Wednesday, December 30, 2009

உதிரிப்பூக்கள் - 31/12/09

ஊருக்குப் போய் விட்டு வ‌ந்தோம். ஆஹா, ஏழு நாட்க‌ள் சென்னையை முற்றிலும் ம‌ற‌ந்து வேறொரு உல‌க‌த்தில் இருந்து விட்டு வ‌ந்த‌து போலிருந்த‌து.

ஒன்றும் பெரிதாக‌ இல்லை. குடும்ப‌த்தில் ஒவ்வொரு வேளையும் அனைவ‌ரும் ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிட்ட‌து, அர‌ட்டை அடித்த‌து, குழ‌ந்தைக‌ளின் ஒவ்வொரு அசைவையும் பேச்சையும் குடும்பமே க‌வ‌னித்து ம‌கிழ்ந்த‌து, வாச‌ல் தெளித்துக் கலர் கோல‌ம் போட்ட‌து, அத்தை அதிர‌ச‌ம் சுட உத‌வியாக‌ மாவு த‌ட்டிக் கொடுத்த‌து, அவ்வளவு ஏன், மொட்டைமாடியில் காய்ந்த‌ துணிக‌ளை அவ‌ச‌ர‌மில்லாம‌ல், காற்று வாங்கிக் கொண்டே ம‌டித்த‌து கூட‌ பேரின்ப‌மாக‌ இருந்த‌து.

நேஹாவை அவளது தாத்தா, பாட்டி, அத்தை, மாமா , சித்தி, சித்தப்பா, அத்தாச்சி, தாத்தா, பெரியம்மா, பெரியப்பா, அக்கா, அண்ணா, என்று உறவுகளின் அன்பில் நனைய விட்டதும், அவ‌ள் எல்லாரையும் முறை சொல்லி அழைக்கப் பழகிவிட்டதும் சொல்லிலட‌ங்கா சந்தோஷங்கள்! தரையிலிறங்கியாயிற்று இன்று! ஹூம்!

புத்தகக் கண்காட்சி
ஆவ‌லுட‌ன் எதிர்ப்பார்க்கிறேன் . முத‌ல் முறை நான் சென்ற‌து அக்காவுட‌ன் தான். அக்கா ப‌டித்த‌ க‌ல்லூரியில் தான் அப்போது கண்காட்சி ந‌ட‌க்கும். எட்டு வ‌ய‌தான் என்னை அழைத்துச் சென்று ப‌ழ‌னிய‌ப்பா பிர‌தர்ஸ் ஸ்டாலில் கதைப்புத்த‌க‌ங்க‌ள் வாங்கிக் கொடுத்து (”எல்லாத்தையும் வீட்டுக்குப் போன‌வுட‌னே ப‌டிச்சுத் தீர்த்துடாதே. ஒவ்வொண்னா மெதுவா ப‌டி!”) கேன்டீனில் ஐஸ்க்ரீமும் ம‌சாலா தோசையும் வாங்கிக் கொடுத்த‌து நினைவுக்கு வ‌ருகிற‌து.
ப‌ள்ளியிலிருந்து ஒரு முறை சென்றிருந்தோம்; க‌ண்காட்சி திற‌ப்பு விழாவில் சேர்ந்திசை பாடுவதற்காக. "உண்மை அழ‌கு" என்ற பாட‌ல். பின்ன‌ணி இசையோடு பாட‌ல் முழுதும் நினைவிருக்கிற‌து. அப்போது செயின்ட் எப்பாஸ் ப‌ள்ளியில் நட‌ந்த‌து. பிற‌கு ப‌ல‌ ஆண்டுக‌ள் செல்ல‌ இய‌ல‌வில்லை. 2003க்குப் பின் தொடர்ந்து சென்றேன். க‌ட‌ந்த‌ இரு ஆண்டுக‌ளாக‌ மீண்டும் இடைவெளி.

இந்த ஆண்டு ப‌திவுல‌க‌ ந‌ண்ப‌ர்க‌ள் ப‌ல‌ரின் ப‌டைப்புக்க‌ள் வெளிவ‌ருவ‌தில் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். படைப்பாளிகளாகப் பரிணமித்திருக்கும் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்க‌ள்!
ஒவ்வொருமுறையும் கை நிறைய‌ புத்த‌க‌ங்க‌ளோடு தான் திரும்ப‌ வேண்டுமென்று நினைப்பேன். ஆனால் தேன் குடத்தினுள் விழுந்து மயங்கிய‌ வண்டு கணக்காய், கடல் போல் குவிந்த புத்தகங்களைப் பார்த்துப் பிரமித்து விட்டு வீட்டுக்கு வ‌ந்த‌தும், இவ்வ‌ள‌வு தானா வாங்கினோம் என்று ஏக்க‌ம‌டைவேன். இம்முறை அதை மாற்ற‌ வேண்டும்!

