Friday, March 20, 2009

ஒரு நண்பனும் ஒரு தோழியும்

ஒரு வீட்டில் காலையில்:

”ஏய்! குழந்தை எப்படி அழுது பாரு. நான் எவ்வளவு நேரமா தொட்டில ஆட்டறது. அங்கே என்னடி பண்ணிட்டிருக்கே”

“ஹீம்... அது அப்பனுக்கும் தான் சமைச்சுக் கொட்டிட்டிருக்கேன். ” தொடர்ந்து முணுமுணுப்பு.

”த பாரு.. எனக்கு நேரமாச்சு. நான் குளிக்கணும்... வந்து குழந்தையைப் பாரு.”

”இவ்வளவு நேரம் கிரிக்கெட் பாத்தீல்ல? அப்ப போய் குளிச்சிருக்கலாம்ல? காலைல ஆஃபீஸ் போற நேரத்தில் கூட அந்தத் தண்டத்து முன்னடி ஏன் உட்கார்ற? நான் குழந்தையையும் தூக்கிட்டுப் போய் கிச்சன்ல நிக்க்ணுமா. ” வெடுக்கென்று குழந்தையைத் டொட்டிலிலிருந்து தூக்குகிறாள். அது வீறிட்டு அழத் தொடங்குகிறது.

”ஆரம்பிச்சிட்டியா? நீ ஒண்ணும் சமைக்க வேணாம்; காண்டீன்ல சாப்டுக்கறேன்னு சொன்னா கேக்க மாட்டேங்கற. என் உயிர வாங்கற. ”

தொடர்ந்து மேலும் சில வார்த்தைகள், கத்தல், அழுகை, கொஞ்சம் சமாதானம். ஒரு வழியாக அவன் புறப்பட்டுச் செல்கிறான்.

அலுவலகத்தில்:

”சே, தப்பு பண்ணிட்டோமோ. அவ பாவம். இத்தனை நாள் அவளும் தான் வேலைக்குப் போயிட்டிருந்தா. குழந்தைக்காக இப்ப வீட்ல இருக்கா...எவ்ளோ வேல பாக்கறா? உடம்பும் இளச்சுத் தான் போயிருக்கா. வாய் கொஞ்சம் ஜாஸ்தி தான், ஆனாலும் நம்ம கொஞ்சம் பொறுமையா போயிருக்கலாம். ” நினைவுகள் கோர்வையாகி ஒரு முடிவுக்கு வருவதற்குள்....

“இன்னா மச்சி..காலையிலேயே அப்செட்டா இருக்குற? ”

”ஒண்ணும் இல்லடா வீட்ல சின்ன சண்டை”.

”விடு மச்சி... என் ஒயிஃப்பும் இப்படித்தான். இவங்க்ளுக்கு எல்லாம் வேற வேலையே இல்ல. நாம் கொஞ்சம் எறங்கினா தலை மேல ஏறிடுவாங்க. “ தொடர்ந்து இவனுக்கே கோபம் வருமளவு பெண்களை இளக்காரமாகப் பேசுகிறான். இவனுக்குத் தலைவலியே வரும் போலிருக்கிறது.

’சே. நாம எவ்வளவோ பரவாயில்ல. இவன் ஒயிஃப்ப் ரொம்பப் பாவம். இவனை மாதிரி ஒருத்தன் வந்திருந்தா தெரிஞ்சிருக்கும் அவளுக்கு. கேனயன் மாதிரி இருக்கோமா நம்ம, அதான் அவளுக்குத் திமிர்.’ பழைய கோபம் மீண்டும் ஏறிக் கொள்கிறது.

வீட்டில்:

”....ரொம்ப நேரமாச்சுடி, கிளம்புறேன். எல்லாம் வீட்ல அப்படியப்படியே கெடக்கு. இந்தச் சின்னவன் வேற ஒரு மணிக்கு வந்துடுவான். ஹீம் என் கதை தான் இருக்கே தெனம் தெனம் பேசலாம். ”

”சரிக்கா வாங்க. கவல படாதீங்க. எல்லாம் சரியாகிடும். ஏய், குட்டி ஆண்டிக்கு டாட்டா சொல்லு“

கண்ணைத் துடைத்துக் கொண்டு போகும் பக்கத்து வீட்டக்காவை அனுப்பி விட்டு உள்ளே வரும் இவளின் மனதில் சின்னதாக ஒரு பூ. ’சே, அக்கா பாவம். அவங்க ஹஸ்பெண்ட் ரொம்ப மோசம். நம்ம ஆள் எவ்ளோ ஸ்வீட். நான் தான் லூஸு மாதிரி கத்தி அவரை மூட் அவுட் பண்ணிடறேன். ’ உற்சாகமாக வீட்டில் வளைய வருகிறாள். மாலை வீட்டுக்கு வரப்போகும் அவனது மனநிலை தெரியாமல்.

அடுத்த நாள் காலை...

”ஏய்....”

Labels: , ,

27 Comments:

At March 20, 2009 at 12:24 AM , Blogger துளசி கோபால் said...

வீட்டுக்கு வீடு வாசப்படி.

 
At March 20, 2009 at 12:26 AM , Blogger துளசி கோபால் said...

அது என்னமோப்பா...... மறுபாதி ஊருக்குப்போனபிறகு (கண்காணாத இடமுன்னு வச்சுக்கலாம்) 'பாவம்..ஐயோ'ன்னு இருக்கும். வந்த ரெண்டு நிமிஷம் ஆனதும் old blind open the door தான்:-))))

 
At March 20, 2009 at 12:29 AM , Blogger தண்டோரா said...

