Thursday, August 19, 2010

மீண்டு வ(ச)ந்த காலம்!

விடை தெரியாக் கேள்விகளால் நிறைந்திருந்தது ஒரு காலம் - அது

துள்ளித் திரிந்த வாழ்வின் வசந்த காலம் ;

ஒரே கேள்விக்குப் பல விடைகள் தெரிய,

சரியெது தவறெது என‌க் குழம்பியதொரு காலம்;

தெரிந்தெடுத்த விடைகளுக்காய்ச்

சாதுர்யமாய் வினாக்களை

வடிவமைக்க நேர்ந்ததோர் காலத்தின் கோல‌ம்!

வினாக்களும் விடைகளும் பொருளிழந்து போகக் கண்டு

மோன நிலை வேண்டி நின்றேன்

மீண்டு(ம்) வந்தது வ‌ச‌ந்த கால‌ம்!

6 comments:

Sriakila said...

ஹேய்...! நான் தான் முதலில் .....

ஆரம்பித்தப் புள்ளியிலேயே முடிகிற அருமையான வரிகள்! இது கொடுமையானத‌ல்ல, வசந்தமானப் பதிவு.

ஜெயந்த் கிருஷ்ணா said...

கேள்விகளும், விடைகளும் இல்லா காலம் காலம் நம்மை கடந்து போகும் காலமாகத் தான் இருக்க வேண்டும்.

அன்புடன் அருணா said...

வரட்டும் வரட்டும் வசந்த காலம்!

மாதவராஜ் said...

நல்லாயிருக்கு தீபா!

சந்தனமுல்லை said...

வாவ்....ரொம்ப பிடிச்சிருக்கு இந்த கவிதை...அதுக்கு ஏன் இந்த லேபிள்?? grrrrrrr

Priya said...

அருமையான கவிதை!