும். குழந்தையின் உடலில் கைகள், கால்கள், முகம் போன்றவற்றைத் தொட்டால் “குட் டச்” என்றும் வேண்டாத இடங்களைத் தொட்டுக் காண்பித்து அவை “பேட் டச்” என்றும் சொல்லிக் கொடுக்க வேண்டும். பள்ளிக்குப் போகும் குழந்தையிடம் யாராவது பேட் டச் செய்தார்களா என்று அவ்வப்போது விசாரிக்க வேண்டும். குழந்தை சொல்வதை வைத்து அவர்களைத் தனியாகக் கண்காணித்துத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்ற பெற்றோரிடமும் இதைப் பற்றித் தயக்கமில்லாமல் பேசுவது நல்லது. பள்ளிகளிலும் இதைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்களா என்று கவனிக்க வேண்டும்.
இதைக் குழந்தை ஸ்கூலுக்குப் போக ஆரம்பிக்கும் வயதிலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும். குழந்தையின் உடலில் கைகள், கால்கள், முகம் போன்றவற்றைத் தொட்டால் “குட் டச்” என்றும் வேண்டாத இடங்களைத் தொட்டுக் காண்பித்து அவை “பேட் டச்” என்றும் சொல்லிக் கொடுக்க வேண்டும். பள்ளிக்குப் போகும் குழந்தையிடம் யாராவது பேட் டச் செய்தார்களா என்று அவ்வப்போது விசாரிக்க வேண்டும். குழந்தை சொல்வதை வைத்து அவர்களைத் தனியாகக் கண்காணித்துத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்ற பெற்றோரிடமும் இதைப் பற்றித் தயக்கமில்லாமல் பேசுவது நல்லது. பள்ளிகளிலும் இதைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்களா என்று கவனிக்க வேண்டும்.
தேவை இல்லாமல் கலவரப்படுத்துவதாக எண்ண வேண்டாம். நானும் ஒரு பெண் குழந்தைக்குத் தாய். அறியா வயதில் அவர்கள் சந்திக்கும் எந்த ஒரு அதிர்ச்சியுமே ஆழமான பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும். அதற்காக் நாம் எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும் அது தகும் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.
பாலியல் வக்கிரம் கொண்டவர்கள், குழந்தைகளைத் துன்புறுத்தும் மனவிகாரம் படைத்தவர்கள் இவர்கள் எல்லாம் தனியாகக் கோரப்பல் முளைத்து பேய் பிசாசாக இருப்பதில்லை. சாதாரணமாக ஏன் படு உயர்வான தோற்றம் கொண்டவர்களாகக் கூட இருக்க வாய்ப்புண்டு. அதற்காக நாம் கண்டவர்களை எல்லாம் சந்தேகக் கண் கொண்டு பார்க்க முடியுமா? நம் குழந்தைகளுக்கு நாம் சரியான வழியில் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொடுத்து விட்டால் ரொம்ப நல்லது.
அடுத்ததாக, நம் எல்லோருக்கும் குழந்தைகளைப் பற்றி ஆயிரம் கனவுகள் உண்டு. பிரபல டென்னிஸ் வீராங்கனை ஆக்க் வேண்டும் என்பது முதல், ராக்கெட் விஞ்ஞானி ஆக்கிப் பார்க்க வேண்டும் என்பது வரை.ரொம்ப இல்லாவிட்டாலும் நாம் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டு முடியாமல் போன, அல்லது நம்மைப் போலவே என்று பாட்டு, டான்ஸ், ட்ராயிங் என்று ஏதாவது க்ளாஸ் அனுப்பிக் கொண்டே இருப்போம்.
அப்படி குழந்தை ஒரு நாளில் எத்தனை மணி நேரம் நம் கண்ணை விட்டு அகன்று இருக்கிறது. அந்த நேரத்தில் அவர்களைச் சந்திப்பது யார் யார் என்பதில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.
