”ஏய்! குணா இங்க வா...”
”இன்னாய்யா?”
“இன்னாய்யாவா? டி.வி. வாங்கனே, துட்டு வாங்குனேல்ல? ஏன் ஓட்டுப் போட வர்ல?”
”ஹி..ஹி..என் பொண்ணுக்குப் பிரசவம்யா அன்னிக்கு..அதான் வர்ல...”
”சும்மா கத உடாத, அந்தக் கட்சிக்குப் போடனும்னா வந்திருப்ப...”
“அப்டிலாம் இல்லீங்க... அதான் எந்தப் பொத்தான அமுத்துனாலும்...”
”சரி சரி வாய மூடு... போ, அப்பால உன் ஊட்டுக்காரனாண்ட பேசிக்கிறேன்”
அந்தக் கரைவேட்டி நகர்ந்ததும் நிம்மதிப்பெருமூச்சுடன் எதிர்த்திசையில் ஓடுகிறாள், குணா.
*************
”கன்னிம்மா.. நீ எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடப்போறே? ”
”நான் எப்பவும் .... தாம்மா. ”
”சரி, அறுவாள் சுத்தியல் சின்னத்துல போடு. அது தான் மக்களோட கட்சி.”
”ஐய்ய! ஏதாவது ஒண்ணுத்துல தான குத்த முடியும். ரெண்டு மூணு சொல்ற.. ஆமா இன்னாது அது? எதுனா சுயேச்சையா? நம்ம சாரு நிக்கிறாரா?”
”?????????????”
************
”சுரேஷம்மா, இங்க வாங்களேன்...”
“சொல்லுங்கக்கா..”
”நீங்க வெளியூர் போயிருந்தப்போ ...கட்சிக் காரங்க வந்திருந்தாங்க. ஒவ்வொரு வீட்டுலயும் எவ்வளவு ஓட்டுன்னு கேட்டுத் தலைக்கு ஐந்நூறு குடுத்தாங்க.உங்க வீட்டு ஓட்டுச்சீட்டெல்லாம் என் கிட்டத் தான இருந்திச்சி. தங்கச்சின்னு சொல்லி வாங்கிட்டேன். இந்தாங்க.”
“ஹைய்யோ! ரொம்ப தாங்க்ஸ் கா”
“இதுல என்ன இருக்கு அக்கம்பக்கத்துல எதுக்கு இருக்கோம். இதெல்லாம் ஒரு சின்ன ஒத்தாசை தானே.”
மேலும் பல முறை நன்றி சொல்லி அவள் விடை பெற, பெரிய சாதனை புரிந்த மகிழ்ச்சியுடன் இவள் கல்லூரிக்குக் கிளம்பினாள். ஆம், பேராசிரியை தான்.
17 comments:
என்னது நல்லா இருக்காவா ?
பத்து நாளா நடந்த விசயம்ல பயங்கர டெரரா இருக்கு :))))
arasiyal???!!!!
என்ன வித்யா? அந்த லேபில் தேவையில்ல தான். அதுக்கு இவ்ளோ ஆச்சிரியக்குறியா? :-(
//ஐய்ய! ஏதாவது ஒண்ணுத்துல தான குத்த முடியும். ரெண்டு மூணு சொல்ற.. ஆமா இன்னாது அது? எதுனா சுயேச்சையா? நம்ம சாரு நிக்கிறாரா?”
//
நல்லா எழுதியிருக்கீங்க..
இதோ எனது அலசலையும் படித்து பாருங்கள்...
//தங்களுக்கு நல்ல "சீஸ்" கிடைக்காதா என்று ஏங்கி நிற்கும் இலங்கை தமிழர்களும் சாமான்ய மக்களும் மாற்றத்தை எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும் என்று தோன்றுகிறது...//
தார்மீக நெறி, விதிகள் எல்லாவற்றையும் மீறிய தேர்தல். வெற்றிதான் இங்கு முக்கியம். எப்படி வெற்றி பெற்றோம் என்பது முக்கியமல்ல. வெட்கக்கேடு.
//அதான் எந்தப் பொத்தான அமுத்துனாலும்//
ஆட தெரியாதவன் மேடை கோணல் என்பது போல... ம்ம்ம்.. கணினி படித்து தொழில்நுட்பம் தெரிந்தவர்களே Electronic Voting Machine புரிந்துகொள்ளாமல் விமர்சிப்பது என்பது மூடத்தனம்...
தாங்கள் ஆதரித்த கூட்டணி வெல்லவில்லை என்பதை அறிவுபூர்வமாக அலசுவதை விட்டு தொழில்நுட்பத்தை விமர்சிப்பது என்பது... ம்ம்ம்ம்
ஐய்ய! ஏதாவது ஒண்ணுத்துல தான குத்த முடியும். ரெண்டு மூணு சொல்ற.. ஆமா இன்னாது அது? எதுனா சுயேச்சையா? நம்ம சாரு நிக்கிறாரா?””?????????????”
