அது என்னவோ என்னை மிகவும் கவர்ந்த இலக்கிய வடிவம் சிறுகதைகள் தாம்.
நாவல்கள் படிக்கும் போது நமக்கு அதன் எல்லா அம்சங்களும் ஏற்பவையாக இருக்கும் எண்ரு சொல்லமுடியாது. ஆனால் சிறுகதை ஒரு சின்ன காட்டாறு போல நமக்குள் முழுவதுமாக நுழைந்து ஆழ்ந்த சலனங்கள் ஏற்படுத்தக் கூடியவை. மீண்டும் மீண்டும் வாசிக்கும் ஆவலைத் தூண்டுபவை.
சிறுகதைகளாலேயே எனக்குப் பிற மொழி இலக்கியத்தின் மீது ஒரு தனி ஈடுபாடு வந்தது. ஏனென்றால் தமிழில் புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளர்கள் தங்களுக்கு முன்னோடிகளாக பிரஞ்சு மற்றும் ருஷ்ய சிறுகதை இலக்கியத்தைக் குறிப்பிட்டு சிலாகித்ததும் ஒரு காரணம். அந்த வகையில் மாபெரும் பிரஞ்சு எழுத்தாளரான மாப்பஸானின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். பிரான்ஸ் நகர மேல்தட்டு மக்களின் டாம்பீக வாழ்வை நையாண்டி செய்வதிலும், சாமான்ய மக்களின் வாழ்க்கையைச் சித்திரங்களாகத் தீட்டுவதிலும் இவரது பாணி அலாதியானது.
இவரது The Necklace என்ற சிறுகதையைப் படித்தது முதல் இவரது தீவிர ரசிகை ஆனேன். இவரைப் பற்றிய சிறு குறிப்பையும் அக்கதையின் மொழியாக்கமும் இங்கே உங்களுக்காக.
மாப்பஸான்: கை டி மாப்பஸான் பிரான்ஸ் நாட்டில் டியெப்பி என்ற ஊரில் பிறந்தார். வழக்கறிஞர் கல்வி கற்ற இவர் அரசு அலுவலகம் ஒன்றில் குமாஸ்தாவகப் பத்து ஆண்டுகள் பணியற்றி வந்தார்.
இவர் முந்நூறு சிறுகதைகளும் ஆறு நாவல்களும் எழுதியுள்ளார். இவை அனைத்துமே காலத்தால் அழியாத இலக்கியச் செல்வங்களாகப் போற்றப் படுகின்றன. கதை மாந்தர்களை நுட்பமான மனித உணர்வுகளுடன் கையாள்வதும் மிகவும் யதார்த்மான கதைக் களங்களும் இவரது தனிச் சிறப்பு. மேலும் பிரபுத்துவ வாழிக்கை
உலகின் பல்வேறு மொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ள அவரது படைப்புக்கள் சாமான்ய மக்களையும் அவர்களது வாழ்வையும் பற்றியே இருந்தன.
தன்னுடைய காலத்தில் உலகப் புகழும் பெருஞ்செல்வமும் அடைந்த மேதை மாப்பஸானின் வாழ்வு மனநோய் பீடித்ததால் துரதிர்ஷ்டவசமாக இளம் வயதிலேயே முடிவுற்றது.
The Necklace
(குறிப்பு: மூலம் பிரஞ்சு என்பதாலும், ஆன்கில மொழியாக்கத்திலிருந்து மொழிபெயர்ப்பதாலும் உள்ள குறைகளைப் பொறுத்தருள வேண்டுகிறேன்)
அரசிகளுக்கும் சீமாட்டிகளுக்கும் நிகரான அழகும் மேட்டிமையும் கொண்டு ஆனால் ஏதோ விதிவசத்தால் ஏழைவீட்டில் பிறந்து விட்ட சில பாவப்பட்ட பெண்களில் அவளும் ஒருத்தி. சொல்லிக்கொள்லும் அளவு எந்த வசதியும் இல்லாததால், செல்வமோ செல்வக்கோ உடைய கனவான் எவனுக்கும் வாழ்க்கைப்பட முடியாமல், அரசாங்க அலுவலகக் குமாஸ்தா ஒருவனுக்கு மணமுடிக்கப்பட்டாள்.
அவள் எளிமையாகவே இருந்தாள்; அலங்காரம் செய்து கொள்ள இயலாத காரணத்தினால். ஆனால் தன்னைப் போன்ற நிலையிலுள்ள பிற பெண்கள் போலில்லாமல் சோகமாகவே இருந்தாள்.
ஏனெனில் பெண்களுக்கு சாதி, குலம், வர்க்கம் எதுவுமில்லை. அவர்களுக்கு இயல்பாக உள்ள அழகும், நடத்தையும், பாங்கும் தான் அவர்களது ஒரே சொத்து. இந்த ஒன்றே போதும் சாதாரண வீட்டுப் பெண்களைக் கூட சீமாட்டிகள் போல் காட்டுவதற்கு.
அவள் சதா வருந்தியவண்ணம் இருந்தாள்; உலகின் உள்ள சகல வசதிகளுக்கும் செல்வத்துக்கும் தகுதியானவளாகப் பிறந்து விட்டு வறுமையில் உழலும் தன் விதியை எண்ணி.
