வெந்தழலாய்ச் சுடுகின்ற வெறுப்புக்கு மறுபுறம்
ஈரமான அன்பிருந்தால்
வெறுப்பும் கூட அழகு தான்;
குத்திக் கிழிக்கும் குரோதம் கூட
சத்தியத்தின் ஆத்மாவினால்
சுத்தமாக வெளிப்பட்டால்
குரோதம் கூட அழகு தான்;
அதர்மத்தையும் அநீதியையும்
வேரறுக்கும் முயற்சியில்
வஞ்சகமும் துரோகமும் கூட
நிச்சயமாய் அழகு தான்;
எக்கோணத்திலும் அழகில்லை
எப்பார்வையிலும் ஏற்பில்லை
அற்பங்களும் சுயநலமும்
வக்கிரங்களின் வடிகால்களும்.
8 comments:
[[ அதர்மத்தையும் அநீதியையும்
வேரறுக்கும் முயற்சியில்
வஞ்சகமும் துரோகமும் கூட
நிச்சயமாய் அழகு தான்;]]
இவ்வரிகள் மிக ரசிக்க கூடியதாய்
ம்.. வித்தியாசமான அழகு..??
//எக்கோணத்திலும் அழகில்லை
எப்பார்வையிலும் ஏற்பில்லை
அற்பங்களும் சுயநலமும்
வக்கிரங்களின் வடிகால்களும்.//
கவிதை வரிகள் அருமை.
//குத்திக் கிழிக்கும் குரோதம் கூட
சத்தியத்தின் ஆத்மாவினால்
சுத்தமாக வெளிப்பட்டால்
குரோதம் கூட அழகு தான்;//
GOOD POEM
ஒரே கோணத்தில் நிறைய
அர்த்தங்களை தன்னுள்ளே
பொதிந்து வைத்திருக்கும்
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
உண்மையான வரிகள்
துரோகமும், வஞ்சகமும் எந்த நிலையிலும் அழகில்லை.இருக்க முடியாது.
அவற்றை வைத்து எதையும் வேரறுக்க முடியாது.கொண்டவரையே அழிக்கும் குணம் கொண்ட கேடு கேட்ட எண்ணங்கள் துரோகமும் , வஞ்சகமும்.அவற்றை ந்யாய படுத்துவதோ, அழகு படுத்த முயல்வதோ, மிக வீணான , வலிமை அற்ற ,இழிவான காரியங்கள்.
தெரிந்தே தவறு செய்து இருந்தால் அதை ஒப்புக் கொண்டு , மன்னிப்பு கோருவது அல்லது மனம் விட்டு பேசுவது மேன்மை.
தெரியாமல், அல்லது தவறாக அர்த்தம் கொண்டிருப்பின், உணர்ந்து மன்னிப்பு கேட்பது மனிதம்.
ஆனால்,வேண்டும் என்றே,தொடர்ந்து தவறுகள் செய்து கொண்டே இருப்பது, அதை ந்யாய படுத்த முயல்வது ,கேடு கேட்ட கீழ்த்தரமானது, அருவருக்கத் தக்கது...அப்படிப்பட்ட மட்டமான சிந்தனைகள் உள்ள மனம் பரிதாபப் பட வேண்டிய நிலையில் உள்ள மன நோயாளிகள்.
the post is trying to justify the unjustifiable.
//குத்திக் கிழிக்கும் குரோதம் கூட
சத்தியத்தின் ஆத்மாவினால்
சுத்தமாக வெளிப்பட்டால்
குரோதம் கூட அழகு தான்;
//
kavithai arumai.
Post a Comment