Friday, September 4, 2009

07420021555503028936 - இது தான் நான்!

வலையுலக அன்பர்களுக்கு,

என் பெயரைப் பயன்படுத்தி வக்கிரம் பிடித்த பின்னூட்டங்கள் சில வலைப்பக்கங்களில் வந்துள்ளதாக அறிகிறேன்.
தயவு செய்து என் பெயர் தாங்கி வரும் அந்தச் சுட்டியின் மீது மவுஸை வையுங்கள். கீழே ஸ்டேட்டஸ் பார் http://www.blogger.com/profile/07420021555503028936 என்று காட்டும்.

07420021555503028936 - இந்த எண் வந்தால் தான் அது என்னால் இடப்பட்ட பின்னூட்டம்.

தற்போது தவறாக வந்துள்ள பின்னூட்டங்களில் 08355111887866474837 என்று உள்ளது. இப்படி வந்தாலோ வேறு எண்கள் வந்தாலோ அது என்னால் இடப்பட்ட பின்னூட்டம் இல்லை.

மிக்க நன்றி.

தகவல் தெரிவித்த பைத்தியக்காரன் அவர்களுக்கு என் இதயபூர்வமான நன்றிகள்.

34 comments:

வெ.இராதாகிருஷ்ணன் said...

அடக்கடவுளே,

இதுபோன்ற பிரச்சினைகள் என்றுதான் தீரும் எனத் தெரியவில்லை.

நிம்மதியாக தங்களுக்குத் தெரிந்ததை, அறிந்ததை எழுதுபவர்களைத் தாக்குபவர்களுக்கு என்ன சந்தோசமோத் தெரியவில்லை.

தகவல் தெரிவித்தமைக்கு நன்றி தீபா.

மாதவராஜ் said...

தீபா!
உண்மையிலேயே அவர்கள் வக்கிரமனம் கொண்டவர்கள்தாம்.
பெயரைவிட நம்பர்கள்தாம் நம்மைக் காப்பாற்றும் போல! என்ன செய்ய...
இதற்கெல்லாம் கவலைப்படத் தேவையில்லை.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இது போன்ற பிரச்சனை எற்பட்டதால் தான் சில பதிவர்கள் தங்களது பெயருடன் இந்த எண்ணையும் சேர்த்துப் போட்டுக்கொள்கிறார்கள்.

நட்புடன் ஜமால் said...

அடக்கொடுமையே ...


:( :( :(

ILA said...

பேரும் நம்பருமா உங்களை மாத்தி காட்டப்போவுது. அடப் போங்க. எங்களுக்குத்தெரியாதா யார் பின்னூட்டம் போடறாங்கன்னு..

பைத்தியக்காரன் said...

அன்பின் தீபா,

எனது வலைப்பக்கத்தில் ஈழம் தொடர்பான இரண்டு இடுகையிலும் உங்களது பெயரை தவறாக பயன்படுத்தி பல பின்னூட்டங்கள் ஆபாசமாக வந்துள்ளன. அலுவலகத்தில் பிளாக்கை மூடிவிட்டார்கள். இன்றிரவு வீட்டுக்கு செல்ல நடு இரவு ஆகிவிடும். நாளை காலை பிரியத்துக்குரிய ஜ்யோராம் சுந்தரிடம் சொல்லி அந்த பின்னூட்டங்களை நீக்கச் சொல்கிறேன்.

அந்த நண்பருக்கு என் மீது கோபம் இருப்பின் தாராளமாக அதை வெளிப்படுத்தட்டும். எதற்காக தேவையில்லாமல் உங்கள் பெயரை பயன்படுத்த வேண்டும் என்றுதான் தெரியவில்லை.

நட்பின் அடிப்படையில் ஒரு வேண்டுகோள் அல்லது கோரிக்கை.

ஆக்கப்பூர்வமாக எழுத வரும் பெண்கள் காலம்காலமாக இப்படித்தான் வக்கிரமாக தாக்கப்படுகிறார்கள். இதனால் மனச்சோர்வு அடைந்து இதற்கு முன்பு எழுதிவந்த சில நல்ல பிளாக்கர்கள் எழுதுவதையே நிறுத்திவிட்டார்கள். ஓருவேளை 'போலிகள்' எதிர்பார்ப்பது இதைத்தானோ என்னவோ...

தயவுசெய்து தொடர்ந்து எழுதுங்கள். இப்போது தொழில்நுட்பமும் வளர்ந்துவிட்டது. பதிவுலகிலும் உதவக்கூடிய நண்பர்கள் பெருகிவிட்டார்கள்.

