சிக்கனம்!
எழுபதாயிரம் ரூபாய் வாஷிங் மெஷின்
முப்பதாயிரம் ரூபாய் வாக்குவம் க்ளீனர்
ஐம்பதாயிரம் ரூபாய் பாத்திரம் கழுவும் மெஷின்
துடைத்துத் துணி போர்த்தப் பட்டு அழகாக.
ஐந்நூறு ரூபாய் சம்பளத்துக்கு அத்தனை வேலைகளுக்கும் முனியம்மா
****************************************
விகடன் குட் ப்ளாக்!
ஒரு மனசாட்சியின் குரல் பதிவும் “குட் டச் பேட் டச்” கலந்துரையாடல் - ஆங்கில மொழியாக்கம் பதிவும் விகடன் குட் ப்ளாக் பகுதியில் இடம் பெற்றுள்ளன என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி! (ரொம்ப சீன் போடறேனோ?)
****************************************
அப்புறம் என் ப்ளாகுக்கும் ”குட் டச் பேட் டச்” சொல்லிக் கொடுத்து விட்டேன். (கமெண்ட் மாடரேஷன்) முடிந்த வரை உடனுக்குடன் பார்த்து வெளியிட முயல்கிறேன். பொறுத்தருளவும். என்ன செய்வது, மனித மனங்களின் வக்கிரங்கள் எந்த ரூபத்திலாவது நம்மைத் தொந்தரவு செய்து கொண்டு தானிருக்கும் போல.
23 comments:
சிக்கன கவிதை நல்லாயிருக்கு.
முன் நீங்கள் எழுதிய வீடு கதையுடன்
ஒரு சாயலில் இது ஒத்துப் போகிறது?
மனித மனங்களின் வக்கிரங்கள் இன்னுமா!!
//அப்புறம் என் ப்ளாகுக்கும் ”குட் டச் பேட் டச்” சொல்லிக் கொடுத்து விட்டேன். (கமெண்ட் மாடரேஷன்) //
:-)
விகடனுக்கு வாழ்த்துகள்
சிக்கனம் - மிக அருமையா சொன்னீங்க
கமெண்ட் மாடரேஷன் நானும் போட வேண்டிய நிலைமையில் ...
நன்றி முரளிகண்ணன். அப்படியா வீடு கதை மாதிரியா இருக்கிறது?
வாங்க வடுவூர் குமார்! ஆமாங்க, ஒரு அனானிப் பூச்சியோட தொல்லை தாங்க முடியல. அதான் கொஞ்ச நாளைக்கு. விரைவில் எடுத்து விடுவேன்.
வாங்க முல்லை!
என்ன சிரிப்பு மட்டும்??
நன்றி நண்பர் ஜமால்!
உங்களுக்கும் அதே தொந்தரவா... :-)
சி: நச்
ப் : வாழ்த்துக்கள்
கு.ட: ??
நன்றி தமிழினி!
நன்றி நர்சிம்!
‘சிக்கனம்‘ வெளிப்டுத்தியிருக்கும் விஷயம் நன்றாக உள்ளது.
ஆனால் நான் வசிக்கும் மதுராந்தகத்திலேயே வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்ணுக்கு குறைந்தபட்சம் ரு.1500 கொடுக்க வேண்டியுள்ளது. ஐநூறு ருபாய்க்கு சென்னையிலா.. ஆச்சர்யம்தான்.
அடுத்தாக, இப்போதெல்லாம் முனியம்மா, குப்பம்மா வேலைக்காரிகளெல்லாம் இல்லை. பவித்ரா, சித்ரா, வனஜா என அடுத்தகட்ட வேலைக்காரிகள் வந்து விட்டார்கள். ஷ்ரேயா, சினேகாக்கள் வரும் ஆண்டுகளில் வரக்கூடும். என்னைப் பொறுத்தவரை வீட்டு வேலைகளை அவரவர்களே பகிர்ந்து செய்து கொள்வதே சிறந்தது.
@@@@@@@@@@@@@@@@
விகடனில் வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள்.
@@@@@@@@@@@@@@@@
பின்னூட்டம் வெளியிடுவது பற்றி...
எழுதுபவர்களுக்கே இதுபோன்ற சங்கடங்கள், பிரச்சனைகள் என்றால், சாதாரணமானவர்கள் நிலை எப்படியிருக்கும்.
மாற்றம் என்பது மனங்களிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதே இதற்கான தீர்வு.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
நன்றி வாசுதேவன்!
