Monday, October 19, 2009

ஜாதீ!

அலுவலகத்தில் உணவு இடைவேளை.

"ஹேய் ஷைனி, இது கண்டா..ஈ ஓணத்தினு..." ஒன்றாய் கூடி கொஞ்சு மலையாளத்தில் அரட்டை ஒரு புறம்.

"ஹேய், இன்னிக்குத் தான்யா தெரிஞ்சுது, நம்ப பி.எம் மும் "....." தான்; க்ரேட். என‌க்கு அப்ரெய்ச‌ல் ப்ராப்ள‌ம் இல்லை! நீ தான் பாவம்!...ஹீ ஹி.. ஜ‌ஸ்t ஜோக்கிங் யார்!"


"ஹலோ! டேய், வ‌ச‌ந்த் மெயில் ப‌ண்ணிருக்கான்டா‌.. ஆன்சைட்ல‌ இன்னும் ரென்டு பேர் வேணுமாம். என்னையும் ரெக்கமென்ட் பண்ணி இருக்கான்....
ஆமாம் ம‌ச்சான், அவ‌ன் எங்காளுங்க‌ தான்."...

தெளிந்த குளத்தில் கல்லெறிந்தது போல் ஏதேதோ தோன்ற‌, தனியளாய் விடப்பட்டது போல் உணர்ந்தேன்.
நான் என்ன‌ ஜாதியில் பிற‌ந்தேன் என்று நினைவு கூர்ந்து யாரையாவ‌து அதில் தெரியுமா என்று யோசித்து முடிப்ப‌த‌ற்குள், என்மீது எனக்கே வெறுப்பு வந்து அடிநாக்கில் கசந்தது. "சீ " என்று உர‌க்க‌க் க‌த்தி விட்டேன். த‌லையை உத‌றிக் கொண்டு போய் சிங்கில் காறித் துப்பி விட்டு வ‌ந்தேன்.

"என்ன... என்ன ஆச்சு?" என்று ப‌தறினார்கள்;

"ஒண்ணுமில்ல, சாப்பாட்டில‌ முடி" என்று சிரித்தேன்.

18 comments:

மாடல மறையோன் said...

Interesting.

Unknown said...

ஜாதி.....
சீ.....
முடி....
முடிச்சாச்சு.

pavithrabalu said...

அன்பிற்கினிய தீபா

தொடர்ச்சியாக உங்கள் பதிவுகளைப் படிக்கிறேன்.சாதீ குறித்த உணர்வு இளைய சமுதாயத்தின் மனதிலும் புரையோடிப் போயிருப்பது வருத்தமாக இருக்கிறது. நான் பல சந்தர்ப்பங்களில் தனியாய் அலைந்திருக்கிறேன், தவறாய் அடையாளம் காட்டப்பட்டிருக்கிறேன், எந்த இனம் என்று பச்சையாய் கேட்கப்பட்டிருக்கிறேன்..... எல்லாமே பணியிடங்களில் தான்.எனது தாய் தந்தை வெவ்வேறு இனத்தைச் சார்ந்தவர்கள்,, சில சமயம் ஏதோ ஒன்றைச் சொல்லி தப்பித்தும் இருக்கிறேன்.

சில நண்பர்கள் வீட்டில் நுழையும் முன்பு பாட்டியோ அத்தையோ நமது குலம் கோத்திரம் குறித்து விசாரித்து அனுப்பும் அனுபவமும் உண்டு.

உங்கள் பதிவைப் பொறுத்தவரை... நவீன யுகம் என்று நாம் பேசினாலும் தமிழ்ச் சமுதாய அமைப்பில் சாதியை சொல்லி அடையாளம் காட்டுவது பெருமைக்குரியதாக நமது ஆழ்மனதில் பதிய வைக்கப்பட்டுள்ளதே காரணம் என்று கருதுகிறேன்..

அம்பிகா said...

\\தனியளாய் விடப்பட்டது போல் உணர்ந்தேன்.// இந்த ஜாதீ கூட்டத்தில் தனித்திருப்பதே பெருமை தான் தீபா. நீ நீயாகவே இரு, `தீ’ பா வாகவே இரு.

நாளும் நலமே விளையட்டும் said...

மனம் எப்பவும் ஒரு வலைக்கு உள்ளேயே அது தான் பாதுகாப்பு என்ற நினைப்பில் இயங்கும். இந்த வலைகளில் ஒன்று ஜாதி.

இதை பிச்சி நம்ம சமுதாயத்த சரியான பார்வையோட பார்க்க வைக்க இந்த மாதிரி வெளிப்பாடு மிக்க கதைகள் தேவை.

நம்மில் எத்தனை பேர் இந்த ஜாதி சிந்தனை இல்லாமல் இருக்கிறோம்?

Anonymous said...

