Thursday, October 8, 2009

கனவு

நான் வீசியெறிந்த மாவிதை வேர் பிடித்து நின்றது;
கனிகளும் தந்தது; வெயிலுக்கு ஒதுங்கிய எனக்கு நிழலும் தந்தது
கறைபட்ட நினைவுகளைக் கழுவும் ரசவாதம் - கனவு

13 comments:

தினேஷ் said...

என்ன சொல்ல வரீங்க ..

புரியலையே ...

வீக்குங்க நானு கவித்தமிழ்ல்ல..

Vidhoosh said...

:) வாவ்.

-வித்யா

மாதவராஜ் said...

நல்ல கனவுகள் கறைகளை கழுவ மட்டும் செய்வதில்லை.
நம்மையும் வளர்க்கின்றன. இங்கு வீசியெறிந்த என்னும் பொருள்தான் குழப்புகிறது.
மற்றபடி, அருமை!

தமிழ் அமுதன் said...

//கறைபட்ட நினைவுகளைக் கழுவும் ரசவாதம் - கனவு//

உண்மைதான்..!

கனவில் மட்டுமல்ல..!

விழித்துகொண்டிருக்கும்போது தோன்றும் செயற்கையான கற்பனைகளாலும் கறைபட்ட நினைவுகளை கழுவ தோன்றுகிறது...!

Deepa said...

Nanri Suriyan!
Nanri Vidhoosh!
Nanri Uncle!
Nanri Jeevan.

Suriyan!

perisa onnumillainga..
namma nija vaazhkaiyila sila per anbai alatchiyam siethiruppom. taken for granted a ninachirupom. aana subconciousla avanga mela namakku irukkara anbu kanavula varum. atha thaan solla try panni irukken.
sorry, no tamil fonts.

அமிர்தவர்ஷினி அம்மா said...

கறைபட்ட நினைவுகளைக் கழுவும் ரசவாதம் - கனவு //

உண்மைதான் தீபா.

நன்றாக இருக்கிறது இந்த சித்திரமும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

லேபிளிலிருந்து கொடுமையை எடுத்துவிடுங்களேன் ப்ளீஸ் :)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அருமையான கவிதைங்க தீபா. வாழ்த்துகள் :)

காமராஜ் said...

வாழ்வின் நிஜங்களை சடுதியில் சொல்லமுடிகிற உத்தி.
உலுக்குகிற மாதிரி.... , நல்லா இருக்கு தீபா.

பா.ராஜாராம் said...

அருமை தீபா!..உயரமான இடங்களுக்கு அழைத்து செல்கிறது,கவிதை.

ச. சிவராம் குமார் said...

நீங்க சொல்ல வரது புரியுது...
ஆனா, ரசவாதம்-ங்கற சொல் இங்க பொருத்தமானது இல்லையோனு தோணுது... ...கழுவும்-ங்கற சொல் வர்றனாலே..
மற்றபடி அருமை..

அமுதா said...

arumai deepa..

அகநாழிகை said...

‘மா விதை‘ என்ற சொல்லின் ஆளுமையை இரசித்தேன்.

வாழ்த்துகள்.

-பொன்.வாசுதேவன்