//ஐநூறு ருபாய்க்கு சென்னையிலா.. ஆச்சர்யம்தான்.//
ஆம்.. இருக்கிறார்கள்.
//இப்போதெல்லாம் முனியம்மா, குப்பம்மா வேலைக்காரிகளெல்லாம் இல்லை. பவித்ரா, சித்ரா, வனஜா என அடுத்தகட்ட வேலைக்காரிகள் வந்து விட்டார்கள். ஷ்ரேயா, சினேகாக்கள் வரும் ஆண்டுகளில் வரக்கூடும். என்னைப் பொறுத்தவரை வீட்டு வேலைகளை அவரவர்களே பகிர்ந்து செய்து கொள்வதே சிறந்தது.
//
இக்கருத்தை வரவேற்கிறேன். அவர்கள் பெயர்கள் நவீனமாகுமே தவிர வாழ்க்கை முறை...?
//எழுதுபவர்களுக்கே இதுபோன்ற சங்கடங்கள், பிரச்சனைகள் என்றால், சாதாரணமானவர்கள் நிலை எப்படியிருக்கும். //
இதே தான் எனக்கும் தோன்றியது.
முன் நீங்கள் எழுதிய வீடு கதையுடன்
ஒரு சாயலில் இது ஒத்துப் போகிறது?
//
yes.
:)
// எம்.எம்.அப்துல்லா said...
முன் நீங்கள் எழுதிய வீடு கதையுடன்
ஒரு சாயலில் இது ஒத்துப் போகிறது?
//
yes.
:)
//
உட்கருத்து ஒத்துப் போயிருக்கலாம். மற்றபடி?
Sorry for writing this comment in English.I can only read Tamil.Excellent blogs.Very good expression of your thoughts and ideas deepa.I really enjoyed reading your blogs and some with a heavy heart.Very good.Keep going
அழகான கவிதைவரிகள்! அருமை. வாழ்த்துகள்.
Thanks a lot Solai. Are you the owner of the blog "Solai's kitchen"?
சிக்கனம்- நல்ல வரிகள்.
அகநாழிகை வாசுதேவன் சொன்னது போல நாமே செய்ய பழகிக்கொண்டால் மிகவும் நன்றாக இருக்கும்.
விகடன்- வாழ்த்துக்கள்.
சிக்கனம்..
கவிதை அருமை..
ஆனால் நடைமுறையில் அதுவும் ஒரு பணிதான்.. தவிர்க்க இயலாத பணி.. தவறில்லாத பணி..
குட் டச் பேட் டச் - வார்த்தைப் பிரயோகத்தை ரசித்தேன்..!
விலைவாசியெல்லாம் தெரியாம இருக்கீங்க போல... வாக்குவம் க்ளீனர் இருபதாயிரத்துக்கு மேலே இந்தியாவிலேயே கிடையாது... எழுபதாயிரத்துக்கு வாஷிங் மெஷினாவது மூணு வாங்கலாம்ங்க, மற்றபடி அகநாழிகை சார் சொன்னாப்ல வேலைக்காரர்கள் விலை தான் ஜாஸ்தி! எனிவே, ஜோக்ஸ் அபார்ட், நல்ல உட்கருத்து!
சிக்கனம்! கவிதை நல்லாயிருக்கு. ;-)) Reality touch!
மனித மனங்களின் வக்கிரங்கள் - What is this? (context in comments)
--
விஜயஷங்கர்
பெங்களூரு
நன்றி மணிநரேன்! நீங்கள் சொல்வது உண்மை தான்.
மிக்க நன்றி உண்மைத் தமிழன்!
அவ்வளவாக திட்ட ஒன்றுமில்லை..ஆனாலும், இன்னும் எதிர்பார்க்கிறேன்..முடியும் என்பதால்தான்
நன்றி டாக்டர் ருத்ரன்!
ஆனால் என் அடுத்த பதிவில் இட நினைத்த கமெண்டை இங்கு போட்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
(ஏனென்றால் அதற்கு தான் ரொம்பத் திட்ட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருந்தேன்!)
நல்லாருக்கு தீபா.
வாழ்த்துகள்.
ம்ம்ம் பொது வாழ்க்கையில இதெல்லாம் ஜகஜம்:)
Vijay!
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
முன்பே கவனிக்கத் தவறியமைக்கு வருந்துகிறேன்.
Post a Comment