Sunday, November 22, 2009

A slice of life...

அலுவலகத்தில் அநியாயத்துக்கு வேலை. தினமும் கிட்டத்தட்ட பத்து மணி நேரத்துக்கு வேலை பார்க்க வேண்டி இருக்கிறது.

வேலை சுவாரசியமாக இருந்தாலும் சின்ன இடைவெளி கூட இல்லாமல் என்ன இது என்று ஒரு சலிப்பு வருகிறது. வீட்டுக்கு வரும் போது மணி எட்டரை ஆகி விடுகிறது. நல்லவேளை நேஹா இன்னும் ராக்கோழியாக இருப்பது ஒரு வகையில் நிம்மதி தான்! பன்னிரண்டரை வரை அவளோடு விளையாடிய பிறகு ஒரு மணி வாக்கில் தான் தூங்குகிறாள்.

சரி சனி ஞாயிறாவது குழந்தையுடன் முழுநேரமும் இருக்கலாமென்றால் கடந்த இரு வாரங்களாக சனிக்கிழமையும் வேலை வைத்து அழைத்து விட்டார்கள். மற்ற நாட்கள் வேலைக்குப் போகும் போது அழாத நேஹா சனிக்கிழமை அன்று எப்படியோ வித்தியாசத்தை உணர்ந்து முகம் சுணங்கினாள். அது தான் தாங்கவே முடியவில்லை.


நேஹா!

பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டிய ஒரு அரிய பொக்கிஷமாகவே தான் குழந்தையை ஓராண்டு வரை கருதி வந்தேன். இப்போது தான் அவள் ஒரு ”தனி கேரக்டராக” தனது குறும்புகளாலும், மழலைப் பேச்சுகளாலும் உருவெடுப்பதை நன்றாக உணர்கிறேன்!

விளம்பரங்கள் வந்தால் கண்கொட்டாமல் பார்ப்பதை நிறுத்தி விட்டாள். அதற்குப் பதிலாக விளம்பரத்தின் முதல் ஃப்ரேமிலேயே அடுத்து வரப்போவதைச் சொல்லிவிட்டு நகர்கிறாள்.

ஆனால் பாடல்கள் இன்னும் விரும்பிப் பார்க்கிறாள். அவளுக்குப் பிடித்த பாடல்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.

மேல் வீட்டுப் பையன் (மூன்று வயது) வந்திருந்தான். பிஸ்கட் தின்று கொண்டிருந்த் நேஹா டப்பாவை அவளே திறந்து நான்கு பிஸ்கட்டுகளை அவன் கையில் கொடுத்தாள். அவன் அம்மா பதறி “அவனுக்கு வயிற்றுப் போக்கு, வேண்டாம் என்று அவனிடமிருந்து வாங்கி என் கையில் கொடுத்து விட்டார்கள்.
அழுகையென்றால் அப்படி ஒரு அழுகை. அந்தச் சிறுவன் அல்ல; நேஹா தான். ஒரே ஒரு பிஸ்கட்டையாவது அவன் கையில் கொடுத்த பிறகே அடங்கினாள். யம்மா. முடியலம்மா!

காய் வாங்கச் செல்லும் போது உடன் அழைத்துச் சென்றால் நமக்கு முன் “எவ்ளோ” என்று கேட்டாகிறது.
தக்காளியை எடுத்து ”மம் மம்.. ஆ” என்று நம் வாயில் வைக்கிறாள்! காய்காரர் ஒரு மாதிரி பார்த்தார். ஏதோ நான் தான் ட்ரெய்னிங் கொடுத்தது போல்... நேரம்!

ஒன் டூ த்ரீ ஃபோர் ஃபைவ் சிக்ஸ், அவள் இஷ்டத்துக்கு வரிசை மாற்றி ராகம் போட்டுச் சொல்கிறாள்.
இது அவளது பாட்டியும் அவளைப் பார்த்துக் கொள்ள வரும் அக்காவும் சொன்னது. ஹூம்.. அது ஒரு சின்ன நெருடல் எனக்கு. முதலில் நான் பார்க்காமல் (கேட்காமல்) போய்விட்டேனே என்று!

19 comments:

Romeoboy said...

நமோ நேஹா !!!

சுட்டிக்கு எனது சார்பாக ஒரு ஹாய் சொல்லவும் .

பா.ராஜாராம் said...

//மேல் வீட்டுப் பையன் (மூன்று வயது) வந்திருந்தான். பிஸ்கட் தின்று கொண்டிருந்த் நேஹா டப்பாவை அவளே திறந்து நான்கு பிஸ்கட்டுகளை அவன் கையில் கொடுத்தாள். அவன் அம்மா பதறி “அவனுக்கு வயிற்றுப் போக்கு, வேண்டாம் என்று அவனிடமிருந்து வாங்கி என் கையில் கொடுத்து விட்டார்கள்.
அழுகையென்றால் அப்படி ஒரு அழுகை. அந்தச் சிறுவன் அல்ல; நேஹா தான். ஒரே ஒரு பிஸ்கட்டையாவது அவன் கையில் கொடுத்த பிறகே அடங்கினாள். யம்மா. முடியலம்மா!

