Friday, March 27, 2009

கனவுகளின் காதலி


தயவு செய்து என் கண்களுக்கு எதிரில் வந்து நின்று விடாதே.
நான் உனக்காகவே வைத்திருக்கும் கண்ணாடியின் முன் வந்து நில்.
அதன் மூலம் மட்டுமே உன்னைக் காண விரும்புகிறேன்.
என் கண்ணாடியில் நீ எப்போதும் அழகு.

உன் கண்ணாடியை உடைத்து உன் எதிரில் வந்து நின்றது முதல் என்னைப் பார்க்கவே மறுத்து விட்டாயே?
அந்த நிலை எனக்கு வேண்டாம். நான் உன்னைக் காண வேண்டும்.
ஆனால், தயவு செய்து என் கண்களுக்கு முன் வந்து விடாதே.

கனவுகளும் பிம்பங்களும் நாம் வாங்கி வந்த வரங்கள்.
உண்மையைத் தேடுவது வீண் வேலை.
ஓவியத்தைக் கலைத்து வெற்றுத் திரையை நோக்குவானேன்?

15 comments:

ஆ.சுதா said...

இது என்ன கவிதைக்கு முயற்சிக்கீங்களா.

//தயவு செய்து என் கண்களுக்கு எதிரில் வந்து நின்று விடாதே.
நான் உனக்காகவே வைத்திருக்கும் கண்ணாடியின் முன் வந்து நில்.
அதன் மூலம் மட்டுமே உன்னைக் காண விரும்புகிறேன்.
என் கண்ணாடியில் நீ எப்போதும் அழகு.//

முதல் வரிகள் அழகாக இழுத்துச் சென்றது அதன் பின் ஏனோ ஏமாற்றம்.

சென்ஷி said...

//ஆ.முத்துராமலிங்கம் said...

இது என்ன கவிதைக்கு முயற்சிக்கீங்களா.//

:-)))

நட்புடன் ஜமால் said...

அட டெம்ப்ளேட் அருமையா இருக்கு

நட்புடன் ஜமால் said...

நான் உனக்காகவே வைத்திருக்கும் கண்ணாடியின் முன் வந்து நில்.
அதன் மூலம் மட்டுமே உன்னைக் காண விரும்புகிறேன்.\\

இது ரொம்ப அழகு.

சந்தனமுல்லை said...

பிம்பங்கள் உடைபடுவது விரும்பத்தகாததுதான்!!

மாதவராஜ் said...

நிஜத்திற்கும், பிம்பத்திற்குமான இடைவெளியை, வலியோடுச் சொல்கிறது சொற்சித்திரம். இதுவும் நன்றாகவே வருகிறது . தொட்ரட்டும் எழுத்துக்கள்.

Deepa said...

முத்துராமலிங்கம்!

நன்றி.. ஆமாம் கவிதை முயற்சி எல்லாம் இல்ல, சொல்ல வந்ததை சுருக்கமா சொல்லணும்னு நினைச்சேன். விமர்சனத்துக்கு ரொம்பவும் நன்றி. எனக்கும் அடுத்தடுத்த வரிகள் திருப்தி இல்லை தான்.

Deepa said...

சென்ஷி!

வருகைக்கு நன்றி. ஏதோ முயற்சி பண்றேன். அதுக்கு ஏம்ப்பா இவ்வளவு சிரிப்பு??

Deepa said...

நட்புடன் ஜமால்!

டெம்ப்ளேட் உபயம்: திரு. மாதவராஜ் அவர்கள். நல்லா இருக்குல்ல?

பாராட்டுக்கு நன்றி!

Deepa said...

நன்றி Uncle!

நன்றி சந்தனமுல்லை!

RAMYA said...

நல்ல முயற்சி, பிம்பங்கள் உடைந்தால் அதன் வலி அதிகம்தான் !!

நல்ல முயற்சி வாழ்த்துக்கள் !!

RAMYA said...

டெம்ப்ளேட் அருமையா இருக்கு !!

RAMYA said...

//
டெம்ப்ளேட் உபயம்: திரு. மாதவராஜ் அவர்கள்.
//

நல்லா இருக்குங்க திரு. மாதவராஜ்!!

Deepa said...

ரம்யா!
டெம்ப்ளேட் அவர் தந்தது தான்.
ஆனால் அந்த மெழுகுவர்த்தி படம் நான் தேடிப் போட்டதாக்கும்!

தீபாதேன் said...

அருமையான கருத்து. இதையே நானும் யோசித்தது உண்டு. ஆனால் அதை இவ்வளவு அழகாக உன்னால் மட்டுமே சொல்ல முடியும்.