கார்க்கியின் தாய்
இந்த‌ நாவலை ebookகாக‌ ப் ப‌டித்து முடித்து வெகு நாட்க‌ளாகின்ற‌ன‌. ப‌கிர‌த்தான் ‌சமய‌ம் கிடைக்க‌வில்லை. படித்து முடித்த கையோடு ஆங்கிலத்தில் ஒரு பதிவு எழுதினேன். அந்த இளைஞர்களைப் பற்றிப் படிக்கையில் பெருமையாகவும் கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது. அவர்கள் எத்தகைய உலகத்துக்காகப் போராடினார்களோ அது இன்னமும் நிறைவேறவில்லை. ஆனாலும் போராடுவ‌தற்கும் புரட்சிக்குமான‌ இட‌ம் சிறிதும் இல்லாமல் இன்றைய ச‌முதாய‌ம் மழுங்கடிக்கப் ப‌ட்டுள்ள‌தோ என்று ம‌ன‌ம் வெதும்புகிற‌து.
ராதிகா (தாய்), பா.விஜ‌ய் (பாவ ‌ல்) ந‌டிக்க‌ க‌லைஞ‌ர் எழுதிய‌ தாய் காவிய‌ம் திரைப்ப‌ட‌மாக‌ வெளிவ‌ர‌ப்போவ‌தாக‌ இணைய‌ செய்திக‌ள் அறிவிக்கின்ற‌ன‌. பார்ப்போம்!

இன்னொரு புதிய ஆண்டு
Roller coaster ride என்பார்க‌ளே அதைப் போல் தான் இருநத‌து க‌ட‌ந்த‌ ஆண்டு! ப‌ல‌வித‌மான‌ புது அனுப‌வ‌ங்க‌ள். முக்கியமாக என் மகள் நேஹா நடக்கத் தொடங்கியதும் பேசத்துவங்கியதும் இந்த ஆண்டில் தான்! அது போதாதா இவ்வாண்டின் முழு நிறைவுக்கு? :)
நானும் ப‌திவெழுத‌ வ‌ந்து ஓராண்டு நிறைவுறுகிற‌து. இன்னும் எதையும் ஒழுங்காக‌ எழுத வில்லையென்றாலும், த‌மிழ் வாசிப்பை மீண்டும் உயிர்ப்பித்ததற்கும், அற்புத‌மான நட்புகள் கிடைத்ததற்கும் ப‌திவுல‌க‌ம் தான் கார‌ண‌ம். ந‌ன்றி ப்லாக்க‌ர்.காம்!

அனைவ‌ருக்கும் ம‌ன‌ம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்க‌ள்!

16 comments:

அமிர்தவர்ஷினி அம்மா said...

என் மகள் நேஹா நடக்கத் தொடங்கியதும் பேசத்துவங்கியதும் இந்த ஆண்டில் தான்! அது போதாதா இவ்வாண்டின் முழு நிறைவுக்கு? :)


அதானே :)

மக்கட்செல்வத்தின் மழலை மொழி கேட்பதைவிடவும் பேரானந்தம் என்னவிருக்கிறது வாழ்வில்?

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

அப்போது செயின்ட் எப்பாஸ் ப‌ள்ளியில் நட‌ந்த‌து //


நான் முதன் முதலில் சென்ற புத்தககண்காட்சி செயிண்ட் எப்பாஸ் ஸ்கூல்தான், எங்க ஸ்கூல்ல இருந்துதான் அழைச்சிக்கிட்டு போனாங்க.

அமுதா said...

/*என் மகள் நேஹா நடக்கத் தொடங்கியதும் பேசத்துவங்கியதும் இந்த ஆண்டில் தான்! அது போதாதா இவ்வாண்டின் முழு நிறைவுக்கு? :)
*/
தாய்மையின் பூரிப்பு :-)

ரொம்ப நாளா ஆளைக் காணோம் நிறைய எழுதுங்க..

புத்தாண்டு வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

sathishsangkavi.blogspot.com said...

