காதல்...
மீண்டும் மீண்டும் விழ ஆசை;
தஞ்சாவூர் பொம்மை போல்
உடனே எழும் விசை மட்டும் இருந்தால்...
காதல்…
முதன் முதலில் நீ வந்தபோது மழலை மாறவில்லை எனக்கு
பேதையாய், பெதும்பையாய்,
மங்கையாய், மடந்தையாய்,
பல வண்ணங்களில் வடிவங்களில்
அழகழகாய் வந்து போனாய்
தெரிவை பருவம் நான் தாண்டும் முன்
மூப்படைந்து ஏன் தளர்ந்து போனாய்?
காதல்…
செத்து வீழ்ந்தபின்னும் சலனமின்றி வெறிக்கிறேன்
புதைக்கவோ எரிக்கவோ மனமின்றி
அழுகிவிடும் என்று அறிவு சொன்னாலும்
மீண்டுவராது என்று மனம் சொன்னாலும்
நினைவுகளின் சூட்டினால் உயிரூட்ட முயன்றபடி
22 comments:
நல்லா அழகா ஒத்துழைக்குது தமிழ் உங்களுக்கு.. வாழ்த்துக்கள்..
//மீண்டும் மீண்டும் விழ ஆசை;
தஞ்சாவூர் பொம்மை போல்
உடனே எழும் விசை மட்டும் இருந்தால்...//
Nice lines.
good
/*மீண்டும் மீண்டும் விழ ஆசை;
தஞ்சாவூர் பொம்மை போல்
உடனே எழும் விசை மட்டும் இருந்தால்...
*/
இரசித்தேன்.
//செத்து வீழ்ந்தபின்னும் சலனமின்றி வெறிக்கிறேன்
புதைக்கவோ எரிக்கவோ மனமின்றி
அழுகிவிடும் என்று அறிவு சொன்னாலும்
மீண்டுவராது என்று மனம் சொன்னாலும்
நினைவுகளின் சூட்டினால் உயிரூட்ட முயன்றபடி//
ஆழமான வரிகள்...
எளிதில் உணர்வுகளை ஆட்கொள்கிறது...
சிதறல்களாயிருந்தாலும் முத்துக்களாய் இருக்கிறது கவிதை...
தஞ்சாவூர் பொம்மை என்பது நம் வழக்கத்தில், எதற்கெடுத்தாலும் தலையாட்டும் என்ற அர்த்தம் கொண்டதாக இருக்கிறது. அதைச் சரியாக பொருத்தமுடியாமல் வரிகள் ஆடுகின்றன.... தீபா :)))))
கடைசி கவிதை மிக அருமை தீபா.. உணர்ச்சிகரமா இருக்கு..
நன்றி அண்ணாமலையான்!
நன்றி கார்த்திகா வாசுதேவன்!
நன்றி இராதாகிருஷ்ணன்!
நன்றி அமுதா!
நன்றி அகல்விளக்கு!
நன்றி பாலாசி!
நன்றி அங்கிள்!
அட ஆமால்ல... எனக்கு இது strike ஆகலையே. அனுபவம் உள்ள உங்களுக்குச் சட்டென்று தோன்றி இருக்கிறது. ஹிஹி! ;-)
jokes apart, you are right.
நன்றி முத்துலெட்சுமி!
தஞ்சையை நன்கு தெரிந்தவர்களுக்கு குழப்பமிருக்காது. தஞ்சை தலையாட்டி பொம்மையும் சரி .. தஞ்சையின் சாஞ்சாடும் பொம்மையும் சரி தஞ்சாவூர் பொம்மை தான்.. :)
//செத்து வீழ்ந்தபின்னும் சலனமின்றி வெறிக்கிறேன்
புதைக்கவோ எரிக்கவோ மனமின்றி
அழுகிவிடும் என்று அறிவு சொன்னாலும்
மீண்டுவராது என்று மனம் சொன்னாலும்//
மிகவும் ரசித்த வரிகள்..
தீபா!
//அனுபவம் உள்ள உங்களுக்குச் சட்டென்று தோன்றி இருக்கிறது. ஹிஹி!//
எனக்கும் சந்தோஷமே! ஹா...ஹா..!
முத்துலெட்சுமி!
//தஞ்சையை நன்கு தெரிந்தவர்களுக்கு குழப்பமிருக்காது. தஞ்சை தலையாட்டி பொம்மையும் சரி .. தஞ்சையின் சாஞ்சாடும் பொம்மையும் சரி தஞ்சாவூர் பொம்மை தான்.//
தீபா எழுதுவது தஞ்சைக்கு மட்டுமல்ல. மேலும் வலையுலகமும் தஞ்சைக்கு மட்டுமல்லவே... ):::::
\\தீபா எழுதுவது தஞ்சைக்கு மட்டுமல்ல. மேலும் வலையுலகமும் தஞ்சைக்கு மட்டுமல்லவே..//
அது என்னவோ உண்மைதாங்க :) ஆனா தஞ்சாவூர்பக்கத்துக்காரியா இருந்துகிட்டு இந்த ராக்கிங்க் டாலை ரொம்பபிடிச்சவளா வேற இருக்கிறதால்..டேன்ஸிங் டாலை தெரிஞ்ச அளவு நம்ம மக்களுக்கு ராக்கிங் டாலை தெரியாம இருக்கும் ந்னு சொன்ன சோகத்துல அந்த கமெண்ட்டை அடிச்சிட்டேன்..
நல்லாருக்கு தீபா!
மூணாவது கவிதை படிச்சு சிதறிப் போய்ட்டோம்!! :-)
you are tagged here..http://sandanamullai.blogspot.com/2010/01/blog-post_19.html
தீபா மக்கா,
கலக்குறீங்களே..
intresting,coments..
dheebaa,maathu,mutthulakshmi!
:-))
மூன்றாவது கவிதை மிக மிக மிக பிடித்திருந்தது.
நன்றி முல்லை!
நன்றி ராஜாராம் ஸார்!
நன்றி அமித்து அம்மா!
தீபா,
கவிதை நல்லா இருக்கு.
மாது அண்ணனின் பின்னூட்டம்,
முத்துலெட்சுமியின் விளக்கம் ,
எல்லாமே ரசிக்க முடிந்தது.
அருமை :)))
அழகு தீபா!
குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்ட வாங்கப் படும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளை செட்டியார் பொம்மைகள் என்றும் சொல்வார்களென்று நினைவு,கூடவே டான்ஸிங் டால்கள் கீழே விழுந்து விசையுடன் எழுவதில்லையே,அவை தலையை மட்டுமே ஆட்டக் கூடியவை,அப்படி இருந்தும் தலையாட்டி பொம்மைகள் என்றதும் இந்த செட்டியார் பொம்மைகள் தான் சட்டென்று நினைவிலாடும் .ஆகவே வரிகள் பொருத்தமாய் இருப்பதாகத் தான் தெரிகிறது.
Post a Comment