காய் வாங்கச் செல்லும் போது உடன் அழைத்துச் சென்றால் நமக்கு முன் “எவ்ளோ” என்று கேட்டாகிறது.
தக்காளியை எடுத்து ”மம் மம்.. ஆ” என்று நம் வாயில் வைக்கிறாள்! காய்காரர் ஒரு மாதிரி பார்த்தார். ஏதோ நான் தான் ட்ரெய்னிங் கொடுத்தது போல்... நேரம்!

ஒன் டூ த்ரீ ஃபோர் ஃபைவ் சிக்ஸ், அவள் இஷ்டத்துக்கு வரிசை மாற்றி ராகம் போட்டுச் சொல்கிறாள்.
இது அவளது பாட்டியும் அவளைப் பார்த்துக் கொள்ள வரும் அக்காவும் சொன்னது. ஹூம்.. அது ஒரு சின்ன நெருடல் எனக்கு. முதலில் நான் பார்க்காமல் (கேட்காமல்) போய்விட்டேனே என்று!//

வெளியில் இருக்கிறோம் தீபா.அமித்தம்மா,பப்பு ஆச்சி,நேகா அம்மா,எல்லோருமே குடும்பத்தை கொண்டு சேர்க்கிறீர்கள்.கிட்டக்க.

மணிநரேன் said...

நேஹா - நைஸ்...:)

Anna said...

A very moving post.

I completely understand how you feel. It is very hard (to say the least) to juggle motherhood and a career, to find a balance.

I felt extremely guilty when I first started going back to work after having my son (still do to some extent).

I have an unwritten deal with my supervisor. I work 8 hours Monday to Friday at work. I leave at 4pm (unless there's an exceptional circumstance and nowadays I normally miss the monthly staff meetings, weekly seminars which are often often after 4 pm) so that I can spend some quality time with my little one. When he has gone to sleep, I then work from home or go back to work if I have to. I somehow get the work done, so he is normally fine with it.

It is also a fact that here, people are becoming a little bit more aware of the situation. At least peopel are talking about women returnign to work and the hardships. Is it the same in India?

You metion in your profile that you are a technical writer, can you sometimes work from home? Do you have other mothers with toddlers or babies working in your section?

"ஏன் இப்படி? எல்லாரும் சேர்ந்து போய் சனி ஞாயிறுகளில் வேலை செய்ய முடியாதென்று சொல்லலாம் என்றேன். அப்பிராணியைப் பார்ப்பது போல் என்னைப் பார்த்தனரே தவிர ஒருவரும் தயாராக இல்லை. அவரவர் தனிப்பட்ட முறையில் ஏதாவது பேசி ஒவ்வொரு வாரமும் தப்பிக்க நினைப்பது தான் சாதுர்யமாம்... ஹூம்!"

That's sad. Sorry.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்ல பதிவு தீபா.. அலுவலக விசயங்களைப் பகிரும் பொழுது கொஞ்சம் கவனம் தேவை!!

யார் எப்படின்னு சொல்ல முடியாது.. அதனால தான் :)

உங்கள் மகளைப் பற்றிய குறிப்புகள் அழகாக இருக்கிறது.

நாஸியா said...

இங்கே எதிர்த்த வீட்டில் உள்ள குழந்தையும் அப்படித்தான்.. அப்படி அழுவான்.. ஒரு வகையில் நான் அதை அனுபவிக்கவில்லை என்று நினைக்கும்போது ஒரு சின்ன சந்தோஷம் எட்டி பார்க்கிறது.. பள்ளியிலிருந்து வரும்போதே நானும் என் தம்பியும் ம்மா என்றழைப்பது நாலு வீட்டுக்காவது கேட்கும்..

அதே சந்தோசத்தை வருங்கால்த்தில் என் குழந்தைகளுக்கும் கொடுக்க முடியுமா என்று யோசித்தால் பெருமூச்சே மிஞ்சுகிறது...

அமுதா said...

நேஹா சமத்து போல... வாழ்த்துக்கள்!!!

/*அது ஒரு சின்ன நெருடல் எனக்கு. முதலில் நான் பார்க்காமல் (கேட்காமல்) போய்விட்டேனே என்று!
*/
:-( வேலைக்கு கொடுக்கும் விலை???

சந்தனமுல்லை said...

தீபா, மிகவும் நேர்த்தியான, உள்ளத்திலிருந்து வந்த இடுகை!! தங்கள் மனதை அறிய முடிகிறது! நேஹாவின் வளர்ச்சியும் மகிழ்ச்சியைத் தருகிறது! இருந்தால் ஒரு ஓரத்தில் லேசான வருத்தத்தையும் தருகிறது இந்த இடுகை!

நேஹாவின் குறும்புகள் - செம கலக்கல்!! மிகவும் ரசித்தேன்!

லெமூரியன்... said...