பொதுவாக இந்தக் க்ளாஸ், கோச்சிங் இவற்றைக் கொஞ்சம் கம்மி பண்ணி விட்டு கூடுமானவரை குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஓடியாடி விளையாட விடுங்கள். இடமில்லை என்ற காரணம் வேண்டாம். நிஜம்மா சொல்லுங்க, நாலு குழந்தைகள் விளையாட உங்கள் வீட்டுக்கு முன் இடமில்லாமலா இருக்கிறது?
நம் குழந்தைகள் எல்லோருமே நாம் பார்த்துப் பெருமைப்படும் விதமாக, நமக்குப் பாடம் கற்றுக் கொடுக்கும் வகையில் அற்புதமான ஒரு சமுதாயத்தை உருவாக்கப் போகிறார்கள். அதற்கு அவர்களுக்கு நம்மாலான சின்ன உதவியைச் செய்வோம். அவர்களின் உலகத்தைத் தள்ளியிருந்து ரசிப்போம். அவர்கள் கனவுக்குள் மூக்கை நுழைக்காமல்.
(குட் டச், பேட் டச் என்ற இந்த யுக்தி எப்போதோ ஒரு நாளிதழில் மருத்துவர் பக்கத்தில் படித்த்து.)
54 comments:
டச்சிங்கான பதிவு. நமது கவனமும், கண்காணிப்பும் கூட இயல்பா, விலகி நிற்பதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் குழந்தைகளுக்கு நாமே ஆர்வமூட்டுபவர்களாக மாறிவிடக்கூடிய ஆபத்துக்கள் உண்டு. குழந்தைகளைப் போல சுதந்திரமாக சிந்திப்பவர்களும், சஞ்சரிப்பவர்களும் யாரும் இல்லை. அதைத் தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொள்ளவும் வேண்டும்..
இதுகுறித்து, பதிவு இறுதியில் கோடிட்டுக் காண்பித்தாலும், இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம் என நினைக்கிறேன்.
நல்ல பதிவு. யோசிக்க வேண்டும்.
நம் குழந்தைகள் எல்லோருமே நாம் பார்த்துப் பெருமைப்படும் விதமாக, நமக்குப் பாடம் கற்றுக் கொடுக்கும் வகையில் அற்புதமான ஒரு சமுதாயத்தை உருவாக்கப் போகிறார்கள். அதற்கு அவர்களுக்கு நம்மாலான சின்ன உதவியைச் செய்வோம். அவர்களின் உலகத்தைத் தள்ளியிருந்து ரசிப்போம். அவர்கள் கனவுக்குள் மூக்கை நுழைக்காமல். //
அப்படியே அதிக உரிமை எடுத்துக்கொள்ளாமல் என்பதையும் சேர்த்து கொள்ளுங்கள் நல்ல பதிவு
நன்றி அங்கிள்!
உடனடியாகப் பார்த்து விட்டீர்களே!
//இதுகுறித்து, பதிவு இறுதியில் கோடிட்டுக் காண்பித்தாலும், இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம் என நினைக்கிறேன்.//
நீங்கள் சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும். என் அறிவுக்கும் அனுபவத்துக்கும் என்ன சொல்ல முடியுமோ அவ்வளவு சொன்னால் தான் சரி! :-)
வாங்க JackieSekar!
தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஆமாம் குழந்தைகள் நமது பொறுப்பு தான் உரிமை அல்ல. எடுத்துச் சொன்னதற்கு நன்றி.
//பொதுவாக இந்தக் க்ளாஸ், கோச்சிங் இவற்றைக் கொஞ்சம் கம்மி பண்ணி விட்டு கூடுமானவரை குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஓடியாடி விளையாட விடுங்கள். இடமில்லை என்ற காரணம் வேண்டாம். நிஜம்மா சொல்லுங்க, நாலு குழந்தைகள் விளையாட உங்கள் வீட்டுக்கு முன் இடமில்லாமலா இருக்கிறது? //
உண்மையாக சொன்னீங்க
குழந்தைங்களை முதலில் சுதந்திரமா விளையாட விடனும் புத்தகங்களுக்கிடையில் மயிலிறகை போல் பொத்தி வைக்க கூடாது.
