ஹையா! புத்தகக் கண்காட்சிக்குப் போயிட்டு வந்தாச்சு! அதுவும் ஒன்றில்லை இரண்டு முறை!முதலில் ஜோவுடன் சனிக்கிழமை. அப்புறம்...guess who!?? நம்ம ஆச்சியுடன்! It was just like renewing our youthful days! பஸ்ஸிலும் ஆட்டோவிலுமாகப் பயணம் செய்ததும் கையில் பாப்கார்னும் வாய் ஓயாத அரட்டையுமாய் ஸ்டால்களை வலம் வந்ததும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.
இரு நாட்களிலும் வாங்கியதும் பார்த்ததும்:
வம்சி புக்ஸ்: கண்காட்சிக்குச் சென்றவுடன் முதலில் தேடியது இந்தப் பதிப்பகத்தைத் தான். பூக்களிலிருந்த வந்த புத்த்கங்கள் அனைத்துமே மிக நேர்த்தியாக் இருந்தன. class ஆன அட்டைப் படங்கள், வெகு அழகான வடிவமைப்பு என்று அசத்தி இருந்தார்கள். வாங்கியவை: பெருவெளிச்சலனங்கள், கிளிஞ்சல்கள் பறக்கின்றன, மாதவராஜ் அங்கிளின் சொற்சித்திரங்கள் (குருவிகள் பறந்து விட்டன...), அய்யனாரின் தனிமையின் இசை, உரையாடலினி, கேவி. ஷைலஜா அவர்கள் மொழிபெயர்ப்பில் சிதம்பர நினைவுகள் (மலையாள சிறுகதைகள்).
பழனியப்பா பிரதர்ஸுக்குச் சென்றதும் சிறுவயது நினைவுகள் அலைமோதின. உலக நாடோடிக் கதைகள் வாங்கினேன்.
இருவாட்சி பதிப்ப்பகத்தில் கவிஞர் வெண்ணிலாவின் "பெண் எழுதும் காலம்" வாங்கினேன். செம்மலர் இதழில் இவரது எழுத்துக்களைப் படித்திருக்கிறேன்.
கீழைக்காற்று: ஏனோ நான் ஒவ்வொரு முறையும் அதிக நேரம் செலவிடுவது இந்தப் பதிப்பகத்தில் தான். இவர்கள் வெளியிடும் நூல்கள் அனைத்துமே மிரட்டலாக இருக்கும். சில சிறு நூல்களைக் கையிலெடுத்தால் நேரம் போவது தெரியாமல் வாசித்து முடித்தே விடுவேன்! இம்முறை அப்படி வாசித்து உடல் நடுங்கியது பிலகிஸ் பானோவின் அநீதிக்கு எதிரான் போராட்டத்தை பற்றிய புத்தகம். வாங்கியவை: "நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை" என்ற கவிதைத் தொகுப்பும், லெனின் வாழ்கிறார் என்ற புத்தகமும்.
பாரதி புத்தகாலயம். இதுவும் மனதுக்கு நெருக்கமான ஒரு பதிப்பகம். மாதவராஜ் அங்கிள் எழுதிய சே குவேரா பற்றிய புத்தகமும் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் "அரசியல் எனக்குப் பிடிக்கும்" புத்தகமும் தொடர்ந்து பதிப்பாகிக் கொண்டு வருகின்றன. சந்தோஷமாக இருந்தது.
மேலும் குழந்தைகளுக்காகக் குறந்த செலவில் ஏராளமான சிறு புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார்கள்.கைநாட்டுச் சித்திரங்களுடன் அழகிய வண்ணங்களில் "தம் தம் தம்பி - தங்கி" புத்தகத் தொகுப்பு மழலைகளுக்கு ஏற்றது. முல்லை பரிந்துரைத்த "ஆயிஷா" அருமையான புத்தகம். குழந்தைகளைக் கொண்டாடுவோம், ச. தமிழ்ச்செல்வனின் இருளும் ஒளியும், சிங்கிஸ் ஐத்மத்தாவின் "முதல் ஆசிரியர்", அப்புறம், குழந்தைக்குக் கதை சொல்லலாமென்று நிலவும் குரங்கும், ஐந்து சீன சகோதரர்கள், ஆகியவை வாங்கினேன்.
