Wednesday, May 27, 2009

மே 10 கலந்துரையாடல் - ஆங்கில மொழியாக்கம்

திரு. S.K. இதை என்னிடம் கேட்டுக்கொண்டு பல நாட்களாகின்றன. இப்போது தான் அவகாசம் கிடைத்தது.

இதை நேற்றே எழுதி வெளியிட வேண்டும் என்றிருந்தேன். ஆனால் என் முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்த செய்தி மிகவும் மோசமாக பாதித்திருந்தது. இப்பிரச்னை குறித்த நமது பார்வையும், கலந்துரையாடல்களும் மிகக் குறுகிய வட்டத்தினுள்ளேயே சுழன்றதாகப் பட்டது. அந்த ஒலிக்கோப்புச் சுட்டி என்னைப் பார்த்து நகைப்பதாகத் தோன்றியது.

ஆனால் ஏதாவது ஒரு இடத்தில் இருந்து தானே ஆரம்பிக்க வேண்டும். அதனால் கஷ்டப்பட்டு மனதை ஆற்றுப்படுத்திக் கொண்டேன். ஆனால் அனைத்து வர்க்கக் குழந்தைகள் பாதுகாப்புக்காக, குறிப்பாக அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்காக (அவர்கள் தானே அதிக பாதிப்புக்கு, சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆளாவது) நாம் முற்றிலும் வேறு மாதிரி சிந்திக்க வேண்டும் என்பது புரிந்தது. இந்த “குட் டச் பேட் டச்” எல்லாம் கான்வெண்ட் செல்லும் நமது குழந்தைகளுக்குத் தான் உதவும்.

சுட்டி இங்கே:http://deepajoe.blogspot.com/2009/05/good-touch-bad-touch-seminar-may-10.html
என்னால் இயன்றவரை செய்திருக்கிறேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.

ஆங்கிலத்தில் பின்னூட்டம் இட விரும்புவோர் ஆங்கிலப் பக்கத்திலும், தமிழில் இட விரும்புவோர் இங்கேயேயும் இடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

8 comments:

SK said...

அந்த சேதி படிச்சிட்டு ரெண்டு நாளா எரிச்சல்'ல இருக்கேன். :(

நீங்கள் சொல்வது போல் அடித்தட்டு மக்களுக்கு தான் அதிக பிரச்சனை. முதலில் படித்தவர்கள், நடத்தற குடும்பத்து மக்கள் இதை புரிந்தால் தான் நாம் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும். இந்த விடயங்களை பற்றி இன்னும் படித்தவர்களுக்கே விவரம் தெரியவில்லை என்பது தான் என் ஆதங்கம்.

முடிந்தால் எனக்கொரு ஈமெயில் அனுப்புங்கள். விரிவாக பேசலாம்.

Deepa said...

//முதலில் படித்தவர்கள், நடுத்தர குடும்பத்து மக்கள் இதை புரிந்தால் தான் நாம் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும். //

ஒப்புக்கொள்கிறேன். இதை முடித்து விட்டேன் என்று உங்களுக்கு இமெயில் அனுப்பும் முன் நீங்களே வந்து படித்து விட்டீர்கள். நன்றி SK.

சந்தனமுல்லை said...

நன்றி தீபா! உண்மைதான்..தங்கள் கடந்த இடுகை மனதை பாதித்தது. நீங்கள் சொன்னதுபோல் எல்லா தரப்பையும் சென்றடைய வேண்டியது அவசியம்தான்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆங்கில மொழியாக்கத்திற்கு நன்றிகள்

Vidhya Chandrasekaran said...

நண்பர்களுக்கு ஃபார்வேர்ட் செய்ய உதவியாக இருக்கும் உங்கள் ஆங்கில மொழியாக்கம்.

நர்சிம் said...

தேங்க்ஸ்..(தமிழில் ஆங்கில பின்னூட்டம் இங்கு போடலாம்ல?)

Deepa said...

அனைவருக்கும் நன்றி.
போடலாம் நர்சிம்!

மாதவராஜ் said...

உனது இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
//ஆனால் அனைத்து வர்க்கக் குழந்தைகள் பாதுகாப்புக்காக, குறிப்பாக அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்காக (அவர்கள் தானே அதிக பாதிப்புக்கு, சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆளாவது) நாம் முற்றிலும் வேறு மாதிரி சிந்திக்க வேண்டும் என்பது புரிந்தது.//

மிகச்சரியாகச் சொன்னாய்.