அவர்களின் செயலகளில் நன்செயல்களை உடனே பாராட்டிவிடனும் அதுக்கு சிறு பரிசுகள் கூட குடுக்களாம் நாம் எவ்விசயங்களில் செய்கையில் பாராட்டுகின்றோமொ அதில் அவர்கள் இன்னும் ஆர்வமாக இருப்பார்கள்
ஏதாவது தவறு செய்தால் சட்டென்று எரிந்து விளாமல் அனபாக இதமாதிறில்லாம் செய்யாதம்மான்னு செல்லமா சொன்னா கேட்பாங்கன்னு நினைக்கிரேன்.
நல்ல பதிவு
பெற்றொர்கள் எல்லொரும் இந்த 'குட் டச் பேட் டச்' விசயத்தில் விழிப்படையனும் அதற்கு பத்திரிக்கை புத்தகம் ஊட்டகம்ன்னு பரவலான முயற்சிகள் வேண்டும்
(நம்ம மாதவராஜ் சார் போன்ற கூறிய சிந்தனை உள்ளவர்களும் இது போன்ற பதிவுகள் போடலாம்)
//முதலாவதாக, குழந்தைகளுக்கு குட் டச் பேட் டச் சொல்லிக் கொடுப்போம். ஆண் பெண் இரு பால் குழந்தைகளுக்கும்.
இதைக் குழந்தை ஸ்கூலுக்குப் போக ஆரம்பிக்கும் வயதிலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும்.//
இப்படியெல்லாம் சொல்லி கொடுத்து கவனிப்போடு இருக்கவேண்டும் என்ற நிலையில் இருக்க்கின்றோம்.. வெட்கபடவேண்டிய விடயம்... ஏன் மனிதர்களுக்கு புத்தி வருவதில்லை (இதில் ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லை) பெண் குழந்தைகளுக்கு பெண்களால் ஆபத்து இல்லை என்ற எண்ணங்களும் வேண்டாம்.....
\\வேண்டாம் மிருகங்கள் தங்கள் இயல்பு மீறி எதுவுமே செய்வதில்லை\\
இது நான் அதிகம் சொல்லும் விடயம்
ஒரு அருமையான பதிவு.
நல்ல கருத்துங்க.
அவசியம் கற்று கொடுக்க வேண்டும்
குழந்தைகளுக்கு
ஆண் குழந்தைக்கும் தான்.
சரி நல்ல ஒரு கரு கிடைத்துள்ளது
எனக்கு தெரிந்த விடயங்களை எழுதுகிறேன்.
nalla pathivu
ரைட் டச்...
நம் குழந்தைகள் எல்லோருமே நாம் பார்த்துப் பெருமைப்படும் விதமாக, நமக்குப் பாடம் கற்றுக் கொடுக்கும் வகையில் அற்புதமான ஒரு சமுதாயத்தை உருவாக்கப் போகிறார்கள். ///
யோசிக்க வேண்டும்.
நல்ல கருத்து....அருமையான பதிவு.
good post. write more on it.
Nice post... Very much needed for kids from 8 upto Age 15. Above that, talk should do, particularly girls... we are very careful with my kids.. how their teachers at shcool (male) behave etc.
Also the regular visitor relatives to your home (males) should be made to stay away from kids, after few minutes.
A relative who is a D.ch. doctor told me.. if the kids can keep their privates clean (amd well taught), they wouldnt touch it on irritation. That is the starting point on exploration.
Teaching is important. Good Touch.
நன்றி முத்துராமலிங்கம்!