Navneet publishers ல் குழந்தைகளுக்கான நிறைய activity books ம் ஆங்கிலக் கதைப் புத்தகங்கள் மற்றும் charts, board books கிடைக்கின்றன.
Rare books library - பெயரைப் பார்த்து ஆசையுடன் சென்றால் ஏமாற்றம் தான். It's just an old books stall. அது கூடப் போகட்டும், வளாகத்துக்கு வெளியில் நடைபாதையில் பத்து ரூபாய்க்கு விறகும் புத்தகங்கள் இங்கு முப்பதிலிருந்து ஐம்பது ரூபாய் வரை. ஏமாந்து விடாதீர்கள். :) குழந்தைகளுக்கான board books கூட நடைபாதையிலேயே அழகாய் வாங்கலாம்.
உண்மையில் rare books என்று பழைய வார மாத இதழ்கள், குழந்தைகள் பத்திரிகைகள், (ஹ்ம்.. ரத்னபாலா....) கையெழுத்துப் பிரதிகள் போன்றவை எங்குமே கிடைக்கவில்லை.
நியூ செஞ்சுரி புக்ஸ் ல் பல காலமாய் நான் கேட்டுக் கொண்டிருந்த, டால்ஸ்டாயின் "புத்துயிர்ப்பு" கிடைத்தது. அருமையான பைண்டிங்கில், கிருஷ்ணய்யாவின் மொழிபெயர்ப்பில்; அள்ளிக் கொண்டேன். எப்போது படிக்க ஆரம்பிக்கப் போகிறேன் என்று தெரியவில்லை.
க்ரியா பதிப்பகத்தில் குட்டி இளவரசன் என்ற சிறு புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தேன். 200 மொழிகளுக்கு மேல் பெயர்க்கப்பட்ட அருமையான நூல், சிறுவர் முதல் பெரியவர்கள் வரைப் படித்துச் சிந்திக்க விஷயம் உள்ளது என்று சிலாகித்து வாங்க வைத்து விட்டார்கள். வீண் போகவில்லை. மிக வித்தியாசமான அருமையான புத்த்கம். (படித்து விட்டுத் தான் சொல்கிறேன்) வாங்கலாம்.
கண்காட்சி மிக அருமையாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
சில யோசனைகள்:
வீட்டிலிருந்து ஒரு பெரிய துணிப்பையை எடுத்துச் செல்லுங்கள். பல பதிப்பகங்களில் வாங்கிய புத்த்கங்களைத் தனித்தனிக் கவர்களில் சுமந்து செல்வது கஷ்டமாக இருக்கும்.
நிர்வாகத்தினருக்கு: டிக்கெட் கொடுக்கும் இடத்தில், கேட்பவர்களுக்கு இரவலாக ஒரு சாக்குப் பை (Big shopper) கொடுக்கலாம். (வாடகைக்குத் தான்!)
முல்லைக்கு ட்ராலியே வேண்டி இருக்கும்! அப்படி ஒரு புத்தகப் ப்ரியை :)
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மட்டுமே கான்ட்ராக்ட் எடுத்திருக்கிறார்கள். தரம் ஓகே என்றாலும் விலை ரொம்ப அதிகம். நியாயமான விலையில் தரமான உணவளிக்கக் கூடிய ஒன்றுக்கு மேற்பட்ட கேட்டரர்ஸுக்குக் கொடுக்கலாமே. (முன்பு அப்படித்தான் இருந்ததாக ஞாபகம்.)
முல்லையின் வாசிப்பு அனுபவம் ஆழமாக இருந்தது. பல நல்ல பதிப்பகங்களையும் அருமையான நூல்களையும் எனக்கு அறிமுகம் செய்தார். ஜோவின் ஆர்வம் சரித்திரப் புத்த்கங்கள், self help books, மேலும் அவர் துறைக்குச் சம்பந்தமான டெக்னிக்கல் புத்த்கங்கள் என்று இருந்தது.
இருவேறு ரசனைகள் உடையவர்களுடன் இரு முறை சென்றது சுவாரசியமாக இருந்தது.
21 comments:
நிறைய புத்தகங்கள் வாங்கினீர்கள் போல..இரவல் தர முடியுமா :)
இனிமையான பகிர்வு.
