Friday, June 5, 2009

32 கேள்விகள் - சங்கிலிப் பதிவு, மற்றும் தீக்கதிர்

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
தீபாவளி அன்று பிறந்ததால். ரொம்பப் பிடிக்கும்.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?
Bipolar disorder இருக்குமோன்னு பயப்படற அளவுக்கு mood swings இருக்கற ஆளு நான். நான் அழறதுக்கும் சிரிக்கறதுக்கும் கணக்கே கிடையாது, பெரிசா காரணமும் கிடையாது!

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
கையெழுத்து ஓகே. கையொப்பம் ரொம்பப் பிடிக்கும்.

4. பிடித்த மதிய உணவு என்ன?
ஒன்றுக்கு மேற்பட்ட காம்பினேஷன்கள் உள்ளன.
முருங்கைக்காய் சாம்பார், உருளைக்கிழங்கு வறுவல்
வத்தக்குழம்பு+ பாசிப்பருப்பு-கத்திரிக்காய்க் கூட்டு+அப்பளப்பூ
தாளித்து விட்ட தயிர்சாதம்+ஊறுகாய்

சைவத்துல தான் இவ்ளோ லிமிட்ஸ். அசைவம்னா காரசாரமா சமைச்ச எதுவாக இருந்தாலும்!குறிப்பாக, பிரியாணி, மீன்குழம்பு.

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா? இது உண்மையான கேள்வி அல்ல! தொடரை ஆரம்பித்த நிலாவும் அம்மாவும் பதிவில் இருக்கிற உண்மையான கேள்வி: நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?
நட்பு வெச்சுக்கறேனோ இல்லையோ, கண்டிப்பா பகைச்சுக்க மாட்டேன்! (பயமுறுத்தறேனாம்!)

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
அருவியில். கடல் உப்புத்தண்ணில்ல?

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அவர்களின் சிரிப்பு. நல்லாச் சிரிக்கலேன்னா எனக்குப் பிடிக்காது.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடித்தது: உண்மை, குழந்தை உள்ளம் பிடிக்காதது: அதனாலேயே சில சமயம் சின்னப்புள்ளத் தனமா நடந்துக்கறது!

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடித்தது: அன்பு, எனக்கும் சேர்த்து வைத்திருக்கும் நிதானம், பொறுமை, மெச்சூரிட்டி
பிடிக்காதது: அதனாலேயே என்னை ஒன்றும் தெரியாத பாப்பா போல் நடத்துவது

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
அக்கா

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
பச்சை நிற குர்தா. கறுப்பு நிற பைஜாமா.

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
நிசப்தம். நேஹா தூங்குகிறாள்.

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
சிவப்பு!

14. பிடித்த மணம்?
சின்னக் குழந்தை வைத்திருக்கும் எல்லோருக்கும் பிடித்தது, பேப் சோப் அல்லது பவுடர் மணம் தான். எனக்கும் அதே!
மற்றபடி ஜோவின் பெர்ஃப்யூம், தலைக்குக் குளித்தபின் கமழும் ஷாம்பு மணம், மசாலா டீ மணம், நிறைய இருக்கு.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
அகநாழிகை - இவரது கவிதைகளைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. நான் மிகவும் ரசிக்கும் எழுத்து ந்டை இவருடையது. இவரது பின்னூட்டங்களில் உண்மையும் கருத்தாழமும் இருக்கும். இவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாமே என்று தான் அழைக்கிறேன்.
அங்கிள் (மாதவராஜ்) - பிடித்த விஷங்களைப் பற்றித் தனிப்பதிவே போட்டாச்சு. அழைக்கக் காரணம்? சும்மா வம்பிழுக்கலாமேன்னு தான்.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
அமிர்தவர்ஷினி அம்மா - இவரது அமித்து அப்டேட்ஸ் அனைத்தும்.
வித்யா - இவரது ரம்மியமான காதல் பதிவுகள் அனைத்தும்

17. பிடித்த விளையாட்டு?
பேட்மிண்டன், டென்னிக்காய்ட் (பள்ளி நாட்களில்)

18. கண்ணாடி அணிபவரா?
இல்லை.

19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
இயல்பான, யதார்த்தத்திலிருந்து விலகாத ரியலிஸ வகைப் படங்கள்.ஆனால் வாய் விட்டுச் சிரிக்க வைக்கும் படங்களும் உருகி உருகிக் காதல் செய்யும் படங்களுக்கும் கொஞ்சம் விதி விலக்கு!

20. கடைசியாகப் பார்த்த படம்?
எரின் ப்ரோக்கோவிச் (டி.வியில்)

21. பிடித்த பருவ காலம் எது?
குளிர் காலம். சென்னையில் அது வருவதே இரண்டு மூன்று மாதங்களுக்குத் தான். அதை அனுபவிக்காமல் எப்படி?

