Monday, November 16, 2009

வாடா கோமாளி!

ஒரு நாட்டுப்புறப் பாடல்!

வெதை வெதைக்கணும் வெதை வெதைக்கணும் வாடா கோமாளி!
வெதை வெதைச்சா கோழி கிண்டும் போடா நா மாட்டேன்

கோழி கிண்டுனா வேலி போடலாம் வாடா கோமாளி
வேலி போட்டா மேலு வலிக்கும் போடா நா மாட்டேன்

மேலு வலிச்சா வென்னி வெச்சுத் தர்றேன் வாடா கோமாளி
வென்னி வெச்சுக் குளிச்சா வவுறு பசிக்கும் போடா நா மாட்டேன்

வவுறு பசிச்சா சோறு போடறேன் வாடா கோமாளி
சோறு தின்னா விக்கலெடுக்கும் போடா நா மாட்டேன்

விக்கலெடுத்தா தண்ணி தர்றேன் வாடா கோமாளி
தண்ணி குடிச்சா பொறைக்கு ஏறும் போடா நா மாட்டேன்

பொறைக்கு ஏறுனா தலையில தட்டறேன் வாடா கோமாளி
தலையில தட்டுனா செத்துப் போவேன் போடா நா மாட்டேன்
*****************
இது எப்போதோ சிறு வயதில் ஒரு புத்தகத்தில் படித்து அண்ணன் சொல்லிக் கொடுத்த பாட்டு! ரொம்பப் பிடித்துப் போனதால் மறக்கவே இல்லை!

18 comments:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

இனிமையான நாட்டுப்புறப் பாடல் :)

தினேஷ் said...

எங்கேயோ கேட்ட பாட்டா இருக்கே...

நேசமித்ரன் said...

ரொம்ப நல்ல பாட்டு எவ்வளவு எளிமையான காதலின் எள்ளல்

நினைவு வைத்திருக்கும் உங்களுக்கும்
சொல்லிக் கொடுத்த அண்ணனுக்கும் வாழ்த்துகள்

கவி அழகன் said...

நல்ல பாட்டு

வேதாளன் said...

:D

காமராஜ் said...

அடிசக்கை தீபா கலக்குறே,
நமது பால்யத்தின் நினைவுகளில் இருந்து கிளறிஎடுத்துக் கொடுத்த பொக்கிஷம் இது.
' பேராசைக்காரனான மனிதனவன் ' பாட்டு எனக்கு ரெண்டு நாளா நினைவுக்கு வந்துகொண்டே இருந்தது.
முழுப்பாட்டும் நினைவில்லை. இது அந்தக் குறை தீர்க்கும் குதியாட்டம்..

Vidhoosh said...

தலைப்பில் உள்ள கொடேஷனை நீக்குங்கள். திரட்டிகளில் தலைப்பு தெரியாது.

நல்ல பகிர்தல் தீபா :)

--வித்யா

சந்தனமுல்லை said...

:-))) நல்லாருக்கு...இது மாதிரி ஒரு சினிமா பாடல் மாமனாருக்கு மாப்பிள்ளைக்கும் இடையில் பாடுவதாக கேட்ட நினைவு!

அமுதா said...

இனிமையான பாடல்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல பகிர்தல்

அமிர்தவர்ஷினி அம்மா said...

இதுவரை அறிந்ததில்லை, தெரிய வைத்ததற்கு நன்றி.

விக்னேஷ்வரி said...

இது ஏதோ படத்துல கேட்ட நியாபகமிருக்கு தீபா.

Unknown said...

good song...the same song used in the movie thirupathi :)

மாதவராஜ் said...

தீபா!

இப்போதுதான் பார்த்தேன். பிரமாதம். ஞாபகத்துல இருந்து எழுதினேன் என்பது சுவாரசியமான விஷயம். சில பாட்டுக்கள் எத்தனை காலமானாலும் மறப்பதில்லை. இந்த பாட்டுக்கு அப்படியான தன்மை இருக்கிறது. அருமையான, இனிமையான பகிர்வு.

☀நான் ஆதவன்☀ said...

இது சினிமா பாட்டு இல்ல?

அம்பிகா said...

எளிய, இனிய, பாடல்.
நினவில் நின்றதில் வியப்பில்லை.
பகிர்வுக்கு நன்றி, தீபா

Deepa said...

கருத்துப் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி.

இந்தப் பாடல் சினிமாவில் வந்தது என்று பின்னூட்டத்தில் பலரும் சுட்டிக்காட்டிய பின்பே அறிந்தேன்!
(அறியாமையால் பல்ப் வாங்கி விட்டேன்!)
;-))

செல்வநாயகி said...

நல்ல பகிர்தல்.