Friday, April 17, 2009

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்?

”நீங்கள் இருவரும் ஒரே நாளில் அதே நேரத்தில் ஒரே ஊரில் பிறப்பீர்கள். நீங்கள் பிறக்கும் வரை ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளலாம். பிறந்த பிறகு என்ன வாகிறது என்று பாருங்கள்.”

அவ்விரு உயிர்களும் தத்தமது தாய் வயிற்றில் சூல் கொண்டன.

சில வாரங்களுக்குப் பிறகு,
“ஹேய்! இங்கே ஒரே கூத்தும் கும்மாளமுமா இருக்கு. நான் வந்திருக்கேன்னு கொண்டாடறாங்க.”
”ஹீம்.. நான் வந்ததே இவங்களுக்கு இன்னும் தெரியலன்னு நினைக்கறேன்”

இன்னும் சில நாட்கள் செல்ல...

“ஐயோ..கொஞ்சம் எழுந்து நடக்கக் கூடாதா அம்மா... டாக்டர் பத்திரமா இருக்கச் சொன்னதுக்காக இப்படியா நாள் பூரா படுத்திருக்கணும்?”
“எனக்கு ஒரே ஆட்டமா இருக்கு. நாள் பூரா மாடி ஏறி இறங்கிட்டு இருக்கா எங்க அம்மா”

ஓரிரு மாதங்களுக்குப் பிறகு,

”எதுக்கு இப்படி சாப்டுட்டே இருக்காங்க. இனிமே எனக்குத் தர்றதெல்லாம் கொழுப்பாத் தன் சேரும்.”
“ஏய், உனக்கு எப்பவாச்சும் வயித்தைக் கிள்ளற மாதிரி லேசா வலி வர்றதுண்டா? எனக்கு தினமும் ரெண்டு மூணு தடவையாச்சும் அப்டி வருது.”

சில வாரங்களுக்குப் பிறகு,
”நான் இன்னும் தலை கீழா திரும்பவே இல்லை. என்னவா இருக்கும்னு பாக்க டாக்டர் கிட்டெ போறாங்க.”

“நான் திரும்பிட்டேன். அதனால அம்மாக்கு ரொம்ப மூச்சு வாங்குது. முன்ன மாதிரி வேலை செய்ய முடியல போல. பாவம்.”

அந்த நாளும் வந்தது
”அட! இதோ நான் வந்துட்டேன். என்னை அழகா ஆபரேஷன் பண்ணி எடுத்துட்டாங்களே. இது தான் பூமியா? பரவால்லியே அழகா, படு சுத்தமா இருக்கு. வெள்ளை வெளேர்னு உடுத்தி யார் இவங்க எல்லாம்? தேவதைங்க மாதிரியே...எல்லாரும் சிரிக்கறாங்க என்னைப் பார்த்து.. ஓ, நான் அழணும் இல்ல...குவாஆஆஆஆஆஆஆ!!!”


”இதோ, நானும் வந்துட்டேன். காதே கிழியற மாதிரி கத்தறாங்க அம்மா. என்ன இடம் இது. இருட்டா, குறுகலா. என்னை இந்தக் கிழவி தான் வெளிய கொண்டு வந்தாங்களா? பரவாயில்ல, எங்க அம்மா பாயில படுத்திருக்காங்க. இங்கேயும் எல்லாரும் சிரிச்சிட்டுத் தான் இருக்காங்க. நானும் அழணும்ல? குவாஆஆஆஆஆஆஆ!!”

சில ஆண்டுகளுக்குப் பிறகு,
”அர்ஜுன், வெளிய தலைய நீட்டாதே. ஜன்னலை க்ளோஸ் பண்ணு. அம்மா ஏசி போடப் போறேன். மை காட்! இன்னிக்கும் லேட்டு. பை த வே, பேச்சு போட்டிக்குத் தயார் பண்ணிட்டியா?”


”யெஸ் மம்மி. இந்தியாவில் வறுமை. அட்டகாசமான டாபிக், சூப்பரா பாய்ண்ட்ஸ் ரெடி பண்ணிட்டேன்.”
“சமத்து...” மகனின் தலையை வருடி விட்டு நேராகப் பார்த்து காரைச் செலுத்துகிறாள் அந்த அம்மா.


”டேய் ராஜா, என்னடா அங்க பராக்கு பாத்துட்டு இருக்கே? இந்தா இந்த மூட்டையை எடுத்துட்டு மூணாவது மாடிக்குப் போ”

”சரிம்மா...” சீறிச் செல்லும் அந்தக் காரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த ராஜூ கைப்பிடிச் சுவர் இல்லாத அந்த மாடிப்படிகளில் லாகவமாக ஏறிச் செல்கிறான்.
Labels: , , ,

23 Comments:

At April 17, 2009 at 11:47 AM , Blogger மாதவராஜ் said...

அடேயப்பா! மலைக்க வைத்தது. வாழ்வின் யதார்த்தத்தையும், சூழலையும் கருவறையிலிருந்தே சொல்லியிருக்கிறாய்.வாழ்த்துக்கள்.

 
At April 17, 2009 at 2:51 PM , Blogger ஆகாய நதி said...

ரொம்ப நல்ல கதை... நிதர்சனமான உண்மையும் கூட :)

 
At April 17, 2009 at 7:20 PM , Blogger ஆ.முத்துராமலிங்கம் said...

அட்டகாசம்..!
யோசிக்க வைக்கும் கதை.
அருமையா எழுதியிக்கீங்க.

