Monday, May 31, 2010

ஆனி ஜைதி: Known Turf

ஆனி ஜைதி: "India's Shame" என்ற‌ த‌லைப்பில் ஃப்ரன்ட்லைன் பத்திரிகையில் ம‌ல‌ம் அள்ளுப‌வ‌ர்கள் பற்றி இவர் எழுதிய அழுத்தமான கட்டுரை தான் இவர் எழுத்தில் முதலில் வாசித்தது.
http://www.hinduonnet.com/fline/fl2318/stories/20060922005900400.htm

நாட்டில் எங்கெல்லாம் கையால் ம‌ல‌ம் அள்ளுவ‌தும் சேக‌ரிப்ப‌தும் நடைமுறையில் இருக்கிறதோ, அங்கெல்லாம் நேரில் போய் அவ‌ர்க‌ள் வாழ்க்கையைப் ப‌ட‌ம்பிடித்திருந்தார். இன்னும் எத்தனை இடங்களில் manual scavenging நடைமுறையில் இருக்கிறதென்ற உண்மை புரிந்த‌து. அவ‌மான‌மாக‌வும் இருந்த‌து.

பர‌ம்ப‌ரை ப‌ர‌ம்ப‌ரையாக‌ வேறு வேலைக்கும் செல்ல‌ முடியாம‌ல், பிடிக்காம‌லே இந்த‌த் தொழிலில் உழ‌ன்று வ‌ருப‌வ‌ர்க‌ள் ஆயிர‌மாயிர‌ம் பேர்.
சாக்க‌டை அள்ளுப‌வ‌ர்க‌ளில் நிலை இன்னும் ப‌ரிதாப‌ம். நாம் நினைத்துப் பார்க்க‌முடியாத‌ அருவ‌ருப்பைச் ச‌கித்துக் கொள்வ‌தோட‌ல்லாம‌ல் உயிருக்கும் ஆப‌த்தான‌ வேலைய‌து.

நாம் வெளியேற்றும் க‌ழிவுக‌ளைத் த‌ங்க‌ள் உயிரைக் கொடுத்துச் சுத்த‌ப்ப‌டுத்திச் சுகாதார‌மான‌ சூழ‌லை ஏற்ப‌டுத்திக் கொடுக்கும் இவ‌ர்க‌ளுக்கு நாம் கொடுக்கும் ப‌ரிசு: தீண்டாமைக் கொடுமை. உல‌க‌ம் அநியாய‌த்தின் மொத்த‌ உருவாக‌த் தான் இருக்கிற‌து.

சிறுவ‌ய‌தில் ப‌டித்த‌வொரு க‌தை நினைவுக்கு வ‌ருகிற‌து. யார் எழுதியதென்று நினைவில்லை; ஒரே ஒரு விஷயம் மட்டும் அதிர்ச்சியாய் மனதில் பதிந்திருக்கிறது: ஒரு வீட்டில் க‌ழிவ‌றைச் சுத்த‌ம் செய்ய‌ வ‌ந்த‌ முதிய பெண்ம‌ணி ஒருவர், வேலை முடிந்த‌தும் இய‌ற்கை உபாதை தாள‌முடியாம‌ல் கதவைத் தாளிட்டுக் கொண்டு அங்கேயே அம‌ர்ந்து விடுகிறார். இதைய‌றிந்த‌ வீட்டுப் பெண்ம‌ணி, க‌த்திக் கூச்ச‌ல் போட்டு...ஐயோ...

அப்போது ந‌ம்ப‌வே முடிய‌வில்லை. இப்ப‌டியெல்லாம் யாரும் இருக்க‌ மாட்டார்க‌ள் என்றே குழ‌ந்தை ம‌ன‌ம் ந‌ம்ப‌ விழைந்த‌து. ஆனி ஜைதியின் க‌ட்டுரையைப் ப‌டித்த‌ பின்பு உண்மையிலேயே அதிர்ச்சியாக இருந்தது.