/*என் மகள் நேஹா நடக்கத் தொடங்கியதும் பேசத்துவங்கியதும் இந்த ஆண்டில் தான்! அது போதாதா இவ்வாண்டின் முழு நிறைவுக்கு? :)
*/

தாய்க்கு தன் குழந்தையின் ஒவ்வொரு பரிணாமத்தையும் ரசிக்கவேண்டும்...

இதில் உள்ள ஆனந்தம் வேறு எதிலும் இல்லை என என் அம்மா கூறுவார்கள்...

உங்கள் பதிவை படித்ததும் எனக்கு இதுதான் ஞாபகம் வந்தது....

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்................

இராஜ ப்ரியன் said...

என் மகள் நேஹா நடக்கத் தொடங்கியதும் பேசத்துவங்கியதும் இந்த ஆண்டில் தான்! அது போதாதா இவ்வாண்டின் முழு நிறைவுக்கு? :) (இந்தாண்டு நிறைய பதிவு எழுதுங்கள்)
மகிழ்ச்சி ............. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும்

அம்பிகா said...

ஒரு பெரிய இடைவெளிக்கு பின் பதிவு. உதிரிப்பூக்களின் மணம் எங்கும்... நிறைந்திருக்கிறது.
இனியப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
தீபா.

அக்னி பார்வை said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

நேசமித்ரன் said...

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

மாதேவி said...

உறவினர்கள் சூழ இருப்பது குழந்தைகளுக்கு மிகுந்த ஆனந்தத்தைத் தரும்.நீங்கள் கூறியதுபோல விரைவில் பேசவும் பழகி விடுவார்கள்.


இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அண்ணாமலையான் said...

அடப்பாவிங்களா.. எல்லாரும் ஒரே வரிய காப்பியடிச்சிருக்கீங்களே? ஏன்?
மழலையின் வளர்ச்சியே
மங்கையரின் மகிழ்ச்சி...
மகிழ் மாந்தர்க்கு
உளம் கனிர் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
(2010-ல உங்க பொண்ணு நல்லா பாட்டு பாடுவாங்க...)சந்தோஷமா?

மாதவராஜ் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். தொடரட்டும் சிந்தனைகள் எழுத்துக்களின் வழியே!!!

Chittoor Murugesan said...

உதிரிப்பூக்கள் என்ற தலைப்பில் தொடர் பதிவு போடலாம்னு ஆரம்பிச்சேண்ணா ( நாமதான் அரைகுறையாச்சே) நீங்க அதே தலைப்புல பதிவு போட்டு "என்னா நைனா தொடர் பதிவு கோவிந்தாவானு கேட்கிறாப்ல இருக்கு. வாழ்த்துக்கள்

Deepa said...

நன்றி அமித்து அம்மா!

நன்றி அமுதா!

நன்றி ராதாகிருஷ்ணன்!

நன்றி சங்கவி!

நன்றி இராஜப்ரியன்!

நன்றி அம்பிகா அக்கா!

நன்றி அக்னிபார்வை!

நன்றி நேசமித்ரன்!

நன்றி மாதேவி!
உண்மை தான்.

நன்றி அண்ணாமலையான்!
ரொம்ப சந்தோஷம்! :)

நன்றி அங்கிள்!

நன்றி சித்தூர். முருகேசன்!
:-)

சந்தனமுல்லை said...

நீண்ட நாட்கள் கழித்து புதிய இடுகை...நினைவுகள்/நிகழ்வுகள் நல்லாருக்கு.புத்தக கண்காட்சி..2000-க்கு பிறகுதான் எனக்கு அறிமுகம். அதுவரை வேலூரில் அல்லது எந்த ஊருக்குச் சென்றாலும் பெரிம்மா வாங்கி வரும் புத்தகங்கள் மட்டுமே!

மாதவராஜ் சாரின் பிங்க் ஜட்டி இடுகை மூலமாகவே தங்கள் பதிவு எனக்கு அறிமுகம். அதைத்தொடர்ந்த மின்மடல் (விவாதம்/அரட்டை?!). மிஷா பற்றிய தங்களின் இடுகையும் நேஹாவின் பிறந்தநாள் பற்றிய இடுகையுமே தங்கள் தளத்தின் தொடர்வாசகராக மாற்றின!


நல்ல இடுகைகளுக்கு நன்றி தீபா! தொடர்ந்து எழுதுங்கள்! புத்தாண்டு வாழ்த்துகள்!

பா.ராஜாராம் said...

அற்புதம்.

புத்தாண்டு வாழ்த்துக்கள் தீபா.