நல்ல கருத்துக்கள் சொல்லி இருக்கிறீர்கள்.
ஆமாம் நானும் திரு. மாதவராஜின் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
ஞானசேகரன்!
//இப்படியெல்லாம் சொல்லி கொடுத்து கவனிப்போடு இருக்கவேண்டும் என்ற நிலையில் இருக்க்கின்றோம்.. வெட்கபடவேண்டிய விடயம்... //
சத்தியமாக. ஆனால் என்ன செய்வது? உயிர்கொல்லி நோய்களிடமிருந்து காக்கத் தடுப்பு மருந்து கொடுப்பதைப் போல சமூகத்தில் பரவியுள்ள இம்மாதிரி நோய்களிலிருந்து காக்க இதைப் போன்ற தடுப்பு முறைகள் அவசியமாகிறதே.
அபி அப்பா!
டொன் லீ!
ராம் CM!
gayathri!
Ramesh!
Dr. Rudhran Sir!
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
நட்புடன் ஜமால்!
உங்கள் பதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன்.
தீபா நல்ல பதிவு.
நன்றி!!!
நல்ல விசயங்கள் ஏற்கெனவே தெரிந்தவையாயினும் அனைவருக்கும் எடுத்துக்கூறுவது அவசியம்!!!
தேவா..
ஆங்கில வார்த்தைகளை அளவுக்கு மேல் கலக்காமல் எழுதியிருக்கலாம்.
நல்ல கருத்துள்ள பதிவு!
நல்ல பதிவு தீபா! இன்றைய பல பெற்றோர்களுக்கு இதைக்குறித்த விழிப்புணர்வு இருப்பதும் நல்ல விஷயம்! அதுவும் யாருக்குள்ளே எந்தஹ் சைக்கோ இருப்பாங்கன்னு தெரியாத நிலையில்...
பாலியல் வக்கிரம் கொண்டவர்கள், குழந்தைகளைத் துன்புறுத்தும் மனவிகாரம் படைத்தவர்கள் இவர்கள் எல்லாம் தனியாகக் கோரப்பல் முளைத்து பேய் பிசாசாக இருப்பதில்லை. சாதாரணமாக ஏன் படு உயர்வான தோற்றம் கொண்டவர்களாகக் கூட இருக்க வாய்ப்புண்டு.
100% true ma
nalla pathivu
Kavitha!
தேவன்மயம்!
Joe!
சந்தனமுல்லை!
Sakthi!
மிக்க நன்றி.
Joe!
ஆங்கிலக் கலப்பு அதிகமாக இருப்பதைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. திருத்திக் கொள்கிறேன்.
i have some comments to share but as a new one to this networld i don't know how to give comment in tamil can any one please guide me
அருமையான பதிவு.
இதை எவ்வாறு கையாள்வது என்கிற விழிப்புணர்வு ஒவ்வொரு பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் வர வேண்டும். அதை நாம் மருத்துவ ரீதியாக அணுகினால் மிக நல்லது.
இதை பற்றி மனநல மருத்துவர் ஷாலினி இதே தலைப்பில் இங்கு எழுதி உள்ளார்.
http://justpsychobabble.blogspot.com/2008/02/right-switch-wrong-person.html
:(
அருமையான மற்றும் தேவையான கட்டுரை. அமெரிக்காவில் பள்ளிகளில் இரண்டாம் வகுப்பில் ஆசிரியர்களால் குட் டச் மற்றும் பேட் டச் பற்றி கற்பிக்கப்படுகிறது. நம் ஊரில் மல மல மல மருதமல பாட்டுக்கு டேன்ஸ் ஆடுவதை சொல்லிக்கொடுக்கிறார்கள்.
Anonymous!
http://software.nhm.in/Products/NHMWriter/tabid/55/Default.aspx
இங்கே போய் NHM writer download செய்து கொள்ளுங்கள். alt+2 உபயோகித்து எதில் வேண்டுமானாலும் தமிழில் அடிக்கலாம்.