ம்ம்ம்...கலக்குங்க!
ம்... உங்களோடு வந்திருந்தால் இன்னும் நிறைய நல்ல புக்ஸ் வாங்கியிருக்கலாம் போல இருக்கே!!!
அன்புடன் அருணா said...
ம்ம்ம்...கலக்குங்க!
வழிமொழிகிறேன்.
:))
கலக்குங்க!
புத்தகங்களை வாங்கியதற்கு நன்றி தீபா..விற்பனை நன்றாக இருப்பதாக வம்சியிலிருந்து அழைப்பு வந்தது. மிக்க மகிழ்ச்சி
ஹேய் தீபா..நிஜமாவே ஜாலியா இருந்தது..அதுவும், கட் அடிச்சிட்டு இஷ்டத்துக்கு சுத்தினது :-))))
நான் வாங்கின குழந்தைகள் புத்தகங்களுக்கு இவ்ளோ பில்டப்பா! :-)) ரொம்ப பெருந்தன்மைதான் மேடம் உங்களுக்கு!
நல்ல விவரிப்பு.
சென்னை கீழ்பாக்கத்தில் குடியிருந்த வரை பல முறை சென்று வருவோம்.
உங்கள் பதிவுகளைப் படிக்கும் பொழுது ஏக்கமும் அந்தக்கால நினைவும் ஒரு சேர வருகிறது :)
படித்தபின் வர இருக்கும் பதிவுகளுக்காகவும் வாழ்த்துகள்.
நன்றி பூங்குன்றன்!
நன்றி விழியன்!
நன்றி அன்புடன் அருணா!
:)
நன்றி அமுதா!
எதுக்கு இந்தப் பிட்டு?? ;-)
நன்றி அமித்து அம்மா!
:)
நன்றி நான் ஆதவன்!
நன்றி இராதாகிருஷ்ணன்!
நன்றி அய்யனார்!
வியப்பேதுமில்லை... நீங்கள் அடையப்போவது இன்னும் அதிக உயரங்களை. மனமார்ந்த வாழ்த்துக்கள்!
நன்றி முல்லை!
பில்டப்பெல்லாம் இல்லை. உண்மையைத் தான் சொன்னேன் மேடம்! :)
நன்றி செந்தில்வேலன்!
உங்கள் ஏக்கம் புரிகிறது.
மிக்க நன்றி டாக்டர் ருத்ரன்!
”வாங்கியது சரி..ஒழுங்காக எல்லாவற்றையும் படித்து விட்டும் பதிவு போடு” என்று சொல்வது போலிருக்கிறது! :-)
செய்கிறேன் ஸார்!
காலையிலேயே சென்று விட்டதால் மாலையில் நடைபெற இருந்த உங்கள் பேச்சைத் தான் மிஸ் பண்ணி விட்டோம். :-(
Nice post,
I wish that people should start use Trolley to purchase books.
If 25% of Pothys, Chenai silks crowd turned to Book exhibition that will be good news.
நேற்றுதான் நான் சென்று வந்தேன். இன்னொரு முறை செல்லவேண்டும் போல இருக்கு.
உற்சாகமான பதிவு.
ஐத்மாத்தவின் முதல் ஆசிரியன், டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு எல்லாம் படித்து இருபது வருடங்களுக்கும் மேலிருக்கும். திரும்ப ஒருமுறை படிக்க வேண்டும்.
சரி... நான் வரும்போதும் புத்தகக் கண்காட்சிக்கு இன்னொருமுறை வருவாய்தானே?
நன்றி குப்பன்_யாஹூ!
நன்றி ரோமியோ பாய்!
நன்றி அங்கிள்!
:-) ஆசை தான். உங்களுக்குத் தொந்தரவில்லை என்றால்.
மகிழ்ச்சி தீபா.
உன் பதிவு வழியே புத்தக கண்காட்சியை பார்த்த உணர்வு.
இனி நிறைய பதிவுகள் வரும் என எதிர்பார்க்கலாமா??
நன்றி அம்பிகா அக்கா!
தெரியவில்லை... :)
பாரதி புத்தகாலயம் பதிப்பக முகவரி அல்லது இணைய முகவரி கிடைக்குமா?
Post a Comment