அந்த ஐபியை கண்டுபிடித்தால், போலி யார் என்று தெரிந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன். கம்ப்யூட்டர் குறித்து நான் பூஜ்யம் என்பதால் இதற்கு மேல் சொல்லத் தெரியவில்லை. ஆனால், இந்த இடுகையின் பின்னூட்டங்களில் பல நண்பர்கள் ஆக்கப்பூர்வமான யோசனைகளை சொல்வார்கள். கலங்காமல் தைரியமாக இருங்கள்.

உங்களுக்கு பக்கபலமாக என்றும் நாங்கள் இருக்கிறோம்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

சென்ஷி said...

:-(

சந்தனமுல்லை said...

:((

வால்பையன் said...

திரும்பவும் ஆரம்பிச்சிடாய்ங்களா!?

Deepa said...

வந்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

சிவராமன் ஸார்!

//ஆக்கப்பூர்வமாக எழுத வரும் பெண்கள் காலம்காலமாக இப்படித்தான் வக்கிரமாக தாக்கப்படுகிறார்கள். இதனால் மனச்சோர்வு அடைந்து இதற்கு முன்பு எழுதிவந்த சில நல்ல பிளாக்கர்கள் எழுதுவதையே நிறுத்திவிட்டார்கள். ஓருவேளை 'போலிகள்' எதிர்பார்ப்பது இதைத்தானோ என்னவோ...//

மனோ வக்கிரம் பிடித்தவர்கள் எதற்காக இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்று கவலைப்படுவது நம் வேலையல்ல. அதை எதிர்நோக்கி அவர்களது நோக்கத்தைச் சிதைப்பதும் செய்ய இயலாமல் தடுப்பது பற்றியும் மட்டுமே நாம் யோசிக்க வேண்டும்.

மாது அங்கிள் தான் இந்த ”நிரூபிக்கும்” வழிமுறையையே கற்றுத் தந்தார். அவருக்கு என் நன்றிகள்.

உங்களைப் போல் தான் நானும். நமது மெத்தனங்களை ஒதுக்கி விட்டு வலையுலக தொழில்நுட்பத்தை இயன்ற அளவு கற்று வைப்போம்.
:-)

Vidhoosh/விதூஷ் said...

மீண்டுமா?

அடகடவுளே!!
--வித்யா

Shakthiprabha said...

//இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்று கவலைப்படுவது நம் வேலையல்ல. அதை எதிர்நோக்கி அவர்களது நோக்கத்தைச் சிதைப்பதும் செய்ய இயலாமல் தடுப்பது பற்றியும் மட்டுமே நாம் யோசிக்க வேண்டும்.

//

இதற்கெல்லாம் துவண்டு விடாமல் எழுதிக்கொண்டே இருப்பதில் உங்கள் வெற்றி. உங்களை படித்தவர்களுக்கும் பின்னூட்டட்தின் வித்தியாசம் தெரியும்.

வலையுலகின் பின் ஒளிந்து கொள்ளும் கோழைகள். சிறிது நாட்களுக்கு உங்கள் ப்ளாகில் இந்த பதிவின் சுட்டியை பார்வையில் படும் படி இட்டுக்கொள்ளுங்கள் அல்லது உங்கள் வலைப்பதிவின் முதற்பக்கத்தில் இந்தத் தகவலை பார்வையில் படும் படி எழுதி வையுங்கள். (until this issue is tackled once for all)

dondu(#11168674346665545885) said...

நீங்கள் செய்து கொள்ளும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போதாது.

எதற்கும் இருக்கட்டும் என நான் சேகரித்த எலிக்குட்டி சோதனைகளை இங்கு கூறுகிறேன்.

1. அதர் மற்றும் அனானி ஆப்ஷன்களை பாவிக்க பொறுமை வேண்டும். அது இல்லாதவர்கள் அவற்றை எடுத்துவிடலாம்.
2. பதிவர் ஆப்ஷனில் உங்களது பதிவு அமைவுகளில் போட்டோக்கள் வருவது செயலாக்கப்பட்டிருந்தால் பின்னூட்டமிட்ட பதிவரின் போட்டோவும் (அவரது புரொஃபைலில் இருந்தால்) இங்கள் பின்னூட்ட பக்கத்தில் வரும். எலிக்குட்டியை வைத்து சோதனை செய்தால் பதிவர் எண்ணும் கீழே தெரியும். அவை இரண்டும் மேட்ச் ஆவது மிக அவசியம்.
3. அதர் ஆப்ஷன்கள் உபயோகிக்கும் பட்சத்தில் பதிவர் எண்ணை கொண்டு வரலாம் ஆனால் போட்டோ வராது. ஆக 2 மற்றும் 3 சேர்ந்து நிறைவேற வேண்டும்.

