ஃபோனில் முத்தங்கள்
பிரியமாய்க் குறுஞ்செய்திகள்
”என்னடா செல்லம் பண்ற” - நொடிக்கொரு இமெயில்
எதுவுமில்லை இப்போது.
சின்னஞ்சிறு விரலுக்கு நீ நகம் வெட்டும் போதும்
உன் நெஞ்சில் சாய்ந்து அவள் உறங்கும் போதும்
நீ காதல் சொன்ன கணங்களைக் காற்றில் பறக்க விடுகிறேன்
17 comments:
மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. காலம் தொடர்ந்திட காட்சிகளும் மாறும்.
எவ்வளவு அற்புதமான வெளிப்பாடு
அதற்குள் எத்துணை வலி ஒரு விலகலை ஒரு மெல்லிய புறக்கணிப்பை
இன்னும் எளிமையாக சொன்னக் கவிதை உங்கள் தளத்தில் பார்த்ததில்லை
//”என்னடா செல்லம் பண்ற” //
இந்த வார்த்தை தாங்க நம்ம ஊர் மொபைலில் அதிகம் அனுப்பப்படும் குறுஞ்செய்தி...
:-)
இது காதல் உணரும் பருவம்...
சேம் பிளட்!! :-)
நல்லாயிருக்கு தீபா!
’காற்றில் பறக்க விடுதல்’ என்பதற்கும் பொருட்படுத்தாமல் இருத்தல் என்று வழமையான ஒரு அர்த்தம் உண்டு.
உன் கவிதையில் ‘எங்கும் நிறையச் செய்கிற’ என்று அர்த்தம் வருகிறது என நினைக்கிறேன்.
ரசித்தேன்.
நன்றாக உள்ளது
Woaaaaaaaavvv..
\\நேசமித்ரன் said...
எவ்வளவு அற்புதமான வெளிப்பாடு
அதற்குள் எத்துணை வலி ஒரு விலகலை ஒரு மெல்லிய புறக்கணிப்பை
இன்னும் எளிமையாக சொன்னக் கவிதை உங்கள் தளத்தில் பார்த்ததில்லை\\
உண்மைதான் தீபா!!
மென்மையான கவிதை.
நன்றி இராதாகிருஷ்ணன்!
நன்றி நேசமித்ரன்!
நன்றி சங்கவி!
:-))
நன்றி ஆரூரன்!
நன்றி இயற்கை!
நன்றி அண்ணாமலையான்!
நன்றி முல்லை!
நன்றி அங்கிள்!
பொருட்படுத்துவதில்லை என்ற அர்த்தத்தில் தான் எழுதினேன்; ஆனால் நெகடிவாக இல்லை. இனி குழப்பம் வராமல் எழுத முயல்கிறேன்.
:-)
நன்றி கவிக்கிழவன்!
நன்றி கணேஷ்!
நன்றி அம்பிகா அக்கா!
அது வலி இல்லை. வளர்ச்சி. :)
:-) படித்ததும் புன்னகைத்தேன்.
நாலே வறில நச்சுனு ஒரு உணர்வின் அழகிய வெளிப்பாடு..!
நல்லா இருக்கு தீபா..!
நேசமித்ரன் said...
எவ்வளவு அற்புதமான வெளிப்பாடு
அதற்குள் எத்துணை வலி ஒரு விலகலை ஒரு மெல்லிய புறக்கணிப்பை
வழிமொழிகிறேன்.
(அதே ரத்தம்தான் ;))))))
காற்றில் விட்ட கணங்கள் அந்த சிறு விரலுக்கு சொந்தக்காரரை அடைந்திருக்கும்(கலாம்)
செம சூப்பரா இருக்கு தீபா.
மிக மெல்லிய உணர்வை அற்புதமாய் சொல்லுகிற கவிதை.
நேசமித்ரன் சொன்னதை வழிமொழிகிறேன்.
இந்த கவிதையை எப்படி மிஸ் பண்ணேன்?
என்னவோ செய்கிறது மனதை.என்னவென கிளற பயமாருக்கு..
:-)
Post a Comment