Thursday, November 19, 2009

தீபாவளி - தொடர் பதிவு!

ராஜாராம் அவர்கள் என்னை இத்தொடர் பதிவுக்கு அழைத்து இப்போது மறந்தே போயிருப்பார்.

ஏற்கனவே தீபாவளி பற்றி எழுதி விட்டதால் கொஞ்சம் இடைவெளி விடலாமென்று நினைத்து, பிறகு ரொம்பத் தாமத்மாகி விட்டது! மன்னிக்கவும் ஸார்! உங்கள் அன்பான அழைப்புக்கு மிக்க நன்றி!

1. உங்களை பற்றி ஒரு சிறு குறிப்பு?

தீபா. நேஹாவின் தாய். அன்புக்கு நான் அடிமை! கொஞ்சம் கிறுக்கு.....வேன்னு சொல்ல வந்தேன், ப்ளாக்ல. நீங்க வேற எதுவும் நினைச்சுடாதீங்க!


2. தீபாவளி என்றதும் உங்கள் நினைவுக்கு வரும்(மறக்க முடியாத) ஒரு சம்பவம்?

எட்டாவது படிக்கும் போது புஸ்வாணம் வெடித்துக் கை புண்ணானது.


3. 2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

சென்னையில்.

4. த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

It's a serious business affair! துணிக்கடைகளுக்கு, நகைக்கடைகளுக்கு, மற்றும் ஊடகங்களுக்கு!

5. புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

தீபாவளிக்கென்று வாங்கவில்லை. புதிது இருந்தது.


6. உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

கேசரியும் வடையும்.


7. உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவித்தீர்கள்?

நாங்கள் உறவினர் வீட்டுக்குச் சென்றோம். நண்பர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தனர்!


9. இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?

இந்த நாள் என்று குறிப்பிட்டுச் செய்ததில்லை.

10. நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?
நானே ரொம்ப லேட்டு. அதனால் யாரையும் அழைக்கவில்லை!

:-)

7 comments:

அமுதா said...

பட் பட்டென்று அழகான பதில்கள்

பா.ராஜாராம் said...

அமுதா said..

//பட் பட்டென்று அழகான பதில்கள்//

ஆம், அமுதா.பட்டாசு,பட்டாசென்று கூட!

புஸ்வானம்...:-(

நன்றி தீபா.

Deepa said...

நன்றி அமுதா!

நன்றி ராஜாராம் ஸார்!

//புஸ்வாணம் :-(//
என் கையில் வெடித்ததைக் குறிப்பிடுகிறீர்களா, இல்லை இந்தப் பதிவையா?
க்ளியரா சொல்லுங்க ஸார்! :-))

thiyaa said...

அழகான பதில்கள்

Anonymous said...

ரொம்ப அவசரமா எழுதின மாதிரி இருக்கு தீபா. நானெல்லாம் கதை மாதிரி எழுதி எல்லாரையும் கஷ்டப்படுத்தினேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

short and sweet :)

சந்தனமுல்லை said...

நல்லாருக்கு நேருக்கு நேர்!! :-)