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
ஏங்க வெறுப்பேத்தறீங்க. புத்தகங்கள் படிச்சு ரொம்ப நாளாச்சு. நேஹா என்னைப் பதிவுகள் பக்கம் வர விடறதே பெரிசு.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
நேஹா பிறந்தது முதல் அவள் படம் தான். மாற்றி இரண்டு மாதங்களாகின்றன.

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம் : நேஹாக்குட்டி பேசுவது, ஜோ வந்திறங்கும் பைக் சத்தம், வெகு நேரமாக மின்சாரம் இல்லாமலிருந்து திடீரென்று வந்ததும் மின்விசிறிகள் இயங்கத் தொடங்கும் சத்தம், கடலலைகள், புல்லாங்குழல்..நிறைய இருக்கு!
பிடிக்காத சத்தம் : அதிக சத்தத்தில் டி.வி, கட்டடங்கள் கட்டும் போது கம்பியடிக்கும் சத்தம், வீதிகளில் மைக் செட்களின் அலறல்கள்.

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
ஹைதராபாத்

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
ம்!

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
மனசாட்சி இல்லாத சுயநலம், இரக்கமின்மை, தற்பெருமை

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம், கொஞ்சூண்டு அகங்காரம்

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
போனது - ஊட்டி, பைக்காராபோக விரும்புவது - சிம்லா

30. எப்படி இருக்கணும்னு ஆசை?
உணர்வுகளைக் கம்மி பண்ணிவிட்டு இன்னும் கொஞ்சம் அறிவு பூர்வமா

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
சொல்லாமல் எதுவும் செய்வதில்லை.
இல்லாம? அப்படி எதுவும் இல்லை.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
அழகானது, சிக்கலானது, அர்த்தமற்றது, பொருள் பொதிந்தது, ஆச்சரியங்கள் நிறைந்தது, அற்பமானது, கருணையானது, குரூரமானது, முரண்பாடுகள் நிறைந்தது - மனிதர்களைப் போலவே

தீக்கதிர் நாளிதழில் (ஜூன் 2, செவ்வாய்) நான் மொழியாக்கம் செய்த “ஒரு மனசாட்சியின் குரல்” பதிவு வெளிவந்துள்ளது. தீக்கதிர் ஆசிரியர் குழுவுக்கும், திரு. மாதவராஜ் அவர்களுக்கும் நன்றிகள்.
http://theekathir.in

26 comments:

Anbu said...

நல்ல பதில்கள் அக்கா

வால்பையன் said...

// உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
தீபாவளி அன்று பிறந்ததால். //

பொங்கலன்னைக்கி பிறந்திருந்தா என்ன பேர் வச்சிருப்பாங்க?

முரளிகண்ணன் said...

\\குளிர் காலம். சென்னையில் அது வருவதே இரண்டு மூன்று மாதங்களுக்குத் தான்\\

இது எப்போ வருது?

சென்னையில ரெண்டே பருவம் தானே
இருக்கு.

சம்மர் & ஹாட் சம்மர்.


நல்ல பதில்கள்

நட்புடன் ஜமால் said...

\\Bipolar disorder இருக்குமோன்னு பயப்படற அளவுக்கு mood swings\\

என்னான்னமோ சொல்லுதிய ...

நட்புடன் ஜமால் said...

\\தீக்கதிர்\\

வாழ்த்துகள்.

நட்புடன் ஜமால் said...

\\மின்சாரம் இல்லாமலிருந்து திடீரென்று வந்ததும் மின்விசிறிகள் இயங்கத் தொடங்கும் சத்தம், \\

செம சிட்சுவேஷன்ங்க இது

நல்ல இரசனை.

Deepa said...

நன்றி தம்பி அன்பு!

//வால்பையன் said... பொங்கலன்னைக்கி பிறந்திருந்தா என்ன பேர் வச்சிருப்பாங்க?//

”தைமகள்”னு வெச்சிருபப்பாங்க

//முரளிகண்ணன் said... சென்னையில ரெண்டே பருவம் தானே
இருக்கு.

சம்மர் & ஹாட் சம்மர்.//

டிசம்பர் ஜனவரி மாசம் இருக்கற சம்மரைத் தான் சொன்னேன்.

வாழ்த்துக்கு நன்றி ஜமால்!

சந்தனமுல்லை said...

//பிடித்த சத்தம் : நேஹாக்குட்டி பேசுவது, ஜோ வந்திறங்கும் பைக் சத்தம், வெகு நேரமாக மின்சாரம் இல்லாமலிருந்து திடீரென்று வந்ததும் மின்விசிறிகள் இயங்கத் தொடங்கும் சத்தம், கடலலைகள், புல்லாங்குழல்..நிறைய இருக்கு!
பிடிக்காத சத்தம் : அதிக சத்தத்தில் டி.வி, கட்டடங்கள் கட்டும் போது கம்பியடிக்கும் சத்தம், வீதிகளில் மைக் செட்களின் அலறல்கள்.//

ரசித்தேன்!