ஆகவே நீங்கள் போட்டோ ஏதேனும் உங்கள் ப்ரொஃபைலில் வைத்திருக்காவிட்டால் அதை செய்யவும்.

பார்க்க: http://dondu.blogspot.com/2009/03/28032009.html

http://dondu.blogspot.com/search/label/போலி%20டோண்டு

அன்புடன்,
டோண்டு ராகவன்

Deepa said...

டோண்டு ஸார்,


ரொம்ப நன்றி.

மன்னிக்கவும், எனக்கு ஒன்று தெளிவாகப் புரியவில்லை.
எனது ப்ரொஃபைலில் ஒரு படம் உள்ளது. அதை எடுத்து விட வேண்டுமா இருக்கட்டுமா?

மீண்டும் நன்றி,
தீபா

dondu(#11168674346665545885) said...

படம் இருந்தால் அப்படியே வைத்து விடுங்கள். நீங்கள் வேறு எந்த வலைப்பூவிலாவது பின்னூட்டம் பிளாக்கராக லாக் இன் செய்து இட்டால், அந்த வலைப்பூவில் போட்டோ எனேபிள் செய்யப்பட்டிருந்தால், எலிக்குட்டி சோதனையில் கிழே உங்கள் சரியான ப்ரொஃபைல் எண் தெரியும், கூடவே பின்னூட்டம் இடும் பக்கத்தில் உங்கள் போட்டோவும் வரவேண்டும்.

அது இரண்டுமாக சேர்ந்து வந்தால்தான் அது உங்கள் பின்னூட்டமாகக் கருதப்பட வேண்டும்.

போலி டோண்டு இன்னொரு காரியம் செய்தான். டுண்டூ என்ற பெயரில் என் வலைப்பூவைப் போலவே இன்னொன்றை உருவாக்கி, டிஸ்ப்ளே பெயரில் எனது பிளாக்கர் எண்ணையே தந்தான். போட்டோவும் என்னுடையதையே போட்டான். இப்போது போட்டோ தெரியும் ஆனால் கீழே எலிக்குட்டி சோதனையில் அவன் நம்பர்தான் தெரியும்.

ஆனால் நமது பதிவர்கள் அதை செய்து பார்க்கக் கூட சோம்பல் பட்டதால், நான் ஒவ்வொருவராக போய் உண்மையை பலமுறை சொல்ல வேண்டியிருந்தது.

இப்போது பிரச்சினை என்ன வரும் என்றால், நீங்கள் பின்னூட்டமிடும் மற்ற வலைப்பூவில் போட்டோ எனேபிள் செய்யப்படாமல் இருந்தால் எலிக்குட்டி சோதனை முழு வெற்றியடையாது.

ஆகவே அம்மாதிரி தருணங்களுக்காகவே நான் அவ்வாறு பின்னூட்டம் இடும்போது அதன் நகலை எனது இன்னொரு பதிவில் பின்னூட்டமாக இட்டுக் கொள்வேன்.

இதில் சோகம் என்னவென்றால் பலபதிவர்களுக்கு அப்போது நான் செய்த பாதுகாப்புகள் புரியவில்லை. ஆனால் இப்போது புரிந்து கொள்வார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நர்சிம் said...

தீபா,

Stay Cool.

சைபர் க்ரைமின் முக்கிய பொறுப்பில் நண்பர் இருக்கிறார்.திங்கள்கிழமை கண்டுபிடித்துவிடலாம்.

இப்பொழுதுதான் திரு.பைத்தியக்காரன் அழைத்துச் சொன்னார்.

மிக மோசமான செயல் இது.கண்டிக்கப் பட வேண்டியது.தண்டிக்கப்படவும் வேண்டும்.

Stay Cool.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:(

dondu(#11168674346665545885) said...

உங்கள் டிஸ்ப்ளே பெயரை Deepa (#07420021555503028936) என்று மாற்றுவது அவசியம். அப்போதுதான் எலிக்குட்டி சோதனையை சுலபமாக செய்து பார்க்க இயலும்.

மற்றப்படி "07420021555503028936 - இது தான் நான்!" என்று வெறுமனே கூறிக் கொள்வதில் என்ன பலன்? வேறு பதிவின் பின்னூட்டங்களுடன் உங்கள் பெயரை பார்ப்பவர்கள் அவ்வளவு நீளமான எண்ணை (07420021555503028936) ஞாபகம் எல்லாம் வைத்துக் கொண்டா பார்க்கவியலும்?

