Sunday, September 27, 2009

புது மொழிகள்!

காலம்காலமாகப் பெண்களைக் கிண்டலடித்து ஏராளமான பழமொழிகளும் சொலவடைகளும் நம் நாட்டில் புழக்கத்திலுள்ளன.

அதனாலென்ன, நம் முன்னோர்களில் பெண்கள் தான் அதிக நகைச்சுவை உணர்வுடனும், பெருந்தன்மையுடனும் இருந்திருக்கிறார்கள் அதனால் அதை அனுமதித்து ரசித்தும் வந்திருக்கிறார்கள்.

இக்காலத்தில் தான் ஆண்கள் பெருமளவு பெண்களுக்குச் சம உரிமையையும் அந்தஸ்தையும் விட்டுக் கொடுத்து விட்டார்களே! பெண்ணியம் என்றும் பெண்கள் உரிமை என்றும் பேசுவதெல்லாம் தேவையே இல்லையென்பதும் சிலர் வாதமாக இருக்கிறது. அதனால் தைரியமாக ஒரு சின்ன சோதனை முயற்சி!

''கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்" – இது பழசு

மண்ணானாலும் மனைவி
பின்னால் பிறந்தாலும் பொண்டாட்டி
– இது புதுசு!

''அஞ்சும் மூன்றும் உண்டானால் அறியாப் பெண்ணும் கறி சமைப்பாள் - இது பழசு

''அஞ்சும் மூன்றும் உண்டானால் அரை டவுசர் பையனும் கறி சமைப்பான் - இது புதுசு!

பொம்பளை சிரிச்சா போச்சு; பொகையில விரிச்சா போச்சு - இது பழசு

ஆம்பளை உக்காந்தா போச்சு, அன்னிக்கு அடுக்களையில சமையலும் போச்சு! - இது புதுசு!

ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்; - இது பழசு

ஒய்யார ஹேர்ஸ்டைலாம், ஜெல் போட்ட முடி, உத்துப் பாத்தா டையடிச்ச
நரைச்ச முடி
- இது புதுசு!

வரவர மாமியா கழுதை போல ஆனாளாம் - இது பழசு
வரவர மாமன் தான் குரங்கு போல ஆனானாம் - இது புதுசு!

...and last but not the least,

பெண்புத்தி பின் புத்தி - இது பழசு

பெண் புத்தி பொன் புத்தி
ஆண் புத்தி அரை புத்தி
- இது புதுசு!

இந்தப் புதியச் சொலவடைகளை உங்கள் வீட்டில் பேச்சு வாக்கில் உதிர்த்து வாருங்கள். என்ன எதிர்வினை கிடைக்கிறது என்பதைத் தெரிவித்தால் நலம்.

(ஆனால் கடுமையான எதிர்வினைகளுக்கு கம்பெனி பொறுப்பாகாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இடம் பொருள் ஏவல் பார்த்துச் சோதனை செய்வது உங்கள் சமர்த்து!)

29 comments:

சென்ஷி said...

//''அஞ்சும் மூன்றும் உண்டானால் அறியாப் பெண்ணும் கறி சமைப்பாள் -//

இது சுத்தமாப் புரியலை!?

ப்ரியமுடன் வசந்த் said...

டேய் வசந்து நம்ம இனத்தை இப்பிடியெல்லாம் பழிவாங்கிட்டாங்க பாத்துக்கிட்டு சும்மாவா இருக்க எடுடா லேப்டாப்ப...

கண்டிப்பா எதிவினை உண்டு


சிரிச்சு முடியலை தாயீ...

TBCD said...

பழைய மொழிகள் தான் ஒரு பக்க சார்பாக இருந்ததென்றால், திருத்தி எழுதும் போதாவது இரண்டிற்கும் பொதுவாக எழுதியிருக்கலாம் !

Barari said...

TANGAL VEETTIL ENNA ETHIR VINAI ENBATHAI THERIVITHTHAAL NALAMAKA IRUKKUM.

அக்னி பார்வை said...

ஒகே ஒகே.. போதும் முடியல‌

Deepa said...

//''அஞ்சும் மூன்றும் உண்டானால் அறியாப் பெண்ணும் கறி சமைப்பாள் //இது சுத்தமாப் புரியலை!?

சென்ஷி!

எனக்குத் தெரிந்தது: அஞ்சு என்றால் அஞ்சறைப் பெட்டியிலுள்ள கடுகு, வெந்தயம், சீரகம், இதர சாமான்கள்.
மூன்று என்றால் உப்பு, புளி, மிளகாய்.

நன்றி வசந்த்!

//கண்டிப்பா எதிவினை உண்டு//
அய்யோ! ப்ளீஸ், நான் பாவம்!

நன்றி TBCD!

ஆரோக்கியமான சிந்தனை. இது சும்மா விளையாட்டுக்குத் தான். எந்தக் காழ்ப்புணர்ச்சியும் இல்லை.

கருத்துக்கு நன்றி பராரி!

நன்றி அக்னிபார்வை!

சந்தனமுல்லை said...

:))))))

கலக்குங்க!!

/ஆம்பளை உக்காந்தா போச்சு, அன்னிக்கு அடுக்களையில சமையலும் போச்சு! - இது புதுசு!/

ROTFL!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ஹாஹா... கலக்கல் :)

தமிழ்நதி said...

