இசைப் பிரியர்களுக்கு, குறிப்பாக இளையராஜா ரசிகர்களுக்கு (வெறியர்கள்!)ஒரு விளையாட்டு.
இந்த ராகம், ராகம்னு சொல்றாங்களே, அதை நமக்குப் பிடிச்ச பாடல்களில் நாமளும் கண்டுபிடிக்க ட்ரை பண்ணலாமா? ஆனா இந்த விளையாட்டுக்கு ராகங்கள் பற்றித் தெரியவேண்டாம்; அதன் பேர்கள் கூடத் தெரியவேண்டாம்; நுட்பமான இசை ரசனை இருந்தாப் போதும். இது இளையராஜா ரசிகர்களுக்கு இல்லாம போகுமா?!
ஏன்னா அவர் பல அழகான ராகங்களைப் பல பாடல்களில் பல விதமா பயன்படுத்தி இருக்காராம்.
எடுத்துக்காட்டாக "அம்மா என்றழைக்காத..." பாட்டும் "ஜனனி ஜனனி" பாட்டும் ஒரே ராகம். கேட்டுப் பாருங்க புரியும்; ஒரே மாதிரி ஃபீல் கிடைக்கும்.
அதே மாதிரி இப்ப நான் கண்டுபிடிச்சது என்னன்னா, "சின்னா மணிக் குயிலே" பாட்டும் "சந்தைக்கு வந்த கிளியும்" ஒரே மாதிரி இருக்கு. ஹை!
அதே மாதிரி "சொர்க்கமே என்றாலும்" பாட்டும் "தென்றல் வந்து என்னைத் தொடும்" பாட்டும் ஒரே ராகம்.
சன்டிவி சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியில் இந்த மாதிரி பாட்ல்களைக் கோத்துப் பாடுவது ஒரு சுற்றாகவே வைக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.
இப்போ நாம் இப்படி ஒரே மாதிரி தொனிக்கிற பாட்டுக்களை லிஸ்ட் பண்ணலாமா?
ஸ்டார்ட் ம்யூஸிக்!!! (Literally!)
ராகங்கள் பற்றிய பயிற்சியும் தெரிவும் உள்ளவர்கள் உள்ளவர்கள் கலந்து கொண்டு திருத்தங்கள் சொல்ல வேண்டுகிறேன். என்ன ராகம் என்று சொன்னால் அதையும் தெரிந்து கொள்ளலாம். ஒரே பாட்டில் கலவையான ராகங்கள் இருப்பின் அதையும் சொல்ல வேண்டுகிறேன்! Volunteer judges are most welcome.
9 comments:
நல்ல கண்டுபிடிப்பு... நாங்களும் முயற்சிக்கிறோம்...
நல்ல முயற்சி பாராடுக்கள்
athu sari...
innum thedunnga...
அருமையான விளையாட்டு..
ஜனனி ஜனனி, அம்மா என்று அழைக்காத, வந்தாள் மகாலெஷ்மியே, யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே, நான் என்பது நீ அல்லவோ தேவ தேவா.. all are கல்யாணி ராகம்..
வளையோசை கல கல வென & செண்பகமே செண்பகமே are in சங்கராபரணம் ..
;-)
ஒரே சாயலைக்கொண்ட திரைபாடல்கள் என்று சில மாதங்களுக்கு முன் நானும் கூட இது போன்ற சில பாடல்களை எழுதியிருந்தேன்.
ஒரே சாயலைக்கொண்ட திரைபாடல்கள்:
இளையராஜாவின் தீவிர ரசிகர்களான என்னைப் போன்றவர்களுக்கு இது ஒரு அருமையான விளையாட்டு. இசைஞானம் அதிகம் உள்ள உங்களை விட ஜட்ஜாக இருக்கும் தகுதி வேறு யாருக்கு உண்டு? ஸ்டார்ட் ம்யூஸிக்!!! (இன்னும் ஆரம்பிக்கலையா? சீக்கிரம் ஆரம்பிக்கப்பா, வர்றேன்.. நமக்கு எப்பவுமே கொஞ்சம் starting troubleதான்)
'நீ ஒரு காதல் சங்கீதம்' (நாயகன்) - இதுவும் கல்யாணி ராகனம்தான்
ஐந்து ராகங்களில் அமைந்த பாடல்களை இந்தப் பதிவுகளில் பட்டியலிட்டுள்ளேன்.
- சிமுலேஷன்
http://simulationpadaippugal.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Post a Comment