Saturday, January 9, 2010

அம்மாவின் அலமாரி

அலமாரியை ஒதுங்க வைத்துக் கொண்டிருந்தாள் அம்மா...

சேலைகள், புத்தகங்கள், சின்னச் சின்னப் பெட்டிகள், புகைப்பட ஆல்பங்கள், வாசனைத் திரவியங்கள்....ஒடி வந்த நான் சந்தோஷக் கூச்சலிட்டேன்...

அறை முழுதும் சிதறிக் கிடந்த சாமான்களில் அம்மாவின் வாசனை...

பாவாடைச் சட்டையில் பள்ளியில் நடனமாடிய அம்மாவின் படம், பூப்போட்ட புடவையில் பாட்டியின் படம், முதன் முதலில் அப்பா அம்மாவுக்கு வாங்கிக் கொடுத்த (இப்போது ஓடாத) கைக்கடிகாரம், எஸ்.எஸ். எல்.சி சான்றிதழ் - ஒவ்வொன்றாய்ப் பார்த்து அதிசயித்தேன்...

”கலைக்காதே.. அந்தப் பக்கம் போ...” அதட்டிக் கொண்டே அம்மா வேலையை முடித்தாள்; ஒவ்வொன்றாய் உள்ளே வைத்து அலமாரியை மூடினாள்.

சுத்தமான அறையைப் பார்த்து ஏனோ எனக்கு அழுகை வந்தது.

11 comments:

அண்ணாமலையான் said...

சுருக்கமா நல்லாருக்கு.. வாழ்த்துக்கள்...

அண்ணாமலையான் said...

சுருக்கமா நல்லாருக்கு..

sathishsangkavi.blogspot.com said...

நல்லா எழுதியிருக்கறீங்க....

எங்க வீட்ல நடந்த மாதிரியே இருக்கு....

பா.ராஜாராம் said...

இன்னதென்று சொல்ல இயலாத ஒரு உணர்வு..

nice dheeba.

அம்பிகா said...

அருமையான பதிவு. நல்லாயிருக்கு, தீபா.

காமராஜ் said...

தீபா
நெடுநாளைக்குப்பின் என்னை அதிர வைத்த பதிவு இது.
.........
இதற்கு பதவுரை,பொழிப்புரை அநாவசியம்.
அடர்த்தியான பதிவு.

சந்தனமுல்லை said...

தீபா..ரொம்ப நல்லாருக்கு..எங்க அம்மா,பெரிம்மாவோட பழைய சூட்கேஸை நான் துழாவறதுதான் நினைவுக்கு வருது...அப்புறம் லீஸ்ட்லே இன்னும் ஒண்ணு..பழைய பர்ஸ்லேர்ந்து விழும் சில்லறைக்காசு..ஹிஹி..
ரொம்ப சுவாரசியமா இருக்கிறது...அவங்களோட ஆட்டோகிராஃப் நோட்டுதான்.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாத போஸ்ட்!!

மாதவராஜ் said...

நேற்று உங்கள் வீட்டிலேயே படித்து விட்டாலும், நேரில் சொல்லியதையே இங்கும் எழுதுகிறேன். அருமை. மிக நுட்பமான உணர்வை பதிவு செய்திருக்கிறாய்.

அமுதா said...

சின்னதாக... நெகிழ்வாக... அழகாக...

அமிர்தவர்ஷினி அம்மா said...

சின்னதா சொன்னாலும் மனசில நிக்கிறா மாதிரி சொல்லியிருக்கீங்க.

Radhakrishnan said...

மனதில் ஒரு ஓரத்தில் சின்னதாய் வலியைத் தந்த பதிவு.

தனி மனித உணர்வுகளை அழகாக படம் பிடித்துக் காட்டுகிறது. மிக்க நன்றி.

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எங்களது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.