Wednesday, March 18, 2009

அம்மாச்சி, வெற்றிலை, பிராந்தி!

DSC00046COPY என்னைக் கவர்ந்தவர்கள் - 2

தெரசா அம்மாச்சி

என் கணவரின் அம்மாவுக்குச் சின்னம்மா. எனக்குக் குழந்தை பிறந்த மூன்றாம் நாளிலிருந்து 40 நாட்கள் வரை என்னையும் குழந்தையையும் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டவர்.

கொடைக்கானலில் தன் மகள் குடும்பத்துடன் வசித்து வருகிறார். என் நாத்தனார் குழந்தையையும் இவர் தான் இரண்டு வயது வளர்த்தார். ரொம்ப சுறுசுறுப்பானவர். அவர் எங்கு இருந்தாலும் அந்த வீட்டில் ஏதாவது வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார்.

இவரைப் பற்றி என்ன விசேஷம் என்றால் இவருக்குத் தெரியாத வைத்தியமே கிடையாது. குழந்தைகளுக்குச் சளி, வயிற்றுவலி என்றால் வெற்றிலைச் சாறு, அஜீரணத்துக்குச் சீரகச் சாறு, என்று ஏதாவது வைத்துக் கொடுத்துப் பெரும்பாலும் இவரே குணப்படுத்தி விடுவார். ஆனால் டாக்டரிடம் போக வேண்டுமென்றால் தடுக்கவும் மாட்டார்.

ஒருமுறை என் நாத்தனார் தனது ஏழு மாதக் குழந்தையை இவரிடம் விட்டு விட்டு வேலைக்குச் சென்றிருக்கிறார். வீட்டில் வேறு யாரும் இல்லாத அந்தச் சமயத்தில் திடீரென்று குழந்தை வயிற்று வலியால் ரொம்பவும் அழுததும் வெற்றிலை இல்லாமல், வாங்கி வரவும் ஆளில்லாமல் திண்டாடியதையும், அப்போது தெருவோடு போன முன்பின் தெரியாத பெண்மணி ஒருவர் சமய்த்தில் வெற்றிலை கொடுத்து உதவியதையும், அவரைத் தான் வணங்கும் மாதாவாகவே உணர்ந்ததையும் மெய்சிலிர்க்கக் கூறுவார்.

இளம் வயதிலேயே கணவரை இழந்த இவர் கடுமையாகக் காட்டிலும் மேட்டிலும் உழைத்துத் தன் பிள்ளைகளை ஆளாக்கி இருக்கிறார். வசதியோடு இருந்த தன் தம்க்கைகளிடம் அன்பும் ஆதரவும் மட்டுமே எதிர்பார்த்ததாகவும் காலணா கடன் வாங்கியதில்லை என்றும் பெருமையோடு சொல்வார்.

கணவரைப் பற்றி ரொம்பவும் ஆர்வமாகப் பேசுவார். அவ்வளவு அன்பாக இருந்தாராம் இவரிடம். பிள்ளைப் பேறு காலத்தில் இவருக்காகச் சமைத்து வைப்பது, வீட்டு வேலைகள் செய்வது, இவரின் உடல் தேற வேண்டுமென்று பிராந்தி வாங்கித் தருவது (மாமியாருக்குத் தெரியாமல்! ) என்று அந்தக் காலத்து மனிதர் ஒருவர் பெண்மையை இந்த அளவுக்கு மதிப்பவராக இருந்திருப்பது வியக்க வைக்கிறது. (சாரி, பிராந்தி வாங்கித் தந்ததற்காகச் சொல்லவில்லை)

அழகாக மிமிக்ரி செய்வார். பல ஊர்களிலிருந்தும் நாடுகளிலிருந்தும் கொடைக்கானலைச் சுற்றிப் பார்க்க வரும் பெண்கள் பேசுவதையும் நடந்து கொள்வதையும் கதை கதையாக அவ்ர்கள் மாதிரியே நடித்துக் காட்டுவார்.

அம்மாச்சி you are cho chweet!

12 comments:

நட்புடன் ஜமால் said...

அம்மாச்சியை பற்றி ச்சோ ச்சூவிட்டா சொல்லி இருக்கியள்

Deepa said...

