Monday, May 11, 2009

நிகழ்ச்சி வெற்றி - நன்றியும் வாழ்த்துக்களும்!

பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட நிகழ்ச்சி. வெற்றிகரமாக மிகச் சிறப்பாக நடந்தேறியது.

அழகிய மாலை நேரம். மே மாதத்தின் வெயில் கூட கிழக்குப் பதிப்பகத்தின் ரம்மியமான மொட்டை மாடியில் அன்று அடக்கி வாசித்தது.

கல்லூரி செல்லும் இளம் பெண் தோற்றத்தில் இருந்த இவரா டாக்டர் ஷாலினி? சற்றுத் தாமதமாக வந்த என்னால் முதலில் நம்ப முடியவில்லை. வந்திருந்த இளம் பதிவர்களில் யாரோ பேசுகிறார்கள் என்றே நினைத்தேன்!
ஆனால் அவர் எப்பேர்ப்பட்ட சிக்கலான விஷய்த்தையும் கூட எந்தவொரு தங்கு தடையுமின்றி கண்ணாடி போல் பேசி அவையோரை மொத்தமாகக் கட்டிப் போட்டு விட்டார். நன்றி டாக்டர் ஷாலினி!
டாக்டர் ருத்ரன் அவர்கள் ஷாலினியின் உரைக்கு மேலும் சில முக்கியமான தகவல்களைக் கூறியும், பார்வையாளர்களைக் கேள்விகள் கேட்டுப் பங்கு கொள்ளுமாறு அழைத்தும் நிகழ்ச்சிக்கு மெருகேற்றினார். நன்றி டாக்டர் ருத்ரன்!
குறிப்பெடுக்க ஏதும் கொண்டு வரவில்லையே என்று நினைத்த போது முன் யோசனையுள்ள சிலர் எடுத்து வந்து அழகாகப் பதிவும் செய்துள்ளார்கள். அவர்களுக்கு மிக மிக நன்றி!
சுட்டிகள் இங்கே:

நர்சிம்: http://www.narsim.in/2009/05/blog-post_11.html
Hats off to you. நிகழ்ச்சி நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற ஆர்வமும் anxiety யும் உங்கள் முகத்தில் இறுதி வரை இருந்தது.

Dondu: http://dondu.blogspot.com/2009/05/good-touch-bad-touch.html
நிகழ்ச்சியைக் கலகலப்பாக்கியதுடன் மிகவும் உழைத்துப் பதிவிட்டுள்ளீர்கள். ரொம்ப பயனுள்ளதாக இருக்கும். நன்றி.

சந்தனமுல்லை: பப்புவுக்குச் சொல்வது போல் அழகாகக் குறிப்பெடுத்து நறுக்கென்று பதிவிட்டுள்ளார். நன்றி முல்லை
http://sandanamullai.blogspot.com/2009/05/blog-post_11.html

இந்த நிகழ்ச்சியை மிகவும் எதிர்பார்த்ததற்கு இன்னொரு காரணம் பதிவுலகம் மூலம் அறிமுகமாகி நெருங்கி விட்ட சகபதிவர்களை நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பும் கிடைக்கும் என்று தான்.
உமாஷக்தி, கிருத்திகா, அமித்து அம்மா, சந்தனமுல்லை, வித்யா, ”அகநாழிகை” வாசுதேவன், எம். எம். அப்துல்லா, ஆதிமூலகிருஷ்ணன், கேபிள் சங்கர் ஆகியோரை நேரில் சந்திக்க முடிந்தது குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் குழந்தையை விட்டு விட்டு வந்ததால், நேரமும் ஆகிவிட்டதால் அவசர அவசரமாக அறிமுகப் படுத்திக் கொண்டு விடைபெற்றுக் கொண்டு விட்டேன். பிறிதொரு சந்தர்ப்பத்தில் நிதானமாகச் சந்திப்போம்.

மொத்ததில் மிகவும் பயனுள்ள மாலைப் பொழுதை வழங்கிய நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கும் அழகாக விருந்தோம்பல் செய்த கிழக்குப் பதிப்பகத்துக்கும் இதயப்பூர்வமான நன்றி, பாராட்டுக்கள்.

பி.கு 1: Sweet karam coffee.. இதுவும் நன்றாக இருந்தது :-)
பி.கு 2: முதலில் குழந்தையையும் அழைத்துக் கொண்டு ஜோவுடன் வருவதாக இருந்தது. பின்பு அது சௌகரியப்படாது என்பதால் குழந்தையைத் தான் பார்த்துக் கொள்வதாகச் சொல்லி தோழியுடன் என்னை அனுப்பிவைத்த என் ஜோவுக்கும் நன்றி!

