Sunday, November 1, 2009

பிடித்தவர்; பிடிக்காதவர் - தொடர் விளையாட்டு

பிடித்தவர் பிடிக்காதவர் தலைப்பில் எழுதச் சொல்லி அழைத்திருக்கிறார் மாதவராஜ் அங்கிள்.

அவரே சொல்லி இருப்பது போல் இது ஒரு குழந்தைத் தனமான விளையாட்டுத் தான். ஆனால் குழந்தைத் தனங்களை மீட்டெடுக்கும் எந்த ஒரு செயலுமே எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் தான் என்னைக் கேட்ட போது உடனே சம்மதித்து விட்டேன்!

ஒருவரைப் பிடிக்கக் கூடப் பெரிதாகக் காரணம் இல்லாமல் போகலாம். ஆனால் பிடிக்காமல் போக நிச்சயம் மனதிற்குள்ளாவது ஆழ்ந்த காரணம் இருக்கும்.
அதைச் சொல்ல வைப்பது தான் இந்த விளையாட்டின் வெற்றி.


எனக்குப் பொதுவாக strong likes and dislikes உண்டு.
(But no preconceived prejudices. And I definitely do not hate anybody in cold blood. :-) )

பிரபலங்களைப் பொறுத்தவரை strong likes and dislikes கிடையாது. மனதில் உடனே தோன்றுபவர்களைத் தான் இங்கே எழுதுகிறேன். உதாரணமாக நான் ரொம்ப மதிக்கின்ற, என்றுமே பிடித்த நடிகை என்று யோசித்தால் மனோரமா தான். ஆனால் சட்டென்று தமன்னாவின் துறுதுறு முகம் வருகிறது. அதனால் இப்போதைக்குத் தமன்னா தான்!

1. அரசியல் தலைவர்
பிடித்தவர்: பெருந்தலைவர் காமராஜர்.
பிடிக்காதவர்: சுப்ரமணியம் சுவாமி

2. எழுத்தாளர்
பிடித்தவர்: தமிழ்ச்செல்வன்
பிடிக்காதவர்: தேவிபாலா (தெரியாமல் சில கதைகள் படித்துத் தலைவலியில் அவஸ்தைப் பட்டிருக்கிறேன்)

3. கவிஞர்:
பிடித்தவர்: பாரதியார்
பிடிக்காதவர்: வாலி

4. இயக்குனர்:
பிடித்தவர்: பாலுமகேந்திரா
பிடிக்காதவர்: எஸ் பி முத்துராமன்

5. நடிகர்:
பிடித்தவர்: விக்ரம்
பிடிக்காதவர்: அஜீத்

6. நடிகை:
பிடித்தவர்: தமன்னா
பிடிக்காதவர்: த்ரிஷா

7 . இசையமைப்பாளர்:
பிடித்தவர்: How to name him? The one and only maestro!
பிடிக்காதவர்: இந்த நகை ஸ்டாண்ட் மாதிரி ஒருவர் வருவாரே சில்க் ஜிப்பா எல்லாம் போட்டுக் கொண்டு, (சங்கர்) கணேஷ்

8. பாடகர்:
பிடித்தவர்: ஹரிசரண்
பிடிக்காதவர்: ஷங்கர் மகாதேவன்

9. பாடகி:
பிடித்தவர்: என்றும் என்றென்றும், குரலிலும் குழந்தைச் சிரிப்பிலும் வசியப்படுத்தும் சித்ரா.. சித்ரா... சித்ரா
பிடிக்காதவர்: அனுராதா ஸ்ரீராம்

10. விளையாட்டு வீரர்:
பிடித்தவர்: கிரிக்கெட் ஆடாத அனைத்து விளையாட்டுக் காரர்களும்
பிடிக்காதவர்: கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் அனைவரும்! :)

ஆட்டத்தைத் தொடர நான் அன்புடன் அழைப்பது:

சென்ஷி

ஆயில்யன்

சின்ன அம்மிணி

ராப்

பி.கு: மன்னிக்கவும். விதிகளை எழுத மறந்து விட்டேன். விதிமுறைகளுக்குத் தொடரின் முதல் பதிவைப் பார்க்கவும்.

28 comments:

ஆயில்யன் said...

