ஒரு சின்ன ப்ளாஸ்டிக் பட்டையில் இரு கருநீலக் கோடுகளாகத்தான் அவளை முதலில் சந்தித்தேன்.
இப்போதானால் அவள் அப்பா பாஷையில் ”ரௌடிக்” குட்டியாக வளர்ந்து எல்லோரையும் அரட்டிக் கொண்டிருக்கிறாள்.
நேஹா!
நீ நல்ல பிள்ளையாக உன் தாத்தா பாட்டி வீட்டில் இருந்து கொள்வாய் என்று அம்மாவுக்கு நம்பிக்கை வந்து விட்டதுடா குட்டி. அதனால் அம்மா மீண்டும் வேலைக்குப் போகலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.
இதோ உன்னை விட்டுச் சென்ற இந்த ஒரு வாரம், என்னவோ பலமான யோசனையுடன் இருப்பதாகவும், சூழ்நிலையைப் புரிந்து கொண்டு மிகவும் சமர்த்தாக இருப்பதாகவும் உனக்குச் சான்றிதழ் கொடுத்து விட்டார்கள்.
ஹீம்.. உன் அம்மா அவ்வளவு சமத்தில்லையடி! நிச்சயம் முன் போல இல்லை அலுவலுக்குச் செல்வது. அலுவலக நேரத்துக்கு அரைமணி நேரம் முன்பாக எழுந்து அவசர அவசரமாகக் கிளம்பி காலை உணவுக்கு எதையோ சாப்பிட்டு, வேலைக்குச் சென்று மாலை அடைந்து கொள்ளும் கூடு என்பதைத் தவிர வீட்டு நினைப்பே வராது.
இப்போது....
எத்தனை முறை கேட்டாலும் ”அம்ம்ம்மா” சொல்லு என்றால் ”அப்பா” தான் சொல்வது! சொல்லி விட்டு என்னைப் பார்த்துக் குறும்பாகச் சிரிப்பது;
நான் லயித்து டி.வி பார்க்கும் போது ரிமோட்டை எடுத்து ஆஃப் செய்து வீசி விட்டு வந்து என் மடியில் அமர்ந்து கொள்வது;
கொஞ்சம் தெருவில் வைத்து வேடிக்கை காட்டச் சென்றால் யாராவ்து சிறுவர்களைப் பார்த்து விட்டால் இடுப்பை விட்டு இறங்க வேண்டுமென்று அடம்பிடிப்பது;
எதற்காகவாவது சட்டை மாற்றி விட்டாலும் கைகளை ஆட்டிக் கொண்டு “டாட்டா, ஆட்டோ” சொல்வது...
சரி சமத்தா விளையாடிட்டு தானே இருக்கா என்று நான் சாப்பாட்டில் கை வைத்தவுடன், பருப்பு, உளுந்து, தண்ணீர் என்று எதையாவது தரையில் கொட்டி எனக்கு வேலை வைப்பது;
இன்னும்.. இன்னும்..இப்படி ஒரு கணமும் உன்னைப் பிரியாமல்
இதையெல்லாம் ரசித்து, உன்னுடன் போராடி, மல்லுக் கட்டி, உன்னைத் தூங்க வைத்து விட்டு ரகசியமாய், மறக்காமல் ஸ்பீக்கர்ஸை ம்யூட் பண்ணி விட்டுக் கணினியை ஆன் செய்தாலும் எப்படியோ இடையில் கூக்குரலுடன் எழுந்து விடுவது!
இதெல்லாம் அனுபவிக்க மாலை நேரங்களிலும் வாரஇறுதியிலும் மட்டுமே எனக்கு சாத்தியப்படும் என்று நினைக்கும் போதே சொல்லத் தெரியாத ஏதோ நெருடுகிறது மனதில்!
இருக்கிற கொஞ்ச நேரத்தில் மிக முக்கியமான பங்கு நேஹாவுக்கு என்பதால் பதிவுலகத்துக்கான நேரத்துக்கு இன்னும் மெனக்கெட வேண்டும். அலுவலகத்தில் சுத்தமாக முடியாது!
அதனால் முன்பு அளவுக்கு பதிவுகள் எழுத முடியுமா என்று தெரியவில்லை; ஆயினும்...
