Thursday, October 1, 2009

கூத்தாடி

இருபதடி உயரத்தில் கயிற்றின் மீது நடந்தான்;

வாய் பிளந்து அதிசயித்தது

உடலை மடக்கி மடக்கிக் கரணம் அடித்தான்;

கை தட்டி மகிழ்ந்தது

முகத்தை அஷ்ட கோணலாக்கி ஏதேதோ பேசினான்;

வாய் விட்டுச் சிரித்து ரசித்தது - அதில் பொன்னும் ம‌ணியும் சித‌றின‌

போதையில் கிறுகிறுத்தான்;

உடல் இருபதடி, மனம் இருநூறடி சென்றது - கால் ச‌றுக்கிய‌து

ஆட்டமெல்லாம் முடிந்து ஊர்செல்லும் முன் ஒரே முறை அதைக் காண‌ விரும்பினான்;

நாலே நாலு கிடைத்தது - அதுவும் கூலிக்கு

13 comments:

சந்தனமுல்லை said...

அருமை, தீபா!!

/ஒரே முறை அதைக் காண‌ விரும்பினான்;நாலே நாலு கிடைத்தது - அதுவும் கூலிக்கு/

:(

அமிர்தவர்ஷினி அம்மா said...

ரெண்டு, மூணு வாசிப்பிற்கு பிறகு புரிந்துவிட்டது.

இன்னும் மெருகேற்றுங்கள் கவிதாயினி!

வாழ்த்துக்கள்

மாதவராஜ் said...

வலி மிகுந்த கவிதை.
ரசித்து, ஆரவாரிக்கும் கூட்டம், கடைசியில் கூட வருவதில்லை.
இந்தக் கவிதையில் ஆட்டம் என்பது முக்கிய வார்த்தை.
//ஆட்டமெல்லாம் முடிந்து ஊர்செல்லும் முன் ஒரே முறை அதைக் காண‌ விரும்பினான்//
இந்த வரி சரிதான்.
வாசிக்கிறவர்களுக்கு சிறு குழப்பம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. கொஞ்சம் மாற்றி அமைத்திருக்கலாமோ?
நல்ல கவிதை, எப்படியாயினும். முக்கியமான முயற்சியும் கூட.

அமர பாரதி said...

//நாலே நாலு கிடைத்தது - அதுவும் கூலிக்கு// எது கிடைத்தது?

Vidhoosh said...

கருத்து அருமை. கவிதையை இன்னும் இருமுறை edit செய்யுங்கள்.
வித்யா

Deepa said...

நன்றி முல்லை!

நன்றி அமித்து அம்மா!

நன்றி அங்கிள்!
//வாசிக்கிறவர்களுக்கு சிறு குழப்பம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. கொஞ்சம் மாற்றி அமைத்திருக்கலாமோ?//
உண்மை உண்மை!
குழப்பம் வராத வகையில் எழுத முயல்கிறேன்.


வருகைக்கு நன்றி அமரபாரதி!
அது கடைசியில் வரும் நான்கு பேரைக் குறிப்பிடுகிறது!

நன்றி வித்யா!
உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்ல கவிதை தீபா. உங்கள் கவிதைகளில் உள்ள சமூகப் பார்வை பாராட்டத்தக்கது.

ஈரோடு கதிர் said...

கவிதை,
கூத்தாடியை கண்முன் கொண்டு வந்தது

பா.ராஜாராம் said...

அருமையான கவிதைங்க.தத்துவார்த்தமாக விரிகிறது.

தினேஷ் said...

சுர்ர்ர்ர்ர்னு தெரிக்குதே...

தினேஷ் said...

ஆட்டமெல்லாம் முடிந்து -- உங்கள் வார்தை உபயோகம் இந்த இடத்தில் ரசிக்க வைக்கின்றது..

அமுதா said...

அருமை

ராமலக்ஷ்மி said...

நன்றாக உள்ளது! வாழ்த்துக்கள்!