அதிகாலை பூக்கள் விரிவதை போல நேஹாவின் உலகம் மெல்ல மெல்ல விரிவடைந்து கொண்டே செல்கிறது...!
மேல் வீட்டு பையனை போல அவள் உலகத்தில் உள்ள அன்பை பெற நிறைய பேர் தயாராகிக் கொண்டிருப்பர் இவ்வேளையில்...!

:-)
பதிவு அருமை தீபா..!

அமிர்தவர்ஷினி அம்மா said...

காய் வாங்கச் செல்லும் போது உடன் அழைத்துச் சென்றால் நமக்கு முன் “எவ்ளோ” என்று கேட்டாகிறது.

வெரிகுட், ரொம்ப சமத்து நேஹா.

முதலில் நான் பார்க்காமல் (கேட்காமல்) போய்விட்டேனே என்று!//

இது மாதிரி முதல் தருணங்களை நாம் தவறவிடுவது வருத்தமாகத்தான் இருக்கும், அப்புறம் பழகிடும் :( :)

☼ வெயிலான் said...

நேஹாவின் குறும்புகளை நானும் ரசித்தேன்.

Anna said...

Hi Deepa,

I wrote a comment on this post earlier today. I was wondering whether you received it.

காமராஜ் said...

நல்லாருக்கு தீபா.
நேகாவுக்கு எங்கள் அன்பு.
அலுவலகம் இந்த காலத்தின் சின்ன ஸ்லைஸ்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\எவ்ளோ// :))

மாதவராஜ் said...

தீபா!

இரண்டுநாட்கள் கழித்து இப்போதுதான் உன் பதிவைப் பார்த்தேன். நேரம், சிந்தனையை தின்னும் வேறு வேலைகள் வந்துவிட்டன.

நேஹாவைப் பற்றி அறிந்து கொள்ள சந்தோஷமாய் இருக்கிறது. உன்னோடு நேரில் பேசிக்கொண்டு இருந்தது போலவும், நேஹாவை ரசித்துக்கொண்டு இருந்தது போலவும் உணர முடிந்தது. பகிர்வுக்கு நன்றி. அலுவலகம் பற்றி அறிந்து கொள்ளும் போது வேதனையாய் இருக்கிறது. கோபமும் வருகிறது. இப்படித்தான் இருக்கிறது.

உயிரோடை said...

தீபா, அலுவ‌ல‌க‌த்தில் என்ன‌ தான் ப்ர‌ஷ்ச‌ர் என்றாலும் நேர‌த்துக்கு கிள‌ம்ப‌வும் ச‌னி,ஞாயிறுக‌ளில் வேலைக்கு செல்லாம‌ல் பார்த்து கொள்ள‌வும் நாம் தான் முய‌ற்சிக்க‌ வேண்டும்.

என்ன‌ அப்ப‌டி எல்லாம் வேலை செய்தால் விட்ட‌ல் ப‌ர்ஃபம‌ர் என்றே ப‌ட்ட‌ம் கிடைக்க‌லாம் அப்போதும் பெஸ்ட் கிடைக்க‌ போவ‌தில்லை அதை கொஞ்ச‌மாக‌ வேலை செய்தே பெற்று கொள்ள‌லாமே இல்லையா

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல பதிவு தீபா

ஆர்வா said...

அழகான பதிவு..

Deepa said...

நன்றி Romeoboy!
சொல்லி விட்டேன்.

நன்றி ராஜாராம்!
:-)

நன்றி செந்தில்வேலன்!
ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க. திருத்திட்டேன் பாத்தீங்களா. :-))

நன்றி முல்லை!

நன்றி அமுதா!

நன்றி நாஸியா!

நன்றி மணிநரேன்!

நன்றி லெமூரியன்!
//அதிகாலை பூக்கள் விரிவதை போல நேஹாவின் உலகம் மெல்ல மெல்ல விரிவடைந்து கொண்டே செல்கிறது...!
மேல் வீட்டு பையனை போல அவள் உலகத்தில் உள்ள அன்பை பெற நிறைய பேர் தயாராகிக் கொண்டிருப்பர் இவ்வேளையில்...!// நெஞ்சைவிட்டகலாத வரிகள். மிக்க நன்றி!

நன்றி அமித்து அம்மா!
அமித்து நேஹாவை விசாரித்த குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. என்ன பண்றா குட்டி?

The Analyst!
Can't thank you enough for your wise words and valuable advice. You are right, we must definitely learn to strike a balance between family and work, or we are lost.

But I personally don't like working from home. I do not want to taint the happy hours at home(though limited) being preoccupied with something. Though, may be in a few years time, when Neha is older, it might work.
//Do you have other mothers with toddlers or babies working in your section?
// Thankfully, there are. :-)

நன்றி வெயிலான்!

நன்றி காமராஜ் அங்கிள்!

நன்றி முத்துலெட்சுமி!

நன்றி அங்கிள்!

நன்றி உயிரோடை!

நன்றி ராதாகிருஷ்ணன்!

நன்றி கவிதை காதலன்!