Saturday, January 16, 2010

சிதறல்கள்

அடர்ந்து விரிந்து எல்லையில்லாக் காடு அது.

சீராக்கிச் சுத்தம்செய்து, வேலிகட்டி, பாத்திவெட்டிப்
பூச்செடிகள் நட்டுவைத்தேன்
பறவைகளின் கூக்குரலும் பூங்காற்றும்
வேண்டுமெனக் கனிமரங்களும் சேர்த்துவைத்தேன்

பூக்களெல்லாம் உதிர்ந்த ஒரு மாலைப் பொழுதில்
பறவைகளின் பாட்டுச் சத்தம் மெல்ல அடங்கியது
கொழுகொம்பை வெட்டி எறிந்ததால்
கொடிமலர்களும் வாடி வதங்கித் தலை சாய்த்தன
தீராத வேட்கையிலே வெந்தழிந்த காடதனில்
ஆந்தைகளின் அலறல் மட்டும் நள்ளிரவில் கேட்கிறது
_______________________

வலி
உடைந்த கண்ணாடித் துண்டுகளை வேகமாகப் பொறுக்கி எடுத்தேன்
விரல் நழுவிக் கை கிழித்து இன்னும் தூளாய் உடைந்தது;
இதே போலத் தான் உன் நினைவுகளை ஆவேசமாய் மறக்க நினைப்பதும்
_______________________

ஏன்?
சிலரிடம் ஏதாவது பேசிக்கொண்டே இருக்க வேண்டும் போலிருக்கிறது;
சிலரிடம் ஏதாவது பேசச்சொல்லி கேட்டுக் கொண்டேயிருக்கலாம் போலிருக்கிறது;
என்னுடன் நானே பேசிக்கொள்ளப் பயமாக இருக்கிறது!

16 comments:

அண்ணாமலையான் said...

கடைசி சூப்பர்..

TBCD said...

வாக்கியங்களை இன்னும் கொஞ்சம் குறுக்கினால் இன்னும் நல்லா இருக்கும்மோ

அம்பிகா said...

\\இதே போலத் தான் உன் நினைவுகளை ஆவேசமாய் மறக்க நினைப்பதும்\\

\\என்னுடன் நானே பேசிக்கொள்ளப் பயமாக இருக்கிறது\\

நல்லா இருக்கு தீபா!

மாதவராஜ் said...

இரண்டாவதும், மூன்றாவதும் அருமையாகவும், அடர்த்தியாகவும் இருக்கின்றன. வாழ்வின் புதிர்களை மிக எளிதாகச் சொல்ல வருகிறது. இப்படி உன்னால் நிறைய எழுத முடியும். சந்தோஷமாய் இருக்கிறது.

முதலாவது கவிதையை இன்னும் செதுக்க வேண்டும்.

வாழ்த்துக்கள் கவிதாயினி!

Deepa said...

நன்றி அண்ணாமலையான்!

நன்றி TBCD!
ஆம்..இருக்கலாம்

நன்றி அம்பிகா அக்கா!

நன்றி அங்கிள்!

//வாழ்த்துக்கள் கவிதாயினி!//
இப்படியெல்லாம் கேலி பண்ணா கொடுமை பண்ணாம விட்டுடுவேனா. கொடுமைகள் தொடரும்!
:-)

ரிஷபன் said...

சிலர் கவிதை எழுதிக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது..வரிகள் அவ்வளவு நல்லா வந்திருக்கு..

Deepa said...

நன்றி ரிஷபன்!
You have made my day... :)

ஜான் கார்த்திக் ஜெ said...

//விரல் நழுவிக் கை கிழித்து இன்னும் தூளாய் உடைந்தது;
இதே போலத் தான் உன் நினைவுகளை ஆவேசமாய் மறக்க நினைப்பதும்//

உண்மை தான். .நல்லா இருக்கு!! வாழ்த்துக்கள்!!

பா.ராஜாராம் said...

ரொம்ப பிடிச்சிருக்கு மக்கா.மொத்தமும்.

Dr.Rudhran said...

very good. third was the best.

அமுதா said...

அருமை தீபா.
/*இதே போலத் தான் உன் நினைவுகளை ஆவேசமாய் மறக்க நினைப்பதும்
*/

/*என்னுடன் நானே பேசிக்கொள்ளப் பயமாக இருக்கிறது!*/
மிகப் பிடித்தன

சந்தனமுல்லை said...

நல்லா இருக்கு தீபா...முதல் கவிதை ஒரு அமானுஷ்யமான திகிலான உணர்வை தருது! இரண்டாவது கவிதை நிஜமாவே வலிக்குது! மூணாவது..என்னை வாய் மேல கை விரல் வைக்குது! :-)

அமிர்தவர்ஷினி அம்மா said...

ரெண்டாவது கவிதை டெர்ரர் :)

மூணாவது கவிதை அதகளம்

ஃபார்ம்க்கு வந்துட்டீங்க போல, வாழ்த்துக்கள்

கையேடு said...

நல்லாருக்குங்க..

டெம்ப்ளெட்டும் நல்லா இருக்கு..

முதல்ல தடுமாறிட்டேன்.. உங்க பதிவுதானான்னு..
உங்க குழந்தை பற்றிய குறிப்பைப் பார்த்தவுடன் உறுதி படுத்திகிட்டேன்.. :)

தமிழ் said...

/சிலரிடம் ஏதாவது பேசிக்கொண்டே இருக்க வேண்டும் போலிருக்கிறது;
சிலரிடம் ஏதாவது பேசச்சொல்லி கேட்டுக் கொண்டேயிருக்கலாம் போலிருக்கிறது;
என்னுடன் நானே பேசிக்கொள்ளப் பயமாக இருக்கிறது!/

அருமை

Deepa said...

நன்றி ஜான் கார்த்திக்!

நன்றி ராஜாராம்!

நன்றி டாக்டர். ருத்ரன்!

நன்றி அமுதா!

நன்றி முல்லை!

நன்றி கையேடு!

நன்றி திகழ்!