இங்கே யாவரும் நண்பர்கள தான். பெயரைக் கூறலாமே.
SK!
சுட்டிக்கு மிக்க நன்றி. விளைவுகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதற்கு இம்மாதிரியான மருத்துவக் கட்டுரைகள் ரொம்ப அவசியம்.
அமரபாரதி!
:-)) உண்மை தான். நம்மூர் பள்ளிகளின் கல்வித் தரத்தைப் பற்றி வேதனையுடன் நூறு பதிவு போடலாம்.
நல்ல விழிப்புணர்ச்சிப் பதிவு!!
யோசிக்க வைத்த பதிவு.
விழிப்புணர்ச்சி கொடுத்துள்ள பதிவு.
தேவையான பதிவை தேவையான நேரத்தில் கொடுத்துள்ளீர்கள்,
வாழ்த்துக்கள் தீபா !!
நன்றி ரம்யா!
thank you very much deepa for the font info
மிகவும் தேவையான கருத்துக்கள் ஜமால் சொல்லியிருப்பது போல ஆண் பிள்ளைகளுக்கும் தேவை. குழந்தைகள் எதை பற்றியும் யாரை பற்றியும் அவர்களது கருத்துகளை நம்மிடம் பகிர்ந்து கொள்ளும் அளவு நெருக்கம் இருக்க வேண்டும். முக்கியமாக திருமணம் மற்றும் குடும்ப விழாக்களில் அனைவரும் சொந்தம் அல்லது நட்பு என்ற எண்ணத்தில் நாம் கவனக்குறைவாக இருத்தல் கூடாது. எனக்கு தெரிந்து மான்சூன் வெட்டிங் என்ற படத்தில் இயக்குனர் இதை வெளிப்படுத்தியிரும்பார்
மிகவும் தேவையான கருத்துக்கள் ஜமால் சொல்லியிருப்பது போல ஆண் பிள்ளைகளுக்கும் தேவை. குழந்தைகள் எதை பற்றியும் யாரை பற்றியும் அவர்களது கருத்துகளை நம்மிடம் பகிர்ந்து கொள்ளும் அளவு நெருக்கம் இருக்க வேண்டும். முக்கியமாக திருமணம் மற்றும் குடும்ப விழாக்களில் அனைவரும் சொந்தம் அல்லது நட்பு என்ற எண்ணத்தில் நாம் கவனக்குறைவாக இருத்தல் கூடாது. எனக்கு தெரிந்து மான்சூன் வெட்டிங் என்ற படத்தில் இயக்குனர் இதை வெளிப்படுத்தியிரும்பார்
மிகவும் அவசியமான பதிவு. பெண் பிள்ளைகள் கொஞ்சம் வளர்வதை மகிழ்ச்சியுடன் பார்க்கும் போதே, மனதுக்குள் கொஞ்சம் பதைபதைப்புடன் தான் இருக்க நேரிடுகிறது.
குட் டச், பேட் டச் அவர்களுக்கு நாம் சொல்லிக்கொடுக்கும் முன்னர் இதை மனரீதியாக எப்படி அணுகுவது என்பதை நாம் முதலில் கற்றுக்கொள்ளவேண்டியது அவசியமாகின்றது. இதைப் பற்றி இன்னும் விரிவாக ஒரு பதிவோ அல்லது அம்மாக்களின் கலந்துரையாடலோ தேவைப்படும் என்பது எனது கருத்து.
\\. இதைப் பற்றி இன்னும் விரிவாக ஒரு பதிவோ அல்லது அம்மாக்களின் கலந்துரையாடலோ தேவைப்படும் என்பது எனது கருத்து.\\
ஆமா!
