Friday, January 8, 2010

என் இனிய‌ மீட்ப‌ர்!

வேலி தாண்டி ஓடி விளையாடிய கல்லா மண்ணாக்கள்,
குப்புற‌க் கிட‌ந்து தரை தேயக் கிறுக்கிய சித்திரங்கள்,
"ரெட், ப்ளூ, கிரீன்..."ஆடிய ஸ்கிப்பிங் கயிறுகள்,
சோப்புத் தண்ணீர் கலக்கி ஊதிய கலர் குமிழ்கள்,
தையற்கடையில் துண்டுத் துணி பொறுக்கித் தைத்த பொம்மைச் சட்டைகள்,
தாயாகும் த‌குதி வந்ததும் இழ‌ந்த இதையெல்லாம்...
தாயான‌ பிற‌கு மீட்டெடுக்கிறேன், க‌ண்ணே உன்னாலே!

15 comments:

சந்தனமுல்லை said...

வாவ்!!!

//தாயாகும் த‌குதி வந்ததும் இழ‌ந்த இதையெல்லாம்...//

இது நிறைய சொல்கிறது தீபா!! நல்லாருக்கு!

Dr.Rudhran said...

தாய்மையின் குழந்தைமனம்
சிணுங்கி வளரும்போது
இரண்டுமே சுழல்தான் என்று தெரியும்.

அமுதா said...

அருமை...குழந்தைகள் மீண்டும் நம்மை குழந்தைகளாக மாற்றுகின்றனர்.

PPattian said...

//கல்லா மண்ணா//

ஆஹா!!

//தாயாகும் த‌குதி வந்ததும் இழ‌ந்த இதையெல்லாம்//

:(

//தாயான‌ பிற‌கு மீட்டெடுக்கிறேன், க‌ண்ணே உன்னாலே!//

:)))

மொத்தமாக அழகு...

அம்பிகா said...

கவிதை அழகு..

நேஹா கூட கல்லா, மண்ணா
விளையாட ஆரம்பிச்சாச்சா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை

அமிர்தவர்ஷினி அம்மா said...

சோப்புத் தண்ணீர் கலக்கி ஊதிய கலர் குமிழ்கள், //

:))))))) நாங்க நேத்துதான் வெளாடினோம் இதை


//தாயாகும் த‌குதி வந்ததும் இழ‌ந்த இதையெல்லாம்...//

நிதர்சன வரிகள்.

பா.ராஜாராம் said...

அருமை தீபா!

நேசமித்ரன் said...

நல்லா இருக்குங்க மீள்திருப்புதல்

இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாமே

:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கவிதையின் தலைப்பு பொருந்திவரும் அழகை மிக ரசித்தேன்..

Deepa said...

நன்றி முல்லை!

நன்றி ருத்ரன் ஸார்!

நன்றி அமுதா!

நன்றி புபட்டியன்!

நன்றி அம்பிகா அக்கா!
இன்னும் இல்லை. ஆனால் விளையாடுவேன். :)

நன்றி இராதாகிருஷ்ணன்!

நன்றி அமித்து அம்மா!
ரொம்ப எஞ்சாய் பண்ணிருப்பாளே.

நன்றி ராஜாராம்!

நன்றி கவிக்கிழவன்!

நன்றி நேசமித்ரன்!
இவ்ளோ தான் தோணிச்சு :)

நன்றி முத்துலெட்சுமி!

கே.என்.சிவராமன் said...

மிகப் பெரிய நாவலை, ரொம்ப அழகா சுருக்கியிருக்கீங்க. அதனாலயே மிகப் பெரிய அனுபவத்தை தருது.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

sathishsangkavi.blogspot.com said...

கவிதை அழகு.

Deepa said...

நன்றி பைத்தியக்காரன்!
நன்றி சங்கவி!

மணிகண்டன் said...

ரொம்ப பிடிச்சிருக்குங்க.