சிலேட்டில் தப்பாக எழுதி எழுதி அழித்த திட்டுக்கள்
பகலெல்லாம் விளையாடிய கல்லாங்காய்கள், சொப்பு சாமான்கள்
அழுது கொண்டே டூ விட்ட தோழியின் முகம்
ஃபார்முலாக்கள், ரெக்கார்டு நோட்டின் கோடுகள், எண்ணற்ற குறியீடுகள்
சீட்டுக்கட்டு ராணி, ராஜா, ஜாக்கி
ரசித்துப் பார்த்த படத்தின் பாடல் காட்சி
காலையில் விளக்க வேண்டி சிங்கில் போட்டிருக்கும் அழுக்குப் பாத்திரங்கள்
குழந்தையின் சிரிப்பும் அழுகையும்
இப்போதெல்லாம்...
எழுத்துக்கள்...வண்ண வண்ணத் திரைகளில், விதவிதமான அச்சு வடிவங்களில், கவிதைகள், கதைகள், நெஞ்சை வருடும் நினைவுகள்,
முகமறியா எழுத்துக்களுடன் பரிமாறும் உணர்வுகள், இனம் புரியா நெகிழ்வுகள்...
கொண்டாடுவோம் இந்த அழகிய உறவுப்பாலத்தை.
பேசுவோம், வாழ்த்துவோம், கற்போம், கற்பிப்போம், சிரிப்போம், சிந்திப்போம்.
நல்ல விவாதங்களை வளர்ப்போம்!
வேண்டாத விவாதங்களை மறப்போம் மன்னிப்போம்! ப்ளீஸ்!
:-)
பி.கு: இது என் ஐம்பதாவது பதிவு
32 comments:
வாழ்த்துக்கள், தீபா.
50 வாழ்த்துக்கள்.
\கொண்டாடுவோம் இந்த அழகிய உறவுப்பாலத்தை.
பேசுவோம், வாழ்த்துவோம், கற்போம், கற்பிப்போம், சிரிப்போம், சிந்திப்போம்.
நல்ல விவாதங்களை வளர்ப்போம்!
வேண்டாத விவாதங்களை மறப்போம் மன்னிப்போம்! ப்ளீஸ்!\
இதுவே நலம்!
50-க்கு வாழ்த்துகள்!
அது போன பதிவு...இது இந்த பதிவு!
;-))
நல்லா எழுதுறீங்க.. வாழ்த்துக்கள்!
தீபா,
ஒரு சிறப்பு மிக்க ஐம்பதாவது பதிவு வேற ஏதாவது எழுதக்கூடாதா ?
ஏன் ?
:(
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
//இப்போதெல்லாம்...எழுத்துக்கள்...வண்ண வண்ணத் திரைகளில், விதவிதமான அச்சு வடிவங்களில், கவிதைகள், கதைகள், நெஞ்சை வருடும் நினைவுகள், முகமறியா எழுத்துக்களுடன் பரிமாறும் உணர்வுகள், இனம் புரியா நெகிழ்வுகள்...கொண்டாடுவோம் இந்த அழகிய உறவுப்பாலத்தை.
பேசுவோம், வாழ்த்துவோம், கற்போம், கற்பிப்போம், சிரிப்போம், சிந்திப்போம்.நல்ல விவாதங்களை வளர்ப்போம்!வேண்டாத விவாதங்களை மறப்போம் மன்னிப்போம்!//
ரொம்ப நல்லா வார்த்தைகளை தேர்வு செய்து எழுதி இருக்கீங்க தீபா...
ஐம்பதாவது முத்திரை பதிப்புக்கு வாழ்த்துக்கள்....
50க்கு வாழ்த்துக்கள்...இன்னும் நிறைய எழுதுங்கள்
நன்றி rapp!
தீபாதேன்!
முத்துராமலிங்கம்!
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!
முல்லை!
:-(( உசுப்பேத்தி உடம்பை ரணகளமாக்கிட்டு இப்போ நல்லா சிரி!
உன்னை அப்புறமா கவனிச்சுக்கறேன்.
:-))
நன்றி தமிழ் பிரியன்!
வாசு ஸார்!
சட்டியில் இருக்கறது தானே அகப்பையில் வரும்! :-) பதிவு போட்டப்புறம் தான் யதேச்சையா பார்த்தேன் ஐம்பதாவதுன்னு. இல்லாட்டியும் இது தான் போட்டிருப்பேன்!
நன்றி தண்டோரா!
நன்றி நர்சிம்!