//இதைப் பற்றி இன்னும் விரிவாக ஒரு பதிவோ அல்லது அம்மாக்களின் கலந்துரையாடலோ தேவைப்படும் என்பது எனது கருத்து.//
அமித்து அம்மா..ஏன் அது "அம்மாக்களின்" மட்டுமாக இருக்க வேண்டும்..:-)"பெற்றோரின்" கலந்துரையாடலாக இருக்கட்டும்!
அமித்து அம்மா..ஏன் அது "அம்மாக்களின்" மட்டுமாக இருக்க வேண்டும்..:-)"பெற்றோரின்" கலந்துரையாடலாக இருக்கட்டும்!\
இதை நான் அம்மாக்களின் வலைப்பூக்களை கருத்தில் கொண்டு மட்டுமே சொன்னேன்.
arumaiyana indraya thethikku avaasiyamana pathivu ungalukku enoda valthukkal pattam puchi viruthu petrathukku
ungala mathiri nalla karuthkkalai thodranthu eluthunga :-) thozhi
பட்டாம்பூச்சி விருது கிடைச்சிருக்கு...
வாழ்த்துகள்...
இனி அடிக்கடி வரேன்...
:-)
நல்ல பதிவு! வாழ்த்துக்கள்!!!
குட்/பேட் பற்றி நான் இன்னும் தீவிரமாக யோசிக்கவேண்டும்.பெண் குழந்தைகள் இல்லாத வீட்டில் வளர்ந்த நான் ஒரு பெண் குழந்தையின் தந்தை. நிறைய கற்றுக்கொள்ளவேண்டும் என நினைக்கிறேன்.
உண்மைதான்! மிக தேவையான ஒரு பதிவு! நன்றி தீபா!
Sasirekha Ramachandran!
Ramya!
அமிர்தவர்ஷினி அம்மா!
ஆண்டாள்!
Suresh!
வேத்தியன்!
ஜீவன்!
குடுகுடுப்பை!
ஷீ-நிசி!
வருகைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி!
மிக அவசியமான பதிவு. சமீபத்தில் என் தோழி மூலம் இதனை அறிந்தேன்.
நல்ல யோசனை தான்... என்னைக் கேட்டால் கால்களை கூட தொடக்கூடாது... இது குறித்த விழிப்புணர்வினை ஆண்/பெண் இரு பால் குழந்தைகளுக்குமே ஏற்படுத்த வேண்டும்...
அவசியமான பதிவு...இதைப்பற்றி நானு சில பதிவுகள் எழுதி இருக்கிறேன் இதன் அவசியத்தை அனைவரும் உண்ர்ந்து வருவது மகிழ்ச்சையை கொடுக்கிறது...
நன்றி
நன்றி அமுதா, ஆகாய நதி, மங்கை.
//ஆகாய நதி: நல்ல யோசனை தான்... என்னைக் கேட்டால் கால்களை கூட தொடக்கூடாது... //
ஆமால்ல?
நன்று தீபா.. உங்கள் துவக்கம் ஒரு பெரும் நிகழ்வாய் மலர இருக்கிறது. வாழ்த்துகள் உங்களுக்கு.!
இப்பொழுதுதான் இப்பதிவைப் படிக்க நேர்ந்தது. மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். இதுபோன்று குழந்தைகளுக்கு ஏற்படும் பலதரப்பட்ட தொந்தரவுகளையும் பட்டியலிட்டு, அதற்கான தீர்வுகளையும் இதுபோன்ற பதிவின் மூலமாக அலசுமாறு வேண்டுகிறேன்.
உங்கள் பதிவிற்கு உங்களுக்கு நன்றி தெரிவித்து எனது பதிவில் link கொடுத்துள்ளேன்.
ஆதிமூலகிருஷ்ணன்!
உழவன்!
எட்வின்!
மிக்க நன்றி. கணினி கொஞ்ச நாளாய் நோய்வாய்ப்பட்டு இருந்து இப்போது தான் குணமடைந்தது. அதனால் தான் இந்தத் தாமதம்.
Post a Comment