Thursday, October 1, 2009

வறட்சி

தளும்பித் தளும்பி வழிந்த பாத்திரம் அது...
மூட முடியாமல், தீரவே தீராதோ எனும்படியாக
என்றோ ஒரு நாள் தடாலென்று கவிழ்ந்தது...
மிச்சம் மீதி இருந்ததும் இன்னொரு பொழுதில் காய்ந்து போனது
வாசமாவது மிஞ்சட்டும் என்று மூடி மூடி வைக்கிறேன்

20 comments:

Vidhoosh said...

புத்தக வாசமும், பெருங்காய வாசமும் மட்டுமே என் கைகளில் இப்போது. :)
--வித்யா

கவிக்கிழவன் said...

நல்லாத்தான் இருக்கு

மாதவராஜ் said...

கை கொடு.
அற்புதமான கவிதை.
பல்வேறு தளங்களுக்கும், உணர்வுகளுக்கும் அழைத்துச் செல்லும் அடர்த்தியான பொருளில் அமைந்த வரிகள்.
வாழ்த்துக்கள்!

சந்தனமுல்லை said...

:-) எத்தனையோ விஷயங்களைச் சொல்கிறது!!

காமராஜ் said...

கவிதை அருமை.

கவிதை நல்லா இருக்கு.

என் வலைப்பக்கம்

வராமல் இருப்பது நல்லால்ல.

Deepa said...

நன்றி விதூஷ்!
உங்களுக்கு இப்படித் தோன்றி இருக்கிறதா? மகிழ்ச்சி! :-)

நன்றி கவிக்கிழவன்!

நன்றி அங்கிள்!
நீங்களே சொன்னா சரிதான்.. :-)

நன்றி முல்லை!

நன்றி காமராஜ் அங்கிள்!

நேற்றே உங்கள் இடுகையைப் படித்து மிகவும் ரசித்தேன். அலுவலகத்தில் கமெண்ட் போடுவது ரொம்பக் கஷ்டம். Risk!
அதைப் பற்றி அங்கிளிடம் சொல்லி இருக்கிறேன்.
:-) வீட்டுக்கு வந்து நிதானமாகப் பின்னூட்டமிட வேண்டும் என்று நினைக்கும் பக்கங்களில் உங்களுடையது முக்கியமானது!

வீட்டுக்கு வந்து நிதானமாகப் படித்துப் பின்னூட்டமிட எண்ணி இருந்தேன்.

முகமூடியணிந்த பேனா!! said...

நனைத்து மணந்து நிரம்பி கிடக்கிறது அடி மனம் முழுதுமாய் உங்கள் வார்த்தைகள்...

சிறப்பு.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அழகான கவிதை.

ஈரோடு கதிர் said...

அருமை.. அருமை..

நேசமித்ரன் said...

பன்முகத்தன்மை கொண்ட கவிதை
நன்கு பட்டை தீட்டின வைரத்தில் லேசர் கதிர் பாய்ச்சுவது மாதிரி ஒளிச் சிதறல்

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஆனால்
மூடி வீழ்ந்துக்
கொண்டுதான் இருக்கிறது

Deepa said...

நன்றி தாமோதரன்!
(யாருக்கு உங்களைப் பிடிக்க வேண்டும்?)

நன்றி செந்தில்வேலன்!

நன்றி கதிர்!

நன்றி நேசமித்ரன்!

நன்றி T.V. இராதாகிருஷ்ணன்

அமர பாரதி said...

கவிதையைப் படிச்சா புரிஞ்சுக்கறதுக்கு மூளையைச் சிரமப் படுத்த வேண்டுமே என்று கவிதை என்றாலே ஓடி விடுவது வழக்கம். உங்களோட இன்னொரு கவிதையை படிக்க முயற்சி செய்தேன். இது நமக்கு ஆகாத வேலை. அதனால:

கவிதை சூப்பர். கலக்கிட்டீங்க.

பா.ராஜாராம் said...

மாதவன் கேட்பது போல எனக்கும் ஆசையாக இருக்கிறது தீபா.கை கொடுங்கள் முதலில்.அற்புதம்!

Deepa said...

நன்றி அமரபாரதி!
நானும் உங்கள மாதிரி தாங்க. ஆனால் சிலர் கவிதைகளைப் படித்த பின்பு வெகுவாக ஈர்க்கப் பட்டேன். அந்த inspiration ஆல் இந்த சிறு முயற்சி.


நன்றி ராஜாராம்!
உங்கள் கவிதைகள் படித்துப் பிரமித்திருக்கிறேன்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

தண்ணீர் தண்ணீர்

யாத்ரா said...

ரொம்ப நல்லா இருக்குங்க கவிதை

அமிர்தவர்ஷினி அம்மா said...

தளும்புவதற்கும், வாசமாவது மிஞ்சுவதற்கும் இடையில் இருக்கும் வலி இருக்கிறதே, அதை சொல்லாமல் சொல்கிறது இந்தக் கவிதை தீபா!!!!!!

அருமை.

அமுதா said...

/*வாசமாவது மிஞ்சட்டும் என்று மூடி மூடி வைக்கிறேன்
*/
எத்தனையோ வலிகளை நினைவுப்படுத்துகிறது இவ்வரிகள். கலக்கறீங்க... வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

அருமைங்க.