சண்டைல மண்டை உடையணும்...ஒருத்தருக்கு ஒருத்தர் கட்டு போட்டு விடனும்...அது ஒரு தனி சுகம்

 
At March 20, 2009 at 12:48 AM , Blogger தமிழ் பிரியன் said...

எல்லா வீட்டிலும் இதெ கதை தானா?... ;)))

 
At March 20, 2009 at 12:57 AM , Blogger வித்யா said...

நல்லாருக்கு பதிவு. நம் சுய சிந்தனைகளைவிட அடுத்தவரின் சிந்தனையின் தாக்கம்தான் அதிகமாகயிருக்கிறது:(

 
At March 20, 2009 at 1:11 AM , Blogger சந்தனமுல்லை said...

:-)

 
At March 20, 2009 at 1:19 AM , Blogger நட்புடன் ஜமால் said...

ஜகஜமுங்கோ ...

 
At March 20, 2009 at 2:18 AM , Blogger Deepa said...

துளசி கோபால்,
தண்டோரா,
தமிழ் பிரியன்,
வித்யா,
சந்தன முல்லை,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

வித்யா, சரியான புரிதலுக்கு +நன்றி.

 
At March 20, 2009 at 5:26 AM , Blogger ஜீவன் said...

;;)))

 
At March 20, 2009 at 5:51 AM , Blogger மோனி said...

”ஏய்....”

ச்ச்சும்மா
நல்லாத்தான் கீது ...

 
At March 20, 2009 at 6:26 AM , Blogger மணிகண்டன் said...

Nice one Deepa

 
At March 20, 2009 at 6:41 AM , Blogger மாதவராஜ் said...

தீபா!

இந்தச் செல்லச் சண்டைகளும், சிறு ஊடல்களும் இல்லையென்றால் வாழ்க்கை எப்படி ரசிக்கும். ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்கு இப்படிப்பட்ட அனுபவங்கள் தேவைப்படுகிறது. அதை அழகாகச் சொல்லியிருக்கிறாய். வாழ்த்துக்கள்

 
At March 20, 2009 at 7:12 AM , Blogger Swami www ji said...

irreversible .... lol gud wun!!!

enna kalyana vazkaiyada idhu... living to-gather is better nu thonudhu instead of stressing each other everyday and a kid to add to the problems...! :-(
lol... wot say?

 
At March 20, 2009 at 8:41 AM , Blogger Deepa said...

ஜீவன்!
மோனி!
மணிகண்டன்!

வாருங்கள்! தங்கள் முதல் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

 
At March 20, 2009 at 8:41 AM , Blogger Deepa said...

அங்கிள்!

நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் நான் சொல்ல வந்த இன்னொரு நுட்ப்மான கருத்தை நீங்களும் மிஸ் பண்ணி விட்டீர்கள். நான் எழுதியதில்
தான் பிழை போலும்.

 
At March 20, 2009 at 8:48 AM , Blogger Deepa said...

Swaami ji!

Thanks for your visit and comment.
The kid definitely does not add to the problems. In its own way, it is what miraculously brings peace and joy to the family. Of course, I too would have found it difficult to believe, before having my own. :)

As for living-together, it's a personal preference. I believe in the institution of marriage. but the marriage must be based on love and understanding, not just a social contract.

 
At March 20, 2009 at 8:52 AM , Blogger Swami www ji said...

woteva... ikkaraiku akkarai green...lol tokin abt kids try takin a 4 yr old boy to a gift shop... u'll get psyched!

 
At March 20, 2009 at 9:07 AM , Blogger பட்டாம்பூச்சி said...

:)))Nice one.

 
At March 20, 2009 at 10:44 AM , Blogger Deepa said...

Swaami ji,

Yes, speak for yourself. ofcourse, not everyone in this world are destined for marriage and kids.
If you think you are not for something, please do not go for it, just because the rest of the world does.

 
At March 20, 2009 at 6:51 PM , Blogger Swami www ji said...

hey i wrote it on a lighter note though... Sin ofender. :p :-E
Sé que los niños son divertidos y vale la pena.

 
At March 21, 2009 at 12:56 AM , Blogger " உழவன் " " Uzhavan " said...

அடுத்த நாள் காலை...

”ஏய்....” படத்திலிருந்து அர்ஜுனா அர்ஜுனா பாடலானது டிவி யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இப்படித்தான கதை ஆரம்பிக்கப் போகுது?? :-))

கதை நல்லா இருக்குங்க.

 
At March 21, 2009 at 9:12 AM , Blogger Deepa said...

நன்றி பட்டாம்பபூச்சி!

வாங்க உழவன்,
உங்க கற்பனை நல்லாருக்கு!

 
At March 25, 2009 at 11:26 PM , Blogger வண்ணத்துபூச்சியார் said...

Simple and sweet.

Nice.

இதெல்லாம் இல்லைன்னா வாழ்க்கையே இல்லை..

 
At March 26, 2009 at 10:23 AM , Blogger Deepa said...

நன்றி வண்ணத்துப்பூச்சியாரே!

 
At March 27, 2009 at 3:14 AM , Blogger ஆ.ஞானசேகரன் said...

தினம் தினம் நடக்கும் சின்ன சின்ன ஊடல்கள் ... சுவாரசியமாக எழுதியுள்ளீர்கள்

 
At March 27, 2009 at 4:28 AM , Blogger வல்லிசிம்ஹன் said...

kகண்ணில படாதவரை ஆளை விரும்பறதும், கண்டதும் எரிஞ்சு விழறதும் தாம்பத்தியத்தினோட பெருமை:)

ரொம்ப அழகாச் சொல்லி இருக்கீங்க.

 
At March 27, 2009 at 5:29 AM , Blogger Deepa said...

வாங்க வல்லிசிம்ஹன், ஞானசேகரன்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home