புதையல் வேட்டை நடந்தது;
ஆளாளுக்கு முனைந்து தேடியதில்
வைரங்கள் கிடைத்தது ஓரிருவருக்கே;
கண்ணாடிக் கற்களை அள்ளிப் புதையல் என்று
சிரித்து நின்றனர் சிலர்;
குடிக்கத் தண்ணீராவது கிடைக்கட்டும் என்று
கிணறு வெட்டக் கிளம்பினர் சிலர்;
தூர் மட்டும் வாரி அமைதியாய்ச் சென்றனர் சிலர்;
ஆழத் தோண்டி அகப்பட்ட கண்ணாடியில்
முகம் மட்டும் பார்த்த திருப்தியில் நான்.
13 comments:
அழகாருக்கு...
திருப்தியில் நான்.
good
//ஆழத் தோண்டி அகப்பட்ட கண்ணாடியில்
முகம் மட்டும் பார்த்த திருப்தியில் நான்.//
போதுமே..திருப்தியை விடவா புதையல்?
:-)
அட...! புத்தகக்கண்காட்சி - பதிவுகள் - பட்டியல்கள் - இவற்றோடு பக்காவாக சிங்க் ஆகிறது இக்கவிதை :))
:) நல்ல கவிதை. உங்கள் புது template கூட அழகா இருக்கு.
ஜூனியர் நலமா?
நன்றி அண்ணாமலையான்!
நன்றி டாக்டர் ருத்ரன்!
நன்றி ராஜாராம்!
நன்றி செல்வேந்திரன்!
அய்யோ! போற போக்கில இப்படி ஏதாவது கொளுத்திப் போட்டுட்டுப் போகாதீங்க. அதெல்லாம் எதுவுமில்லை. :-)
நன்றி விதூஷ்!
நேஹா நலம். உங்க குட்டீஸ்?
டெம்ப்ளேட் நல்லாருக்கா? ஹையா!
\\பா.ராஜாராம் said...
போதுமே..திருப்தியை விடவா புதையல்?\\
:-)
:-)))
பா.ராஜாராம் said...
//ஆழத் தோண்டி அகப்பட்ட கண்ணாடியில்
முகம் மட்டும் பார்த்த திருப்தியில் நான்.//
போதுமே..திருப்தியை விடவா புதையல்?
:-)///
அதே தாங்க
:)
சுயதரிசனம் அருமை
ஆகா..கவிதாயினி...கலக்குங்க..நான் கூட ஆழக்குழி தோண்டி அண்ணாந்து பார்த்தா ன்னு விடுகதையோ நினைச்சுட்டேன்! :-)
செல்வேந்திரன் said...
அட...! புத்தகக்கண்காட்சி - பதிவுகள் - பட்டியல்கள் - இவற்றோடு பக்காவாக சிங்க் ஆகிறது இக்கவிதை :))
இந்தக்கவிதை படித்து முடித்தபின் எனக்குத் தோன்றியது இதே.:)))))
அருமையாக இருந்தது.
Post a Comment