இதையெல்லாம் வழக்கத்திற்குக் கொண்டுவரணும் தீபா... நாம் நமது வீட்டில் ஆரம்பிக்கலாமா:)

Deepa said...

நன்றி முல்லை!

நன்றி செந்தில்வேலன்!

நன்றி தமிழ்நதி!
ஆஹா, நிச்சயமா!

உங்களுக்குத் தோன்றுவதையும் பகிர்ந்து உதவலாமே. முல்லை, யூ டூ!
:-))

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஆகா ! ரொம்ப சூப்பர்

அபி அப்பா said...

கொம்பனி தான் பொருப்பு. எல்லாமே ஜூப்பர் போங்க:-))

ஆசீப்மீரானை மேடைக்கு அழைக்கிறேன்!

Anonymous said...

யாராச்சும் எதிர்வினை போடுவாங்கன்னு எதிர்பாக்கறேன். :)

Deepa said...

நன்றி ஸ்டார்ஜன்!

நன்றி அபி அப்பா!

நன்றி சின்ன அம்மிணி!

ஏங்க, இதுவே ஒரு எதிர்வினை தானே? :-)

தமிழ் அமுதன் said...

பெண் புத்தி பொன் புத்தி!
ஆண் புத்தி அரை புத்தி !

ஹா ..ஹா .. சூப்பரு.............!

பொன் புத்தி சரிதான் ..அதான் எப்போதும் நகை வாங்கி கேக்குறாங்களா ?

அரை புத்தி ..? அதும் சரிதான் ..!;;))

ஈரோடு கதிர் said...

//ஒய்யார ஹேர்ஸ்டைலாம், ஜெல் போட்ட முடி, உத்துப் பாத்தா டையடிச்ச
நரைச்ச முடி //

இஃகிஃகி

இது ரசிச்சேன்

மாதவராஜ் said...

ரசித்தேன்.
இதுக்கு மேலே ஒண்ணும் தோணலையா, அல்லது இன்னொரு பதிவும் இருக்கா?

Deepa said...

நன்றி ஜீவன்!
ஆஹா, இப்படியெல்லாம் எதிர்வினை தோணுதே உங்களுக்கு?
ரசித்தேன். :)

நன்றி கதிர்!

நன்றி அங்கிள்!
இப்போதைக்குத் தோன்றியது இவ்வளவே. :-)

நேசமித்ரன் said...

போச்சுடா ஏற்கனவே வாங்குறது பத்தாதுன்னு இவிய்ங்க வேற சொல்லித்தாராங்களே .கம்பெனி பொருபாகாதாம்ல .அதெல்லாம் ஒத்துக்க மாட்டோமுங்கோவ்... நல்லா இருக்குங்க தீபா

:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)

அமுதா said...

:-))
கலக்குங்க...

தினேஷ் ராம் said...

:D

புதுமொழிகள் பழமொழிக்கு ஏட்டிக்கு போட்டியாக ரசிக்கும்படி உள்ளது. இன்றைய புது மொழிகள் நாளைய பழமொழிகள். நாளன்னைய பதிவர்கள் நோனா நொட்டை கண்டுபிடிப்பார்களே!

ம்ம்.. இப்படியே போனா ஒரு பெரியாரினி தான் தோன்றனும் போல!!

எல்லாவற்றையும் மறந்து இரு சாராருக்கும் சேர்த்து பொதுவாக "பொன்மொழிகள்" தயாரித்திருக்கலாமோ!!!

:-))

Deepa said...

நன்றி சாம்ராஜ்யபிரியன்!

//எல்லாவற்றையும் மறந்து இரு சாராருக்கும் சேர்த்து பொதுவாக "பொன்மொழிகள்" தயாரித்திருக்கலாமோ!!!//

இது வரைக்கும் அது தோணலியா உங்களுக்கு? ;-)))

சும்மா சொன்னேன். நல்ல கருத்தைச் சொல்லிர் இருக்கிறீர்கள். அப்படித் தான் வரணும்.

selventhiran said...

தீபா, நகைச்சுவை உங்கள் பேட்டை இல்லை என்பது என் அபிப்ராயம்.

Deepa said...

நன்றி செல்வேந்திரன்!

காலையில் தான் இன்னொரு நண்பர் இதே கருத்தைத் தெரிவித்தார்.
:-)

Admin said...

சிரிப்பு சிரிப்பா வருது... நல்ல சிந்தனை அப்படியோ தொடருங்கள்...

தினேஷ் ராம் said...

// பெண்புத்தி பின் புத்தி //

'பெண் எப்பொழுதும் எதிர்காலத்தையும், பின்னால் வரக்கூடியதையும் முன் எச்சரிக்கையாக யோசிப்பவர்கள்' என்பது தான் உட்கருத்து. இது பெண்களை கிண்டலடிக்கும் நோக்கில் சொல்லப்பட்டதா?

பழமொழிகளும் பெண்ணியம் தான் பேசுகின்றன. நமக்கு தான் பொருள் தெரியவில்லை.

இப்படிக்கு,
(நானில்லை)
நண்பர் இராஜப்ரியன்.

//அவர் உங்கள் பதிவை படித்து விட்டு எனக்கு அனுப்பிய மின்னஞ்சலின் சாராம்சம் இது.//

கபிலன் said...

நல்ல நகைச்சுவை : ) !

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்குங்க!!