இப்போது வெற்றி பெற்றது தான் சுதந்திரம் வாங்கி தந்ததாய் கூறும் மக்களை வைத்து கொண்டு மாற்றத்திற்கு ஆசைப்படுவது நம் தவறு தீபா
பதிவர்களை விடுங்க......இந்த சூனியர் விகடன்காரன் இருக்கானே.....வாராவாரம் "புலிகள் வட்டாரத்தில் விசாரித்ததில் " அப்பன்டின்னு பீலா உடுவான்.....பேசினாராம் ....தாடியை சொரிந்து கொண்டே கேட்டாராம்....லேசான செருமலுடன் சிரித்தாராம்....என்று "ராம்" மொழியில் புலனாய்வு பத்திரிக்கை நடத்தி வரும் சூனிய விகடன் சூ...ல் வச்சாங்கப்பா மொளகாய ....ரசினியை தூக்கிக்கொண்டு ரொம்ப நாள் ஊர்வலம் வந்தவனுங்க இந்த ஒரு வருஷமா "ராஜீவ் காந்தி தற்கொலை தான் செய்து கொண்டார்" ங்கற ரேஞ்சுக்கு டகால்டி விட ஆரம்பிச்சுட்டானுக.......இந்த தேர்தல் முடிவுகள் சூனிய விகடன் மாதிரி மேஜை மேல உக்காந்து பீடி குடிச்சுகிட்டே ஈழம் , பிரபாகர சரிதம் என்று பாடியவங்களுக்கு ஒரு மரண அடி
கதையில் எதையோ சொல்ல நினைத்து எதிலேயோ முடிந்து குழப்பமாகி atlast got backfired.
நன்றி ஆயில்யன்!
நன்றி செந்தில் வேலன்!
உண்மை தான் அங்கிள்! என்ன சொல்வதென்றே தெரியாத தடுமாற்ற நிலையில் தான் இதை எழுதியது. சரியாகப் புரிந்து கொண்டீர்கள்.
அனானி!
சாமான்ய மக்களின் பார்வையில் இந்தத் தேர்தல் எப்படிப் பார்க்கப்படுகிறது என்று நான் தினமும் சந்திக்கும் சிலரின் பேச்சுக்களை அப்படியே வழங்கி இருக்கிறேன். நான் தனிப்பட்ட முறையில் எந்தக் கட்சியையும் தொழில் நுட்பத்தையும் விமர்சிக்க் வில்லை.
சக்தி!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சூனிய விகடன்!
வருகைக்கு நன்றி. ஆனால் உங்களுக்கு ஒரு பத்திரிகையின் மேலிருக்கும் தனிப்பட்ட வெறுப்பைப் பதிவு செய்ய இது களம் அல்ல. என் பதிவுக்குச் சற்றும் தொடர்பில்லாமல் இத்தகைய பின்னூட்டங்கள் இடுவதை நான் விரும்பவில்லை. புரிந்துகொள்ளுங்கள்.
ரவிஷங்கர்,
அனானிக்குச் சொன்னதே தான் உங்களுக்கும். நான் யாரைத் தாக்கினேன் backfire ஆவதற்கு?
மொத்தத்தில் இந்தத் தேர்தல் முறைகளும் மொத்த ஜனநாயகமுமே மக்களுக்கு எதிராக backfire ஆகிக் கொண்டிருக்கிறது. நாம் ஒருவரை ஒருவர் கட்சிகளின் பெயரால் தாக்கிக் கொள்வது நமது மூக்கையும் காதையும் நாமே அறுத்துக் கொள்வது போல.
தீபா,
நன்றி வருகைக்கு.லேட்டஸ்ட் ஆனந்த விகடனில் என் கவிதைப் படிக்க.(பக்கம் 27)
படித்து கருத்துச் சொல்லுங்கள்.
//உண்மை தான் அங்கிள்! என்ன சொல்வதென்றே தெரியாத தடுமாற்ற நிலையில் தான் இதை எழுதியது. சரியாகப் புரிந்து கொண்டீர்கள்.//
இந்த் பதில் யாருக்கு? எனக்கா?எனக்குதான் என்று தெரிகிறது.
//நான் யாரைத் தாக்கினேன் backfire ஆவதற்கு?//
மன்னிக்கவும்.’ backfire” என்ற வார்த்தையை சொன்னதற்கு காரணம்
சிறுகதையின் போக்கு backfire ஆனது என்பதாக.அரசியல் அல்ல.
சிறுகதையின் மூட் சிதறி backfire ஆனதாக என்று கூட்க் கொள்ளலாம்.
அவ்வளவே தீபா.அரசியல் அல்ல.
நன்றி.
ரவிஷங்கர்!
:-))
அங்கிள் என்று நான் அழைத்தது திரு. மாதவராஜ் அவர்களை!
இது சிறுகதையே இல்லையே ரவி. அப்புறம் எப்படி இதற்கென்று ஒரு போக்கு இருக்கும். சரி, எப்படியாயினும் தெளிவாகப் புரிவதில் ஏதோ குறை இருந்திருக்க வேண்டும் இந்தப் பதிவில். சரி செய்து கொள்கிறேன்.
அவசியம் படிக்கிறேன் உங்கள் கவிதையை.
நிதர்சனம்.......
என்னத்தச் சொல்ல...தீபா?
ஹ்ம்ம் என்ன சொல்றது...!!
வட்டார வழக்கு அசத்துது!
உதிரிப்பூக்கள் - அரசியல் மணம்! :-)
நன்றி முல்லை!
Post a Comment