ஹைய்யோ! Super fast ஜமால் நீங்க.
Thanks!

சந்தனமுல்லை said...

சுவாரசியம்!! :-)

மாதவராஜ் said...

தீபா!

உன்னைக் கவர்ந்தவர்கள் யாரெல்லாம் என நினைக்கும் போது, உன் மீதான மதிப்பு எனக்குக் கூடிக்கொண்டே இருக்கிறது. கிரேட்!

அழகாகச் சொல்லியிருக்கிறாய்.

Deepa said...

Uncle!

ரொம்பப் புகழறீங்க. வேண்டாம். லிஸ்ட்ல நீங்க கூட இருக்கிங்க. எழுதவா? :-)

ஆயில்யன் said...

//இளம் வயதிலேயே கணவரை இழந்த இவர் கடுமையாகக் காட்டிலும் மேட்டிலும் உழைத்துத் தன் பிள்ளைகளை ஆளாக்கி இருக்கிறார். வசதியோடு இருந்த தன் தம்க்கைகளிடம் அன்பும் ஆதரவும் மட்டுமே எதிர்பார்த்ததாகவும் காலணா கடன் வாங்கியதில்லை என்றும் பெருமையோடு சொல்வார்//

என் பாட்டியின் (அம்மா என்றுதான் அழைப்போம்) ஞாபகம்தான் வந்தது!

ஆயில்யன் said...

//Deepa said...
ஹைய்யோ! Super fast ஜமால் நீங்க.
Thanks!
//

அட அவுரு பிளாக்கர்லதான் வேலை பாக்குறாரோன்னு எங்களுக்கு ரொம்ப காலமா பயங்கர டவுட்டு :))

மாதவராஜ் said...

//ரொம்பப் புகழறீங்க. வேண்டாம். லிஸ்ட்ல நீங்க கூட இருக்கிங்க. எழுதவா?//

லிஸ்ட்ல மட்டும் இருந்துக்கிறேனே....
இப்படியா மிரட்டுவது?

Deepa said...

ஆயில்யன்!

//அட அவுரு பிளாக்கர்லதான் வேலை பாக்குறாரோன்னு எங்களுக்கு ரொம்ப காலமா பயங்கர டவுட்டு :))//

:-)))))

நட்புடன் ஜமால் said...

\\ஆயில்யன் said...

//Deepa said...
ஹைய்யோ! Super fast ஜமால் நீங்க.
Thanks!
//

அட அவுரு பிளாக்கர்லதான் வேலை பாக்குறாரோன்னு எங்களுக்கு ரொம்ப காலமா பயங்கர டவுட்டு :))\\

ஐயா! நலமா

ஏன் ஏன் ஏன்

இப்படி ஒரு பயங்-கரம்

அமிர்தவர்ஷினி அம்மா said...

//இளம் வயதிலேயே கணவரை இழந்த இவர் கடுமையாகக் காட்டிலும் மேட்டிலும் உழைத்துத் தன் பிள்ளைகளை ஆளாக்கி இருக்கிறார். வசதியோடு இருந்த தன் தம்க்கைகளிடம் அன்பும் ஆதரவும் மட்டுமே எதிர்பார்த்ததாகவும் காலணா கடன் வாங்கியதில்லை என்றும் பெருமையோடு சொல்வார்//

எனது சித்திகூட இப்படித்தான்...

நல்ல பகிர்வு.

எனக்கும் சொல்லத் தோன்றுகிறது, தெரசா அம்மா நீங்க சோ ச்வீட்.

பட்டாம்பூச்சி said...

அழகான மனிதர்கள் உங்கள் வாழ்வில் நிறைய உள்ளனர் போல :)).

அமிர்தவர்ஷிணி அம்மா எழுதிய தலைப்பில் நீங்கள் எழுதியதை முதலில் படித்தேன்.பிறகு அங்கும் சென்றுவிட்டு வந்த பிறகு எனக்கும் இதே தலைப்பில் எழுதவேண்டுமென தோன்றியது.இயலுமாயின் வருகை தாருங்களேன்.அதன் சுட்டி கீழே.

http://pattaampoochi.blogspot.com/2009/03/blog-post_18.html