20 comments:

மணிநரேன் said...

குட் டச், பேட் டச் என்று பதிவின் மூலம் ஒரு கருத்தரங்கம் நடைபெற வழிசெய்த தங்களுக்குதான் முதல் நன்றியும் வாழ்த்துக்களும்.

இதனை நடைமுறைபடுத்திய மற்றவர்களுக்கும் அதே நன்றிகளும் வாழ்த்துக்களும்.

மாதவராஜ் said...

இப்படியொரு நிகழ்வு அமைவதற்கு காரணமாயிருந்த உனக்கும், மற்றும் சக பதிவர்ககளுக்கும் என் பாராட்டுக்கள். டாக்டர் ருத்ரன் அவர்களுக்கும், ஷாலினி அஃவர்களுக்கும் நன்றிகள்.

சந்தனமுல்லை said...

தங்களும் வாழ்த்துகளும் நன்றிகளும் தீபா! அநியாயமா என்னை குறிப்பெடுத்த முன்யோசனைக்காரர் லிஸ்டில் சேர்த்துட்டீங்களே..கோச்சுக்க போறாங்க அவங்கல்லாம்! :-) நான் கொண்டு வந்தது 32KB RAM மட்டுமே!!

சந்தனமுல்லை said...

**தங்களுக்கும் - எழுத்துப்பிழைக்கு மன்னிக்கவும்!

ஆ.சுதா said...

எல்லோருக்கும் பாராட்டுக்கள்.
நல்ல விசயம்.

Vidhya Chandrasekaran said...

ஆமாம் தீபா. கொஞ்ச நேரம் பேசமுடியாமல் அவசரமாக விடைபெற நேர்ந்தது:(

அகநாழிகை said...

//சந்திக்க முடிந்தது குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.//

நானும் கூட..

''அகநாழிகை''
பொன்.வாசுதேவன்

butterfly Surya said...

அனைவருக்கும் வாழ்த்தும் பாராட்டும்.

பதிவிற்கும் நன்றி.

Suresh said...

அனைவருக்கும் வாழ்த்துகள்

ராஜன் said...

அனைவருக்கும் வாழ்த்தும் பாராட்டும்.

Deepa said...

மணிநரேன்!
அங்கிள்!
முல்லை!
முத்துராமலிங்கம்!
வாசுதேவன்!
வண்ணத்துப்பூச்சியார்!
Suresh!
ராஜன்!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

கலையரசன் said...

இப்பதிவை பதிந்து,
உணர்வுகளை பகிர்ந்ததற்கு,
நன்றிகள்! வாழ்த்துக்களும்!!
www.kalakalkalai.blogspot.com

நர்சிம் said...

நல்லா எழுதியிருக்கீங்க மேடம். நன்றி..

மாதேவி said...

நடைபெற்ற கருத்தரங்கம் பற்றிய நல்ல தகவல்களைக் கூறியதற்கு நன்றி.

SK said...

அருமையா தொகுத்துட்டீங்க :)

Deepa said...

நன்றி மாதேவி!

Deepa said...

SK அவர்களுக்கு!

நிகழ்ச்சி நடக்க இருந்த சில நாட்களுக்கு முன் இணையத் தொடர்பற்றுப் போயிருந்தேன். அதனால் இந்நிகழ்ச்சிக்குப் பின்புலத்தில் இருந்து பணியாற்றிய உங்களைத் தெரிந்து கொள்ளாமலே போய் விட்டேன். மன்னிக்கவும்.
நன்றிகள் பல.

நட்புடன் ஜமால் said...

தங்களுக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள் சகோதரி.

SK said...

தீபா,

ஒண்ணும் பிரச்சனை இல்லை. இது ஒரு ஆரம்பமே. அடுத்து வரும் நிகழ்ச்சிகளில் பூந்து விளையாடலாம்.

நீங்க ஆங்கிலத்திலும் ப்ளாக் எழுதறீங்க. நான் என் பதிவில் குறிப்பிட்ட முதல் இரண்டு உதவிகள் கொஞ்சம் உங்கள் தோழிகளுடன் இணைந்து செய்ய முடியுமா ??

Deepa said...

SK! நானும் உங்கள் யோசனையைப் படித்தேன். நல்ல விஷயம். கண்டிப்பாகச் செய்ய ஆவல் தான். நேரம் ஒதுக்க வேண்டும். செய்கிறேன்.

நண்பர் ஜமால்!
மிக்க நன்றி