Saturday, May 9, 2009

குழந்தை வளர்ப்பு - டாக்டர் ருத்ரன்,டாக்டர் ஷாலினி - மே 10.

ரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. ஆம் வலையுலக நண்பர்களின் ஆர்வத்தையும் செயலாக்கத்தையும் கண்டு.


குட் டச் பேட் டச் என்று நான் எழுதிய பதிவைப் பார்த்து “ஆஹா இது சீரியஸான விஷயமாச்சே, இந்தப் பொண்ணு சின்னப்புள்ளத்தனமா ஏதோ எழுதி இருக்கே.. இதைப் பற்றி ஒழுங்கான ஒரு பார்வை ஏற்படணுமே..” என்று நினைத்தார்களோ என்னவோ, அதிரடியாகக் காரியத்தில் இறங்கி, டாக்டர் ருத்ரன், டாக்டர் ஷாலினி ஆகியோரைத் தொடர்பு கொண்டு, இதோ நாளை கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்து விட்டார்கள்.


டாக்டர் ருத்ரனுக்கும், டாக்டர் ஷாலினிக்கும் மற்றும் இதற்கு முக்கிய காரணமாக இருந்த அனைவருக்கும், குறிப்பாக, நர்சிம், SK, லக்கிலுக், அதிஷா, வித்யா, அமிர்தவர்ஷினி அம்மா, சந்தனமுல்லை ஆகியோருக்கு என் மனப்பூர்வமான நன்றி.

நாளை கலந்துரையாடலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

அப்புறம் இன்னொரு விஷயம். இந்த ”குட் டச் பேட் டச்” பதிவை எழுதும் போதே தோன்றிய ஒரு விஷயம். பாலியல் வன்முறைக்கு அதிக அளவில் ஆளாவது நடைபாதை வாழ்மக்களின் குழந்தைகள், கட்டடத் தொழிலாளிகளின் குழந்தைகள், வீட்டு வேலை செய்யும் சிறுமிகள் போன்றோர் தாம். அவர்களைக் காப்பாற்றுவது, அந்த எளிய மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது பற்றியும் நாம் கண்டிப்பாகச் சிந்திக்க வேண்டும்.

மீண்டும் ஒருமுறை, அனைவருக்கும் நன்றி.


தொடர்புக்கு:
லக்கிலுக் : 9841354308

நர்சிம் : 9940666868 (இவரை அழைக்கும்போது விகடனில் வந்த இவரது கதைக்கு வாழ்த்துச் சொல்லிவிடுங்கள்)

அதிஷா : 9884881824

மெயில் அனுப்ப மறந்துவிடாதீர்கள் : weshoulddosomething@googlemail.com


பி.கு: எனது கணினி ஒரு நீண்ட துயிலிலிருந்து இப்போது தான் மீண்டு எழுந்தது. அதனால் தான் இவ்வளவு தாமதம். பொறுத்தருள வேண்டுகிறேன்!

9 comments:

Vidhya Chandrasekaran said...

தீபா
வாழ்த்துகள் முதலில் உங்களுக்கு மட்டும் தான். அப்புறம் நான் ஒன்னுமே பண்ணலீங்க. வெறும் அறிவிப்போட சரி. பெரிய மனுஷங்களே எல்லாம் பார்த்துகிட்டாங்க:)

Dr.Rudhran said...

அன்புள்ள தீபா
உன் பதிவில் தான் இதன் ஆரம்பம், அதனால் உனக்கே இதற்கான முதல் வாழ்த்தும் நன்றியும்.
இவ்வளவு பரபரப்பாக இது எதிர்பார்க்கப்படுவது உள்ளே ஒருவித சலனத்தையே ஏற்படுத்துகிறது.
இது வரை என்னை யாருமே வருகிறாயா என்று கேட்கவில்லை, ஆனால் நான் வரத்தான் போகிறேன்.. இம்மாதிரி விஷயங்களுக்க்கெல்லாம் அழைப்பு தேவையில்லைதான்..ஆனாலும் ஏனோ ஒரு சங்கடம் இருக்கத்தான் செய்கிறது.
இன்னும் பொறுப்பாக..வருவதாஇ அறிவிக்கப்படுபவர்களின் முன் ஒப்புதலோடு இனி வரப்போகும் நிகழ்வுகள் அமைய வேண்டும்.
இது ஒரு கொளரவப்பிரச்சினையல்ல, ஒரு சொளகரியம் சம்பந்தப்பட்ட விஷயம்.
நாளை சந்திப்போம்....ஷாலினியிடமாவது கேட்டு நிச்சயித்து விட்டார்களா என்று உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

Deepa said...

இதைப் பற்ரி முதலில் அறிவித்த பதிவிலேயே உங்கள் பின்னூட்டம் பார்த்து ஏதோ பிசகு நடந்திருப்பது புரிந்தது. சம்பந்தப்பட்டவர்கள் சிலரைத் தொடர்பு கொண்ட போது உங்களுக்குத் தனியே இமெயில் அனுப்பிவிட்டதாகவும் பிசகுக்கு வருத்தம் தெரிவித்து விட்டதாகவும் கூறினார்கள். திரும்பவும் பேசிப் பார்க்கிறேன்.

என் அலைபேசி தொலைந்து உங்கள் நம்பரை இழந்து விட்டேன். எப்படியாவது நானாவது உங்களைத் தொடர்பு கொண்டிருக்கலாம்.
மன்னியுங்கள் ஸார்.

ஆனாலும் உற்சாகத்துடன் பங்கு கொள்ள விரும்பும் உங்கள் பெருந்தன்மைக்கு Hats Off.

Tech Shankar said...


தன் மகனை நனைய விடாமல் தடுத்து தான் நனையும் தாய் - அன்னையர் தின வாழ்த்துகள் - 2009

எம்.எம்.அப்துல்லா said...

நாளை சந்திப்போம் :)

நர்சிம் said...

டாக்டர் ருத்ரன் ஸார், உங்களின் அலைபேசி எண்ணிற்காக இன்னமும் அலைந்து கொண்டிருக்கிறேன்.

லக்கியின் பதிவில் உங்கள் பின்னூட்டம் பார்த்ததும் உங்களுக்கு மடலில்(உங்கள் பதிவில் தரப்பட்டிருக்கும் மெயில்முகவரிக்கு, மன்னிப்புக் கடிதம் அனுப்பினேன் ஸார். எண் இல்லாததால் அழைக்க முடியவில்லை..உங்களுக்கு ஒரு வேளை அந்த மடல்கள் கிடைக்காமல் போயிருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும், மன்னித்து விடுங்கள்.இன்றைய நிகழ்வில் தயவுசெய்து வந்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் ஸார்.

டாக்டர் ஷாலினி மேடம் மெயிலில் கன்பர்மேஷன் கொடுத்திருக்கிறார் ஸார்.

மன்னித்து, இன்று வருகை தாருங்கள்.

Anonymous said...

என்ன இது குளறுபடி..??

டாக்டரின் பெருந்தன்மைக்கு நன்றி...

சந்தனமுல்லை said...

ஹிஹி..என்னங்க என் பெயரையெல்லாம் போட்டு... காமெடி கீமெடி பண்ணலையே! ஒருவேளை நான் ஏதும் செய்யாததுக்காக இருக்குமோ!!

வாழ்த்துகள் உங்கள் முன்முயற்சிக்கு!

SK said...

Its communication error. Thank you Dr. sir.