சாதிப்பற்று இளைய சமுதாயத்துக்கு குறைவு என்றே நினைக்கிறேன். குறைவா இருந்தாலும் நிறையா இருந்தாலும் இருக்கக்கூடாது என்பதே என் அவா.

மாதவராஜ் said...

மிக முக்கியமான பிரச்சினையை, உளவியலாக அணுகி இருக்கிறாய். அம்பிகா சொன்னதை வழிமொழிகிறேன்.

Deepa said...

நன்றி ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ!

ந‌ன்றி சுல்தான்!

ந‌ன்றி ப‌வித்ராபாலு!

//தமிழ்ச் சமுதாய அமைப்பில் சாதியை சொல்லி அடையாளம் காட்டுவது பெருமைக்குரியதாக நமது ஆழ்மனதில் பதிய வைக்கப்பட்டுள்ளதே காரணம் என்று கருதுகிறேன்..//

ச‌ரிதான். ஆனால் த‌மிழ்ச் ச‌முதாய‌த்தை ம‌ட்டும் சொல்லாதீர்க‌ள். பிற‌ மாநில‌ங்க‌ளில் இன்னும் அதிக‌ம் என்று அறிகிறேன்.

ந‌ன்றி அம்பிகா அக்கா!
:) ஆனால் இது ஒரு புனைவு தான்.
உங்க‌ள் இடுகைகளை ஆவ‌லுட‌ன் எதிர்பார்க்கிறேன். எழுத‌த் தொட‌ங்கிவிட்டீர்க‌ளா?

நன்றி நாளும் நலமே விளையட்டும்!


ந‌ன்றி சின்ன‌ அம்மிணி!

இளைய‌ ச‌முதாய‌த்தினர் சில‌ரிட‌ம் இந்த‌ ம‌ன‌ப்பான்மையைக் க‌ண்ட‌ போது அதிர்ச்சியும் சொல்லொணாத‌ வேத‌னையும் அடைந்தேன். அத‌ன் வெளிப்பாடு தான் இந்த‌ப் ப‌திவு.
நீங்க‌ள் சொல்வ‌து போல்: குறை நிறை எல்லாம் இல்லை, இருக்க‌வே கூடாது என்ப‌து தான் ச‌ரி.

ந‌ன்றி அங்கிள்!

குடுகுடுப்பை said...

சாதிகள் ஒழிந்தால் இந்து, முஸ்லீம் ,கிறிஸ்தவன் அவ்வளவுதான்.

மத ரீதியாக அவன் நம்மாளுடா என்று அதிகம் காதில் கேட்டவன் என்ற முறையில் மேலே உள்ள வார்த்தை.

சாதிகள் ஒழியும் நம்பிக்கை எனக்கில்லை, இருந்தாலும் பொருளாதார ரீதியாக அனைத்து சாதிகளும் எதை வேண்டுமானாலும் செய்து ஒரு சமநிலையை எய்தினால் சந்தோசமே.

அமிர்தவர்ஷினி அம்மா said...

இந்த ஜா தீ இன்னும் பற்றி பரவிக்கொண்டே போவது வேதனைக்குரிய விஷயம்தான்.

சின்ன இடுகையாக இருந்தாலும், விஷயமுள்ள இடுகை.

நாஸியா said...

நச்!

நேசமித்ரன் said...

ஆண்- பெண் ,ஜாதி -ஊர் ,தமிழன்- கர்நாடன், வட இந்தியன்- தென் இந்தியன்,இந்தியன் -அயல் நிலத்தவன், வெள்ளையன் - கருப்பு நிறத்தவன் , வந்தேறி- தாய் நாட்டவன்

சீ முடி

\\தனியளாய் விடப்பட்டது போல் உணர்ந்தேன்.// இந்த ஜாதீ கூட்டத்தில் தனித்திருப்பதே பெருமை தான் தீபா. நீ நீயாகவே இரு, `தீ’ பா வாகவே இரு.

repeating madam

அமுதா said...

pala idanalil innum saathi maraimukamaaka aatchi seythu kondu thaan irukkirathu. satre utru kavanithaal theriyum... melottamaaka therivathillai... :-(

சந்தனமுல்லை said...

'நச்'!!!

அழகாக சொல்லி முடித்துவிட்டீர்கள் தீபா!! முன்பை விட தீவிரமாக இப்போது எல்லா இடங்களிலும் இந்த கும்பல் மனப்பான்மையாக 'ஜாதி' இருப்பதாக தோன்றுகிறது!!

எஸ். எஸ். ஜெயமோகன் said...

வணக்கம் தீபா,

இன்று முதல் முறையாக
உங்கள் இணையத்தளத்தைப்
பார்த்தேன். அருமை.