 
At April 17, 2009 at 7:49 PM , Blogger ஆ.ஞானசேகரன் said...

வாவ்வ்வ் நன்றாக இருக்கு..

 
At April 17, 2009 at 8:04 PM , Blogger வித்யா said...

கவிதை மாதிரி இருக்கு. வாழ்வின் ஏற்ற தாழ்வுகள்:(

 
At April 17, 2009 at 10:50 PM , Blogger "அகநாழிகை" said...

தீபா,
வித்தியாசமான பார்வையில் எழுதப்பட்டிருக்கிறது. நல்ல பதிவு.
இன்னும் விரிவாகவும் எழுதியிருக்கலாம். விரிவாக எழுதி சிறுகதை வடிவத்தில் ஒழுங்கமைத்தால் பத்திரிகையில் வெளியிடலாம்.

அன்புடன்,
“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

 
At April 18, 2009 at 12:39 AM , Blogger சந்தனமுல்லை said...

கதைன்னு சொல்ல முடியாதமாதிரி இருக்கு...ஏன்னா நமது சமூகத்தின் உண்மையை அல்லவா எழுதியிருக்கிறீர்கள்..!!! உங்கள் கோணம் நல்லாருக்கு தீபா!

 
At April 18, 2009 at 1:15 AM , Blogger தமிழ் வெங்கட் said...

நல்லா வித்தியாசமா யோசிச்சி பதிவு போட்டுருக்கிறிங்க நல்லா இருக்கு.....

 
At April 18, 2009 at 1:41 AM , Blogger Deepa said...

அங்கிள்!
ஆகாய நதி!
முத்துராமலிங்கம்!
ஞானசேகரன்!
வித்யா!
வாசுதேவன்!
சந்தனமுல்லை!
தமிழ் வெங்கட்!

வருகைக்கும் அன்பான பகிர்வுக்கும் மிக்க நன்றி.

 
At April 18, 2009 at 4:23 AM , Blogger ஆதவன் said...

idhu ponru thodarndhu eludhungal.. nalla kathai..

 
At April 18, 2009 at 6:01 AM , Blogger ராம்.CM said...

வித்தியாசமான நோக்கில் உல்லது உங்கள் கதை. அருமையா யோசித்து எழுதியுள்ளீர்கள்.வாழ்த்துகள்.

 
At April 18, 2009 at 6:41 AM , Blogger ராமலக்ஷ்மி said...

அருமையாக எழுதியிருக்கிறீர்கள். தலைப்பும் சிறப்பு.

 
At April 21, 2009 at 12:16 AM , Blogger narsim said...

வியப்பேதுமில்லை.. ஏதுமில்லை..கருவறையில் கேட்டிருக்கக் கூடும் எழுதும் சத்தம் உங்களுக்கு.

 
At April 21, 2009 at 12:49 AM , Blogger அமுதா said...

அருமையான கதை. நடைமுறை யதார்த்தம் அழகாக கூறியுள்ளீர்கள். வாழ்த்துகள்

 
At April 21, 2009 at 1:58 AM , Blogger Deepa said...

ஆதவன்!
ராம்!
ராமலக்‌ஷ்மி!
நர்சிம்!
அமுதா!

மிக்க நன்றி.

 
At April 22, 2009 at 2:14 AM , Blogger வால்பையன் said...

//பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்?//

எனகென்னவோ அப்படி தெரியலை!
பல பணக்கார வீட்டு தறுதலைகள் நல்லாவே ஆட்டம் போட்டுக்கிட்டு தான் இருக்குங்க!

 
At April 22, 2009 at 11:08 PM , Blogger கார்க்கி said...

//வியப்பேதுமில்லை.. ஏதுமில்லை..கருவறையில் கேட்டிருக்கக் கூடும் எழுதும் சத்தம் உங்களுக்கு//

அபப்டியே வழிமொழிகிறேன்.

ஆழமான கதை.

 
At April 23, 2009 at 1:51 AM , Blogger Deepa said...

நன்றி கார்க்கி, தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்.

 
At April 25, 2009 at 8:08 AM , Blogger sakthi said...

arumai ma
alagana nadai
elimayana varthaigal
arumai deepa

 
At April 25, 2009 at 11:36 AM , Blogger வண்ணத்துபூச்சியார் said...

யே. அப்பா.. சின்ன கருவிலே எத்தனை விஷயமும்.

வாழ்த்துகள் தீபா.

 
At April 26, 2009 at 6:33 AM , Blogger Deepa said...

வாங்க வால்பையன்!

உங்கள் வருகையைக் கவனிக்கத் தவறிவிட்டேன். மன்னிக்கவும். ஆனால் நீங்கள் சொல்ல வருவது தெளிவாகப் புரியவில்லை.

Sakthi!
வண்ணத்துப்பூச்சியார்!

மிக்க நன்றி, வருகைக்கும் அன்பான பகிர்வுக்கும்.

 
At April 28, 2009 at 1:41 AM , Blogger அமிர்தவர்ஷினி அம்மா said...

சூப்பர்

வித்யாசமா யோசிச்சிருக்கீங்க.

ரொம்ம்பவே.... நல்லாருக்கு

 
At February 5, 2010 at 10:48 PM , Blogger சரவண குமார் said...

ரொம்ப அருமை.இந்த மாதிரி எல்லாம் சுஜாதா தான் எழுதுவார்...நீங்களும் நல்லா எழுதி இருக்கீங்க

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home