இதோ இக்கணம் செய்வது போல் நேஹாவை மடியில் இருத்திக் கொஞ்சிக் கொண்டே ஒரு விண்டோவில் ரைம்ஸ், இன்னொரு சின்ன விண்டோவில் வேர்ட், அல்லது ப்ளாக் திறந்து எழுதுவது வழக்கம் தான்.
- இப்படியெல்லாம் நீ எழுதலன்னு உன்னை யார் அடிச்சான்னு கேக்கறீங்களா? - உங்கள் அனைவரின் அன்பு தான்!
இல்லடா நேஹா?!
:-)
20 comments:
நேரமிருக்கும் பொழுது எழுதுங்கள் தீபா! வாழ்த்துகள் :)
ஒரு அடர்த்தியான தாலாட்டுப் போல இருக்கிறது.
வாழ்த்துக்கள் தீபா.
அழகான தாய்மையே வாழ்க...
என்னவென்று
சொல்வதம்மா உங்களின் முயற்சியை
"வாழ்வதற்காக சாவதும் வாழ்ந்து கொண்டே சாவதும் தமிழ் இனம் ஒன்றுதான்"
welcome to the club deepa :-)
அழகாக கூறிவிட்டீர்கள் தாய் மனதின் தவிப்பை. நிச்சயம் வீடு, அலுவல், பதிவு என்று மூவுலகையும் மேனேஜ் செய்து விடுவீர்கள். வாழ்த்துக்கள் உங்கள் புது உலகிற்கு :-)
உன் சிரமங்கள் எல்லாம் தெரியும். அதை சுவையோடு வெளிப்படுத்தியிருப்பது அழகு. அதிலும்,//இப்படியெல்லாம் நீ எழுதலன்னு உன்னை யார் அடிச்சான்னு கேக்கறீங்களா? - உங்கள் அனைவரின் அன்பு தான்!// ரொம்ப அழகு.
நேஹா பஸ்ட்
பிளாக்குக்கு ரெஸ்ட்
one of your best blogs.
நன்றி செந்தில்வேலன்!
நன்றி காமராஜ் அங்கிள்!
நன்றி கதிர்!
நன்றி கவிக்கிழவன்!
ஆனால் எதற்காக இரண்டாவது வரியில் இவ்வளவு சீரியஸான வார்த்தைகள்?!
நன்றி அமுதா!
உங்களைப் போன்றவர்கள் தான் எனக்கு இவ்விஷயத்தில் முன்னோடிகள். (வீடு+குழந்தைகள்+அலுவல் மூன்றையும் சிறப்பாக நிர்வகிப்பதில்)
நன்றி அங்கிள்!
நன்றி அபி அப்பா!
:-) ரசித்தேன்.
Thank you very much, Rudhran Sir!
அருமை
தொடர்ந்து எழுதுங்கள்
அடுப்புல சட்டி இருக்கும்போதும் இடுப்புல நீ இருந்தாய்” னு முன்னால சொல்வாங்க. இப்போ கைல மவுஸ் இருந்தாலும் மடில நீ’.னு சொல்றோம். காலங்கள் மாறினாலும் தாய்மை மாறவில்லை. ஆனாலும் சுகமான சுமைகள். வாழ்த்துக்கள் தீபா.-அம்பிகா
:D
நன்றி தியாவின் பேனா!
அம்பிகா அக்கா!
வலையுலகத்துக்கு நல்வரவு!
வாங்க, வந்து அசத்துங்க. :-)
நீங்கள் தான் என்று அங்கிள் சொல்லித் தான் தெரிந்தது. பின்னூட்டமிட்டதில் ரொம்ப சந்தோஷம். அழகா சொல்லி இருக்கீங்க.
நன்றி சாம்ராஜ்யபிரியன்!
i am delighted to have stumbled upon your post and `ammakkalin pahirvuhal'. lovely
அழகான இம்சை...சூப்பர்!
:))
ஒரு சின்ன ப்ளாஸ்டிக் பட்டையில் இரு கருநீலக் கோடுகளாகத்தான் அவளை முதலில் சந்தித்தேன்.
ரசித்தேன்.. ரசித்துக்கொண்டே இருக்கிறேன் தீபா.
The ugly one!
Thank you.
நன்றி ஆண்டோ!
நன்றி நாஞ்சில் நாதம்!
நன்றி அமித்து அம்மா!
வாவ்!! கொள்ளை அழகான இடுகை தீபா! மிகவும் ரசித்தேன்! ரொம்ப சென்டியாவும் இல்லாம......
அருமையான கடிதம்!
Post a Comment