ஆகவே டிஸ்ப்ளே பெயரை Deepa (#07420021555503028936) என உடனே மாற்றவும். அதற்கு டாஷ்போர்டுக்கு செல்லவும்.

dashboard > change profile > change display name to Deepa (#07420021555503028936) (after scrolling down) > save changes.

அன்புடன்,
டோண்டு ராகவன்

☀நான் ஆதவன்☀ said...

கொடுமை :(

செல்வநாயகி said...

:((

அய்யனார் said...

தீபா
வக்கிரங்களைக் குறித்து வருந்தத் தேவையில்லை.இது இவரால் என்கிற போதுமான அறிதல் சக பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் இருக்கிறதென நம்புவோம்.

உங்களை வலிமையாக்க நீங்கள் எதுவுமே செய்ய வேண்டியதில்லை போல :)

dondu(#11168674346665545885) said...

Probably my previous comment did not reach you regarding the change of display name. Here goes.

Change your display name from Deepa to Deepa(#07420021555503028936). Once the display name comes in that form in the case of your comments in other's blogs, people can use the mouse over to verify that that number is shown. In that way your authenticity will be proved.

That is the reason why my display name is Dondu(#11168674346665545885).

Otherwise who is going to remember your long display number?

For changing the display name, follow the step below.

Dashboard>Edit profile>change display name>save changes.

There you are.

Regards,
N. Raghavan

கதிர் - ஈரோடு said...

என்ன கொடுமை இது...

இந்த நாய்க அடங்காதுகளா?

Deepa (#07420021555503028936) said...

வந்து அக்கறையைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி

Dondu sir,
Special thanks for the useful info and advice. I have done it.

யுவகிருஷ்ணா said...

தீபா!

இதெல்லாம் விளையாட்டுலே சகஜம். யார் எப்படி கமெண்டு போடுவார்கள் என்பது எல்லோருக்குமே தெரியும். கவலை வேண்டாம்.

ராம்ஜி.யாஹூ said...

hey come on, Internet has not come yesterday,

These hacking, fake ids are all 204 matters, dont bring old and boring stories back.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:(

Deepa (#07420021555503028936) said...

கருத்துப் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி.

ஒரே மெயிலில் ஒன்றுக்குள் ஒன்றாக வந்ததால் சில கமெண்டுகளை இப்போது தான் பார்த்தேன்.

நேசமித்ரன் said...

:(
:(

Joe said...

நீங்க அதிகமா பின்னூட்டமே போட மாட்டீங்களே? அப்புறம் வக்கிரமான பின்னூட்டம் போடுவீங்கன்னு யாராவது நம்புவாங்களா? ;-)

நம்பரை எல்லாம் யாரும் ஞாபகம் வைச்சுக்க மாட்டாங்க.

சைபர் க்ரைம் துறையில சொல்லி கண்டுபிடிச்சிடலாம். Don't worry, be happy!

SanjaiGandhi said...

நானும் உங்கள் பெயரில் வந்த பின்னூட்டம் பார்த்தேன். அந்த பெயரில் ப்ளாகர் அக்கவுண்ட் இல்லை. அதனால் உங்களைப் பற்றி யாரும் தவறாக நினைக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.

SanjaiGandhi said...

// ILA said...

பேரும் நம்பருமா உங்களை மாத்தி காட்டப்போவுது. அடப் போங்க. எங்களுக்குத்தெரியாதா யார் பின்னூட்டம் போடறாங்கன்னு..//

அது...

நம்பர் போடுவது தேவை இல்லாதது. தவறு செய்யும் நோக்கம் இருப்பவர்கள் ஒரு பக்கம் நிஜ ஐடி நம்பர் கொடுத்து விட்டு அதே பெயரில் இன்னொரு ஐடியுடன் வருவது பெரிய வேலை இல்லை. படிப்பவர்களின் நம்பிக்கை தான் முக்கியம். தீவிரமாக இயங்கும் பலரும் அனானி அல்லது போலி முகவரிகளுடன் வருவதில்லை. யாராவது அவர்கள் பெயரை தவறாகப் பயன்படுத்தினாலும் மற்றவர்கள் நம்பப் போவதில்லை. ஃப்ரீயா விடுங்க பாஸ்.. :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

இது வேறயா ? :((((((((((

கடவுளே

கும்க்கி said...

உங்களுக்கு பக்கபலமாக என்றும் நாங்கள் இருக்கிறோம்.

இதுவும்....

மிக மோசமான செயல் இது.கண்டிக்கப் பட வேண்டியது.தண்டிக்கப்படவும் வேண்டும்.

Stay Cool.


இதுவும் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம் தீபா.