//ஆனால் பிடிக்காமல் போக நிச்சயம் மனதிற்குள்ளாவது ஆழ்ந்த காரணம் இருக்கும்.
அதைச் சொல்ல வைப்பது தான் இந்த விளையாட்டின் வெற்றி.//


ஏற்றுக்கொள்கிறேன்!

இந்த விளையாட்டின் வெற்றி என்ற சொல்லில், நாம் இன்னொருவரிடம் மனதளவில் தோல்வியடைகின்றோம்! -
இதுவும் கூட நிதர்சனம் தானே :)

[தொடர்பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி வெகு சீக்கிரத்திலேயே பதிவிட முயற்சிக்கிறேன்]

Kumky said...

:-))

அமிர்தவர்ஷினி அம்மா said...

அழகா எழுதியிருக்கீங்க தீபா

உங்கள் தோழி கிருத்திகா said...

என்னாங்க நீங்க...ஷங்கர் மஹாதேவனைப்பொயி புடிக்காதுங்கறிங்க.....:(...சரி விடுங்க..இததான் இங்கிலீசுல opinion differs அப்டினு சொல்லுவாங்க

பா.ராஜாராம் said...

உங்களோடு டூ.

--த்ரிஷா பேரவை.

thiyaa said...

உங்க உணர்வு புரியுது

தமிழ் அமுதன் said...

பிடிக்காதவர்: வாலி

;;(((

ரவி said...

ஓட்டு போடும் அளவுக்கு நல்ல பதிவு :))

ரவி said...

ஐ மீன் எனக்கு பிடித்த பதிவு

Deepa said...

நன்றி ஆயில்யன்!
இயன்ற போது எழுதுங்கள்

நன்றி கும்க்கி!

நன்றி அமித்து அம்மா!

நன்றி கிருத்திகா!
:-) உண்மை தான்.

நன்றி ராஜாராம்!
:-)) வாய்விட்டுச் சிரித்தேன்.

நன்றி தியாவின் பேனா!
என்ன புரிந்தது?

நன்றி ஜீவன்!
no no feelings pls!

நன்றி ரவி!
:-)

Jawahar said...

ஹரிஹரன் - சங்கர் மகாதேவன் ஒப்பீடு துறை சார்ந்த காரணங்கள் அடிப்படையில்தான் சொல்லியிருக்கிறீர்களா அல்லது அதற்கு அப்பாற்பட்ட காரணங்கள் உண்டா?

சங்கர் மகாதேவனின் இசைத் திறமை ஹரிஹரனுக்கு இணையானது அல்லது அதனிலும் மேம்பட்டது. ஆனால் சங்கரின் தோற்றம் அவரது இசையைப் பிடித்தவர்களுக்கே பிடிக்காது.

தமன்னா, திரிஷா கூட என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை.

தமன்னாவின் வசீகரச் சிரிப்புக்கு நானும் அடிமைதான், ஆனால், திரிஷாவின் முக பாவங்கள் அவருக்கு வரா.

http://kgjawarlal.wordpress.com

Deepa said...

நன்றி ஜவஹர்!

ஹரிஹரன் அல்ல, ஹரிசரண்.

காரணங்கள் சொல்லவேண்டும் என்பது விதிமுறையில் இல்லை! ஆனாலும் நீங்கள் கேட்பதால் சொல்வதில் எனக்கு ஒன்றும் தயக்கமில்லை. தனியே தன்னந்தனியே பாடலில் ஷங்கர் மகாதேவனின் சேஷ்டைகளைப் பார்த்தபின்பு ஏனோ அவரைப் பிடிக்காமல் போனது. As i said, it;s not a strong dislike, just a slight aversion.

ஹரிசரணின் குரலில் அசாத்திய ஈர்ப்பு உண்டு. உதாரணம்: உனக்கென இருப்பேன், தொட்டுத் தொட்டு என்னை, (காதல்) சரியா இது தவறா (கல்லூரி)

தமன்னா - த்ரிஷா I don't think its worth any serious discussion. :-) Feel free to like trisha, if you please!

thirunarayanan said...

அய்யா பிடித்தவரை எழுதுவது நியாயம்.
பிடிக்காதவரை எழுதுவது அநியாயம்

rapp said...