50, ஐநூறாகி - ஐநூறு ஐந்தாயிரமாகி - ஐந்தாயிரம், ஐம்பதாயிரமாகி - ஐம்பதாயிரம், ஐந்து லட்சமாகி - ஐந்து லட்சம், ஐம்பது லட்சமாகி - ஐம்பது லட்சம், ஐந்து கோடியாகி - ஐந்து கோடி....
வாழ்த்துகள்.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
ஒரு வேண்டுகோள்.
51வது பதிவாக சாதத் ஹசன் மண்ட்டோவின் சிறுகதை மொழிபெயர்ப்பை எதிர்பார்க்கிறேன்.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
வாழ்த்துகள் சகோதரி.
வாழ்த்துக்கள், தீபா.
முகமறியா எழுத்துக்களுடன் பரிமாறும் உணர்வுகள், இனம் புரியா நெகிழ்வுகள்...
Super
கற்போம், கற்பிப்போம், சிரிப்போம், சிந்திப்போம்.நல்ல விவாதங்களை வளர்ப்போம்!வேண்டாத விவாதங்களை மறப்போம் மன்னிப்போம்! ப்ளீஸ்!:-)
Nalla sindhanai.......
Do feel free to visit my blogspots.
www.jokkiri.blogspot.com
www.edakumadaku.blogspot.com
:) வாழ்த்துக்கள்! :)
நான் என்ன தீபா உன்னை ஏத்தி விட்டேன். :)))
நான் இதில் எதுவும் பாயிண்ட்ஸ் கொடுத்ததா ஞாபகம் இல்லையே.
எனக்கு எதுக்கு credits?!
நல்ல பகிர்வு. 50வது பதிவுக்கு வாழ்த்துகள்.
//பேசுவோம், வாழ்த்துவோம், கற்போம், கற்பிப்போம், சிரிப்போம், சிந்திப்போம்.
நல்ல விவாதங்களை வளர்ப்போம்!//
நல்ல கருத்து.
வாழ்த்துக்கள்...
தொடரட்டும் உன் எழுத்துக்கள்
நன்றி பைத்தியக்காரன் சார்!
நன்றி ஜமால்!
நன்றி R.Gopi!
நன்றி மணிப்பக்கம்!
நன்றி உயிரோடை!
நன்றி அங்கிள்!
முல்லை, அது சும்மா, உங்கள் வ்டிவேலு டயலாக்குக்கு அதே பாணியில் கௌண்டர்!
jeep writing and try writing a series which can become a book as a collection, that is in one style or one theme. you have the potential to do more.
congratulations on fifty works, may this be the beginning of more.
50 பதிவுக்கு வாழ்த்துக்கள்.
\கொண்டாடுவோம் இந்த அழகிய உறவுப்பாலத்தை.//
well said.
ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
அக்கா,50 வது பதிவுக்கு வாழ்த்துகள், எங்க ஐயா போல் நீங்கள் நிறைய எழுத வேண்டும், ஐயா தான் என் மானசீக குரு, இன்றைக்கு நான் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்றால் அதுக்கு ஐயா தான் காரணம், ஐயாவுடைய எல்லா எழுத்துக்களையும் (65 புத்தகங்கள்) இந்த என் சிறிய வாழ்க்கையில் படிக்க முடிந்தது என் பாக்யம், வரம். ஐயாவின் மீதான என் நேசம் வார்த்தைகளால் அவ்வளவு எளிதாக சொல்லிவிட முடியாதது.
நீங்கள் நிறைய எழுத மறுபடியும், என் வாழ்த்துகள் வணக்கங்கள்.
வாழ்த்துகள் தீபா:)
வாழ்த்துக்கள்
50 தாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
அதே போலவே இருப்போம்!
ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்
ரசனையான எழுத்துங்க உங்களுக்கு .....
வாழ்த்துக்கள் தீபா,
சரியா வரிசைப்படுத்தி இருக்கீங்க.
வாழ்த்துக்கள் தீபா,
உங்களது எண்ணம் நிறைவேறட்டும்.
எனது எண்ணமும் அதுவே...
50-க்கு வாழ்த்துகள்
வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த நன்றி!
(தாமதத்துக்கு வருந்துகிறேன்!)
ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகள். கலந்துரையாடல் இருப்பின் விவாதத்திற்கு வழியிருக்காது. தொடருங்கள்.
அன்பு தீபாவுக்கு வாழ்த்துகள்.
இன்று தான் இந்த பதிவை பார்க்கிறேன்.
மேலும் பல ஆக்கப்பூர்வமான பதிவுகள் எழுதி வெற்றியடைய வாழ்த்துகள்.
Post a Comment