நந்தவனத்தில் நுழைந்துப் போல்
இருந்தது. வாழ்த்துக்கள் !!
+++++++++++++

ஜாதிகள் இல்லையடிப் பாப்பா
என்று சொன்ன
மகாகவி பாரதியைக்கூட
ஜாதியப் பார்வையில்
பார்க்கும் பார்வை
நம் தேசத்தில் உள்ளது !

என்ன செய்வது ? !

எஸ். எஸ் ஜெயமோகன்

Deepa said...

நன்றி குடுகுடுப்பை!

//சாதிகள் ஒழிந்தால் இந்து, முஸ்லீம் ,கிறிஸ்தவன் அவ்வளவுதான்//

மதங்களும் ஒழிய வேண்டும் என்று எனக்கு ஆசை தான்.

நன்றி அமித்து அம்மா!

நன்றி நாஸியா!

நன்றி நேசமித்ரன்!
//ஆண்- பெண் ,ஜாதி -ஊர் ,தமிழன்- கர்நாடன், வட இந்தியன்- தென் இந்தியன்,இந்தியன் -அயல் நிலத்தவன், வெள்ளையன் - கருப்பு நிறத்தவன் , வந்தேறி- தாய் நாட்டவன்

சீ முடி //

அருமை!

நன்றி அமுதா!
சரியாகத் தான் சொல்கிறீர்கள்.

நன்றி முல்லை!
உண்மை உண்மை! :)

ஜெயமோகன்!

தங்கள் முதல் வருகைக்கும் அன்பான பகிர்வுக்கும் மிக்க நன்றி!

பாரதியைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டுள்ளது மிக முக்கியமான விஷயம்.
வேதனை தான், இல்லையா?

Unknown said...

"ஹலோ! டேய், வ‌ச‌ந்த் மெயில் ப‌ண்ணிருக்கான்டா‌.. ஆன்சைட்ல‌ இன்னும் ரென்டு பேர் வேணுமாம். என்னையும் ரெக்கமென்ட் பண்ணி இருக்கான்....
ஆமாம் ம‌ச்சான், அவ‌ன் எங்காளுங்க‌ தான்"

இது மோசம் என்றால் இட ஒதுக்கீடு என்ற பெயரில் நடப்பதையெல்லாம் ஏற்பீர்களா.கோடிசுவரர்கள் பிற்பட்டவர்கள் என்று இட ஒதுக்கீட்டில் பலன் பெறுவதை,
பதவி உயர்வில் இட ஒதுக்கீடு
கோருவதை என்னவென்று சொல்வீர்கள்.ஒரு மதத்தினை சேர்ந்தவர்களுக்கு மொத்த நிதி ஒதுக்கீட்டில் 15% நிதியை அரசு ஒதுக்க கோருவதை ஆதரிக்கிறீர்களா?
அப்படி கோருவது யார்/எந்தக் கட்சி என்று உங்களுக்குத் தெரியும்தானே.
ஒரு புறம் சாதி ஒழியவேண்டும் என்று கூப்பாடு இன்னொரு புறம் குறிப்பிட்ட சாதிகள்,மதங்களை சேர்ந்தவர்களுக்கு சலுகைகள், இட
ஒதுக்கீடுகள் இன்ன பிற .இந்த முரணை உணராமல் சாதீ என்று கூப்பாடு போட்டு ஏதோ சாதி என்பது கொடிய விடம் என்று எழுதிக் கொண்டே இருக்கலாம்.

அரசுப் பள்ளியில் சேர்க்கும் போதே சாதி குறித்த கேள்வி வருகிறது.அப்புறம் கோட்டாக்கள், சலுகைகள் இன்ன பிற.
அரசு வேலையிலும் இதுதானே நடக்கிறது. ஆனால் இளைய சமுதாயம் மட்டும்
சாதியை மனதிலிருந்து விலக்க வேண்டுமாம்.சாதி பாகுபாடு இல்லை என்றா நினைகக் தோன்றும்.அரசு வேலையில் 69% இட ஒதுக்கீடு இருக்கும் போது தமிழ் நாட்டில் சாதி என்று ஒன்று இல்லவே இல்லை
என்றா நினைக்கத் தோன்றும். நீ இட ஒதுக்கீட்டால் பலன் பெறுகிறாய், நான்
பலன் பெறுகிறேனா என்றுதானே கேட்கத் தோன்றும். அதுதானே இயல்பான உணர்வாக இருக்க முடியும்.
சில சாதிகளில் பிறந்தவர்கள் 92% எடுத்தாலும் கிடைக்காதவை சில சாதிகளில் பிறந்தவர்கள் 88% எடுத்தால்
கிடைக்கும் போது 92% எடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள்.
இதையும் கொஞ்சம் யோசியுங்கள்.

☀நான் ஆதவன்☀ said...

சாட்டையடி!