சீக்கிரமா எழுதறேன் தீபா:) தொடர கூப்டதுக்கு நன்றி:):):)

சந்தனமுல்லை said...

ரசித்தேன் தீபா! /ஆனால் குழந்தைத் தனங்களை மீட்டெடுக்கும் எந்த ஒரு செயலுமே எனக்கு மிகவும் பிடிக்கும். /
:-)


/பிடிக்காதவர்: அனுராதா ஸ்ரீராம்/

எனக்கும்...!!

ப்ரியமானவள் said...

இதுவும் சரிதானோ?

பெண்களின் முன்னேற்றம் உண்மையா
http://priyamanavai.blogspot.com/2009/11/blog-post.html

Deepa said...

நன்றி திருநாராயணன்!

//பிடிக்காதவரை எழுதுவது அநியாயம்//
cool, sir!
:-) கண்டிப்பாகப் பிரபலங்களைப் பற்றி மட்டும் தான் எழுத வேண்டுமென்பது விதி. பிரபலங்கள் என்றாலே பொது அபிப்ராயங்களுக்கு உட்பட்டவர்கள் தானே.
மேலும் நமது தனிப்பட்ட விருப்பத்தை நமக்குள் பகிர்வதில் அவர்களுக்கு என்ன இழுக்கு வந்து விடப்போகிறது?

Deepa said...

நன்றி ராப்!

நன்றி முல்லை!

நன்றி ப்ரியமானவள்!
நீங்கள் தந்த சுட்டியைப் படித்தேன்.
பின்னூட்டம் பாருங்கள்.

Kalasbhojanam said...

Nice list.. makes me think wht are my strong likes and dislikes as i never thought abt it once till date..

Romeoboy said...

ஒவ்வொரு மனிதர்க்கும் மாறுபட்ட சிந்தனைகள் இருக்கும் என்பது இந்த விளையாட்டு முலம் தெரிகிறது.

காமராஜ் said...

மிக அழுத்தமான தேர்வு. வெளிப்படையானதும் கூட.நாமொன்றும் நடிகர்கள் இல்லை மழுப்புவதற்கு.
விளையாட்டு குறித்த விருப்பும் வெறுப்பும் அழகிய எள்ளல். இப்படியான் சீரியஸ் பதிவுகளில் சிரிப்பையும் வரவழைக்கிறது மட்டும் தீபாவின் சாயல்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

:))

நிலாரசிகன் said...

//பிடிக்காதவர்: கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் அனைவரும்! :)/

:(((

பிடிக்காதவர்: ஆஸி.கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் அனைவரும்னு சொல்லி இருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும் :(

மாதவராஜ் said...

அழைப்பினை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி.
//பிடிக்காதவர்: இந்த நகை ஸ்டாண்ட் மாதிரி ஒருவர் வருவாரே சில்க் ஜிப்பா எல்லாம் போட்டுக் கொண்டு, (சங்கர்) கணேஷ்//
ரசித்தேன்.

கடைசிக் கேள்வியையும், பதிலையும் ரசித்தேன். ஜோவுக்கு காண்பித்தாயா?

Anonymous said...

அழைப்பிற்கு நன்றி தீபா!!! சீக்கிரமே பதிவிடுகிறேன்.

(ஆணி அதிகம். அதனால்தான் உடனே பதில் சொல்ல முடியாமல் போய்விட்டது)

Anonymous said...

தொடர் பதிவு போட்டாச்சு
http://chinnaammini.blogspot.com/2009/11/blog-post.html

thiyaa said...

அழகா எழுதியிருக்கீங்க தீபா

ச.முத்துவேல் said...

எனக்கு சுத்தமா மனோரமாவைப் பிடிக்காது. என்னையும் இந்தத் தொடர் பதிவு எழுதக்கூப்பிட்டபிறகு, இந்த ஒன்னைச்சொல்றதுக்காகவே எழுதனும்னும் நினைச்சிருந்தேன்.ஆனா, எழுதப்பொறதில்ல.
/ஆனால் பிடிக்காமல் போக நிச்சயம் மனதிற்குள்ளாவது ஆழ்ந்த காரணம் இருக்கும்./