ஃப்ர‌ன்ட்லைனுக்குப் பிற‌கு இப்போது Midday யில் பணியாற்றி வ‌ருகிறார். www.anniezaidi.com என்ற‌ இவ‌ர‌து வ‌லைப்பூவிலும் தன்னைப் பாதித்த ப‌ல‌த‌ர‌ப்ப‌ட்ட‌ விஷ‌ய‌ங்க‌ளைப் ப‌ற்றிச் சுவார‌சிய‌மாக‌ எழுதி வ‌ருகிறார். எழுத்திலும் சிந்தனைக‌ளிலும் பல இடங்களில் அருந்த‌தி ராயை நினைவுப‌டுத்துகிறார்.

ச‌மீப‌த்தில் "Known Turf" என்ற‌ த‌லைப்பில் த‌ன‌து ப‌த்திரிகையாள‌ர் அனுப‌வ‌ங்களைப் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
அதைப் பற்றிய குறிப்புகள் இங்கே:

http://lite.epaper.timesofindia.com/getpage.aspx?pageid=15&pagesize=&edid=&edlabel=TCRM&mydateHid=15-05-2010&pubname=&edname=&publabel=TOI

http://www.tehelka.com/story_main44.asp?filename=hub220510salt_shakers.asப்

http://pareshaan.blogspot.com/2010/04/annie-zaidi-rocks-house.html#comment-forம்

இது என்னை மிகவும் கவர்ந்த ஒரு எழுத்து ஆளுமை மற்றும் அவரது நூலின் அறிமுகம் மட்டுமே. புத்தகத்தை படித்த பின்பு அதைப் பற்றிய விரிவான பார்வையோடு வருகிறேன்.

5 comments:

ரிஷபன் said...

பர‌ம்ப‌ரை ப‌ர‌ம்ப‌ரையாக‌ வேறு வேலைக்கும் செல்ல‌ முடியாம‌ல், பிடிக்காம‌லே இந்த‌த் தொழிலில் உழ‌ன்று வ‌ருப‌வ‌ர்க‌ள் ஆயிர‌மாயிர‌ம் பேர்.
சாக்க‌டை அள்ளுப‌வ‌ர்க‌ளில் நிலை இன்னும் ப‌ரிதாப‌ம். நாம் நினைத்துப் பார்க்க‌முடியாத‌ அருவ‌ருப்பைச் ச‌கித்துக் கொள்வ‌தோட‌ல்லாம‌ல் உயிருக்கும் ஆப‌த்தான‌ வேலைய‌து.
உண்மை.. சாப்பாட்டில் முடி அகப்பட்டாலே குமட்டுகிறது.. ஆனால் இவர்களோ.. எத்தனை வருடங்களாகப் பேசிக் கொண்டிருக்கிறோம்.. விடிவு வராமலே..

Anonymous said...

நிச்சயமா என்னால் அந்த சுட்டிகளைப்பார்க்க முடியாது. :(((( அந்தளவுக்கு கூட தாங்க கூடிய மனதைரியம் இல்லை. இப்படிப்பட்ட விஷயங்களை படிக்க கூட முடியாத போது, அதிலேயே உழன்றுக்கொண்டிருக்கும் மனிதர்களை நினைத்தால் .. ஹ்ம்ம்ம்ம் என்ன சொல்லன்னு தெரியல‌.

காமராஜ் said...

மிகவும் அர்த்தமுள்ள பகிர்வு.உபயோகமான சுட்டிகள்.
நன்றி தீபா.

நறுமுகை said...

நாம் ரோட்டில் அடிபட்டவர்களையே பார்க்காமல் செல்பவர்கள்.. இதெல்லாம் வாழ்க்கையில் சகஜம்.. இதெல்லாம் பார்க்க தெரசா மாதிரி பொழப்பத்தவங்க யாராவது இருப்பாங்க போங்கப்பு...

www.narumugai.com

Uma said...

அறிமுகத்திற்கு நன்றி தீபா.