கலை நயத்துடன் வேய்ந்த கீற்றுக் கொட்டகையினுள் கட்டப் பட்ட கொடிகளில் ஒரு சேலை, ஒரு கைலி, சின்னஞ்சிறு ஜட்டிகள் இரண்டு.
சுவரோரமாய் ஈச்சந்துடைப்பம் ஒன்று, அலுமினிய அன்னக் கூடையில் சமையல் பாத்திரங்கள் - சோற்றுப் பானை, கரண்டி, தோசை சட்டுவம் பள பளவென்று விளக்கப் பட்டு மின்னிக் கொண்டிருந்தன.
சிறு சிறு பாலிதின் பைகளில் உப்பு, புளி, மிளகாய்த்தூள், எண்ணெய், தேங்காய்ச் சில்லுகள்...
சாம்பல் நிறைந்த மூன்று செங்கல் அடுப்பில் கொதித்த அந்தக் குழம்பின் வாசனை! ஆஹா...
இருள் கவிகிற நேரம், சோப்பு மணமும் மது நெடியும், குழந்தைகளின் கும்மாளமும், பேச்சும் சிரிப்பும்...
சற்று நேரத்திலெல்லாம், வானமே கூரையாய், கொசுவலைகள் மட்டுமே ஆடம்பரப் பொருளாய் வாழ்க்கை அழகாய் அமைதியாய் ஓய்வெடுக்கத் தொடங்கியது.
பக்கத்து ஃப்ளாட்டுகளில் பைக்குள் வந்திறங்கும் சத்தமும் “கோலங்கள் கோலங்கள்...” சத்தமும் கலந்தடித்துக் கேட்கத் தொடங்கியது.
***********
“என்ன, நம்ம சைட்டுக்குப் போய் பார்த்தியே. வேலையெல்லாம் எப்படி நடந்துட்டிருக்கு? வீடு எப்படி இருக்கு?”
“எந்த வீடு???!!!!!”
12 comments:
“எந்த வீடு???!!!!!”
very well written
தீபா!
அருமையான சொற்சித்திரம். வீடு கட்டுபவர்கள் தங்கியிருக்கிற குடிசையை மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறாய்.
வீடு கட்டுபவர்களுக்கு, அந்த வீடு சொந்தம் கிஐயாது. பட்டு நெய்பவர்களுக்கு அந்த பட்டுச்சேலை சொந்தம் கிடையாது.
Rudhran Sir!
Uncle!
Thanks :-)
“எந்த வீடு???!!!!!”\\
nice ...
//சத்தமும் “கோலங்கள் கோலங்கள்...” சத்தமும் கலந்தடித்துக் கேட்கத் தொடங்கியது.//
9 மணிக்கான குறியீடு அருமை.
நிதர்சனம்.
அருமையாக இருக்கிறது தீபா! காட்சிகள் கண்முன் விரிகின்றன!
//பக்கத்து ஃப்ளாட்டுகளில் பைக்குள் வந்திறங்கும் சத்தமும் “கோலங்கள் கோலங்கள்...” சத்தமும் கலந்தடித்துக் கேட்கத் தொடங்கியது.//
ரசித்தேன்!
சின்னதாக அழகான கதை
/*சற்று நேரத்திலெல்லாம், வானமே கூரையாய், கொசுவலைகள் மட்டுமே ஆடம்பரப் பொருளாய் வாழ்க்கை அழகாய் அமைதியாய் ஓய்வெடுக்கத் தொடங்கியது.
பக்கத்து ஃப்ளாட்டுகளில் பைக்குள் வந்திறங்கும் சத்தமும் “கோலங்கள் கோலங்கள்...” சத்தமும் கலந்தடித்துக் கேட்கத் தொடங்கியது.*/
அருமை
chanceless deepa
அப்படியே கண்முன் விரிகிறார் போன்ற காட்சி.......
“எந்த வீடு???!!!!!”
நச்..
அழகு மிளிரும் விவரிப்பு தீபா. ரசித்தேன்.
அருமை தீபா. இந்த அழகு போதும். கோலங்கள் முழங்கும் வீட்டில் கூடக் கிடைக்காது இந்த அமைதி. கண்முன்னே விற்கும் ஓவியம் இந்தக் கீற்றூக் கொட்டகை.
very good.
Whenever you find time, please have a look at my blog http://www.bharathinagendra.blogspot.com and offer your comments there. Thanks
ஜமால்!
நர்சிம்
முல்லை!
அமுதா!
அமிர்தவர்ஷினி அம்மா!
வித்யா!
வல்லிசிம்ஹன்!
Nagendra Bharathi!
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Post a Comment