தனது சிறிய விட்டையும் அழுக்கடைந்த சுவர்களையும், வீட்டிலுள்ள எளிய பழைய சாமான்களையும் பார்த்து; இவையனைத்தும் அவளது வ்குப்பைச் சேர்ந்த வேறொரு பெண்ண்க்கு ஒரு விஷயமாகவே இருந்திருக்காது. ஆனால் இவளுக்கோ அவை வெறுப்பாகவும் சித்ரவதையாகவும் இருந்தன.
அவள் அழகிய மாளிகைகளையும் ஆடம்பரமான வீடுகளையும் பற்றிக் கனவு காண்பாள். வண்ண வண்ண விளக்குகள், பட்டுத்திரச்சீலைகள், அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த மேஜைகள், நாற்காலிகள், நண்பர்களுடன் அரட்டை அடிக்கக்கூடிய டம்ப அறைகள், வீடு நிறைய வேலைக்காரர்கள், பட்லர்கள், சமுதாயத்தில் பேரும் புகழும் கொண்ட கனவான்களின் சிநேகிதம், இப்படி நிறைய.
அவள் கணவனோ மிகவும் நல்லவன். சாப்பாட்டு நேரத்தில் அவள் கொண்டு வந்து வைக்கும் எதுவானாலும் "ஆஹா! எவ்வளவு அருமையான சூப். எனக்கு மிகவும் பிடித்ததாயிற்றே இது" என்று அவளை உற்சாகப்படுத்த முயல்வான். அவளோ நவநாகரிக விருந்துகளையும் அவ்அற்ரில் பரிமாறப்படும் உயர்ரக உணவு வகைகளையும் பற்றிக் கற்பனை செய்து கொண்டிருப்பாள்.
உயர்ரக ஆடைகளோ நகைகளோ அவலிடம் ஒன்றும் இல்லை. ஆனால் அவள் ஏங்கித் தவித்தது இவற்றுக்குத்தான். தான் அது போலவெல்லாம் அணியவே பிறந்ததாக அவ்ள் நம்பினாள்.
அவளுக்கு ஒரு பணக்காரத் தோழி இருந்தாள். அவளைப் பார்த்து விட்டுத் திரும்பிய போதெல்லாம் ஏக்கமும், இயலாமையும் பெருந்துயரமுமே மேலிடுவதால் அங்கு செல்வதை நிறுத்திக் கொண்டாள்.
ஒரு நாள் மாலை அவளது கணவன் உற்சாகமாக வந்தான், "ஏய், இங்கே பாரேன், உனக்காக ஒன்று கொண்டு வந்திருக்கேன்!"
அவன் கையிலிருந்து அந்தக் காகித உறையை வாங்கிப் பிரித்தாள். அதனுள் இருந்த அட்டையில்:
"மாண்புமிகு கல்வி அமைச்சரிடமிருந்து அழைப்பு: திரு & திருமதி லாய்செல் அவர்களைத் திங்கள் மாலை தங்களது இல்லத்தில் ந்டைபெறும் விழைவில் கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்."
அவன் மகிழ்ச்சியில் கூவப் போகிறாள் என்று அவன் எதிர்பார்த்திருக்க அவளோ எரிச்சலுடன் அதைத் தூக்கிப் போட்டாள்.
(மீதி நாளைக்கு!)
8 comments:
//மாப்பஸானின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். பிரான்ஸ் நகர மேல்தட்டு மக்களின் டாம்பீக வாழ்வை நையாண்டி செய்வதிலும், சாமான்ய மக்களின் வாழ்க்கையைச் சித்திரங்களாகத் தீட்டுவதிலும் இவரது பாணி அலாதியானது.//
உண்மைதான். எனக்கும் நெக்லஸ் கதை ரொம்ப பிடித்த கதை.
நிறைய எழுத்துப் பிழைகள். சரி பார்க்க நேரமில்லாமல் போய்விட்டது.
மன்னிக்கவும்.
\\மாப்பஸான்: கை டி மாப்பஸான் பிரான்ஸ் நாட்டில் டியெப்பி என்ற ஊரில் பிறந்தார்.\\
இவரை இதுவரை படித்ததில்லை
தேடிப்பார்ப்போம்.
இவரை இதுவரை படித்ததில்லை... இருந்தாலும் நல்லாயிருந்தது.
கேள்விப்பட்டிருக்கேன்..படிச்சதா ஞாபகம் இல்லை! உங்க மூலமா கதையை படிக்கறேன்! நல்ல தமிழாக்கம்! :-)
ஏலவே படித்த கதைதான்
முடிவிலுள்ள சஸ்பென்ஸ் ஆடம்பர விரும்பிகளுக்கு ஒரு சாட்டையடியாக இருக்கும்.
மாபசான் கதைகள்தான் நகைச்சுவையுடன் இருக்கும் என நினைத்தேன். சில வருடங்களுக்கு முன் இலங்கை பாராளுமன்றில் கூட இவரை வைத்து ஒரு நகைச்சுவையே அரங்கேற்றப்பட்டது.
எனக்கு தமிழைத் தவிற வேரெந்த மொழியும் தெறியாது அதனாலயே இது போன்றவர்களின் படைப்புகளை படிக்க முடியாது போய்விடுகின்றன
நீங்கள் மாப்பஷானை அறிமுகப்படுத்தியதற்க்கும் அவரின்
இச்சிறுகதையை மொழி பெயர்த்து படிக்க தந்த்திருக்கும் உங்களுக்கு நன்றி
சொல்லிக் கொள்கின்றேன்.
நன்றி முத்துராமலிங்கம்!
உங்கள் வார்த்தைகள் ஊக்கம் அளிக்கின்றன.
Post a Comment