//குறிப்பாக, பிரியாணி, மீன்குழம்பு.//

ஆகா..!!

சந்தனமுல்லை said...

//பிடித்தது: உண்மை, குழந்தை உள்ளம் //

ஹிஹி!

சந்தனமுல்லை said...

சுவாரசியமா இருந்தது தீபா!!
//நட்பு வெச்சுக்கறேனோ இல்லையோ, கண்டிப்பா பகைச்சுக்க மாட்டேன்! (பயமுறுத்தறேனாம்!)//

ரசித்தேன்!

Deepa said...

நன்றி முல்லை!

//பிடித்தது: உண்மை, குழந்தை உள்ளம்
ஹிஹி!//

என்ன சிரிப்பு? உண்மையைச் சொன்னா பொறுக்காதே உங்களுக்கு
:-))

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்க இயல்பு அப்படியே பதில்களிலும் தெரியுது தீபா.

தீக்கதிரில் உங்கள் எழுத்து வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள்

சாரதி said...

// 12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
நிசப்தம். நேஹா தூங்குகிறாள். //


// 32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
அழகானது, சிக்கலானது, அர்த்தமற்றது, பொருள் பொதிந்தது, ஆச்சரியங்கள் நிறைந்தது, அற்பமானது, கருணையானது, குரூரமானது, முரண்பாடுகள் நிறைந்தது - மனிதர்களைப் போலவே //

மேலே உண்மை, பதிலை ரசித்தேன்.

கீழே வாழ்க்கை பற்றிய அருமையான
விளக்கம்.

மணிநரேன் said...

32 - //மனிதர்களைப் போலவே//

நல்லதொரு உவமை.

Dr.Rudhran said...

keep writing you are a natural writer with lovely expressions, best wishes

Deepa said...

அமித்து அம்மா!
சாரதி!
மணிநரேன்!

மிக்க நன்றி

Dr. Rudhran,
Thank you very much.

அகநாழிகை said...

தீபா,
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

என்னை எழுத அழைத்ததற்கு நன்றி.
இன்றைய தினம் பதிவர்கள் டக்ளஸ், ஆ.ஞானசேகரன் இதே தொடர் பதிவிற்கு என்னை அழைத்திருக்கிறார்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

தமிழ் said...

/2. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
அழகானது, சிக்கலானது, அர்த்தமற்றது, பொருள் பொதிந்தது, ஆச்சரியங்கள் நிறைந்தது, அற்பமானது, கருணையானது, குரூரமானது, முரண்பாடுகள் நிறைந்தது - மனிதர்களைப் போலவே/

உண்மை தான்

கொஞ்சம் தலை சுற்றுகிறது

Deepa said...

நன்றி அகநாழிகை!

உமாஷக்தியும் உங்களை அழைத்திருக்கிறார்கள்! :-)

நன்றி திகழ்மிளிர்!

தலை சுற்றுகிறதா? ரொம்ப நல்லது! :-)

Vidhya Chandrasekaran said...

அழகான பதில்கள் தீபா.

Venkatesh Kumaravel said...

BIPOLAR - எல்லா பெண்களுமே கிட்டத்தெட்ட இப்படித்தானா?

தாய்மையின் மென்மை கூடிய சுவாரசியமான பதில்கள்!

மாதவராஜ் said...

பதில்கள் உண்மையாகவும், அழகாகவும் இருந்தன. அபத்தமான கேள்விகளையும், ரசிக்கும்படியாய் மாற்றிவிட்டன. வாழ்த்துக்கள்.

Deepa said...

நன்றி வித்யா.

வெங்கிராஜா,

அவசரப்பட்டு அப்படி ஒரு முடிவுக்கு வந்து விடாதீர்கள். :-)

நன்றி அங்கிள்!
ஆமாம், சில கேள்விகள் அப்படித்தான் இருந்தன இல்லையா?

நர்சிம் said...

//Anbu said...
நல்ல பதில்கள் அக்கா
//

அஃதே...

தீக்கதிருக்கு வாழ்த்துக்கள்!

Deepa said...

நன்றி நர்சிம் அண்ணா!

இராவணன் said...

//அழகானது, சிக்கலானது, அர்த்தமற்றது, பொருள் பொதிந்தது, ஆச்சரியங்கள் நிறைந்தது, அற்பமானது, கருணையானது, குரூரமானது, முரண்பாடுகள் நிறைந்தது - மனிதர்களைப் போலவே//

ம்ம்ம்ம்மம்ம்