Tuesday, July 27, 2010

மீண்டும் ஒரு சொ.க, சோ.க!

வெ.இராதாகிருஷ்ண‌ன் அவ‌ர்க‌ளின் அன்பான‌ அழைப்பைத் த‌ட்ட‌முடியாம‌ல் இந்த‌ இடர்... சாரி தொட‌ர்ப‌திவை எழுதுகிறேன். பொறுத்துக் கொள்ள‌வும்!

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

தீபா தான்.(ஆனால் ஆங்கிலத்திலும் ஒரு பதிவு வைத்திருப்பதால் Deepa என்றே வைத்திருக்கிறேன்.)

2) அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
அது தான் உண்மையான பெயர்.

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

இந்த‌க் கதையை ஏற்கெனவே இங்கே எழுதி இருக்கிறேன். விருப்பப்பட்டால் படித்துப் பார்க்கவும்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

பிரபலம் என்ற வார்த்தை எனக்கு அலர்ஜி! அதனால் 'அதிகம் பேர் படிக்க வேண்டுமென்று' தமிழ்மணம், தமிழிஷ் திரட்டிகளில் இணைத்து வருகிறேன். இப்போது பஸ் மற்றும் ட்விட்டர்களிலும் சுட்டி வைக்கிறேன்.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

நிறைய. அனுபவங்களை அசைபோடுவதே ஒரு அலாதியான அனுபவம் தானே!

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பொழுது போக்குக்காக, எழுத்துப் பயிற்சிக்காக, மனதில் தோன்றுவதைக் கொட்டித் தீர்ப்பதற்காக, அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக என்று நிறைய காரணங்களைக் கூறலாம்.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
காழ்ப்புணர்ச்சி, அகங்காரம், சுயமோகம், வக்கிரம் வெளிப்படும் எழுத்துக்கள், பெண்களைக் கேவலப்படுத்தும் (நகைச்சுவை என்ற பெயரில் கூட) எழுத்துக்கள், மனசாட்சியை அடகு வைத்து விட்டுச் சுயநலத்துக்காக எழுதப்படும் / ஆதரிக்கப்படும் எழுத்துக்கள் கண்மண் தெரியாமல் கோபம் ஏற்படுத்துகின்றன‌. ஆனால் இப்போது நிதான‌ம் ப‌ழ‌கிவ‌ருகிறேன்.(அதற்காக அத்தகைய எழுத்துக்களை ஏற்க மனம் ப‌ழ‌கிவிட்ட‌தாக‌ அர்த்த‌மில்லை!)

பொறாமை - இது நிறைய‌ பேர் மேல‌ உண்டு. அலட்டாமல் ஆர்ப்பாட்டமில்லாமல், எழுத்தில் செறிவோடும் கருத்தில் நேர்மையோடும் எழுதும் எல்லார் மீதும் மதிப்பு கலந்த பொறாமை உண்டு. அர்த்த‌ம் மிக்க‌ நையாண்டிக‌ள் செய்வோரின் ந‌கைச்சுவை உண‌ர்ச்சி மீதும்.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

முத‌ல் பாராட்டு, குட்டு எல்லாமே மாதவராஜ் அங்கிள் தான். அவரைத் தவிர‌, என் முத‌ல் சில இடுகைக‌ளை எடுத்துப் பார்த்தால் ரேகா ராகவ‌ன், ம‌துமிதா, புதுகை அப்துல்லா, ஆயில்ய‌ன், தேவ‌ன்மாய‌ம் ஆகியோர் பின்னூட்ட‌மிட்டு உற்சாக‌ப் ப‌டுத்தி இருக்கின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ளுக்கு இந்த‌க் கேள்வியைப் ப‌ய‌ன்ப‌டுத்தி ந‌ன்றி சொல்லிக் கொள்கிறேன்.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

சாரி, இதுவே அவசியமான்னு யோசிச்சிட்டு இருக்கேன். இதுக்கு மேல‌ என்னைப் ப‌த்தித் தெரிஞ்சுக்கிட்டு உங்களுக்கு என்ன ஆகப்போகுது? இவ்ளோ தாங்க!

ரொம்ப நன்றி.

பி.கு: இந்தத் தொடரில், என்னுடைய இந்த இடுகையைத் தான் மொக்கை என்று குறிப்பிட்டிருக்கிறேன். தொடரையே அல்ல. :)

15 comments:

'பரிவை' சே.குமார் said...

//அனுபவங்களை அசைபோடுவதே ஒரு அலாதியான அனுபவம் தானே!//

Correct.

Nalla PAthilkal.

Radhakrishnan said...

:) . எளிமையான, அழகான பதில்கள். ஆறு தன் வரலாறு கூறுதல் முன்னரே படித்து கருத்திட்டாலும் மீண்டும் படிக்கும்போது புதிதாகவே இருந்தது. கோபம் பற்றியும் நண்பர்கள் பற்றியும் அறிந்தேன். மாதவராஜ் அவர்களை இந்த முறை சாத்தூரில் வைத்து சந்தித்து விடலாம்தான். மிக்க நன்றி தீபா.

Unknown said...

Greetings. I wish the questions were in much better form. When the same set of questions were asked to Vaanambadi Sir, I still enjoy his reply to them.

Every individual has some inherent skills and your transaltion skill is awesome. Expecting many more from you. All the best.

VijayaRaj J.P said...

தன்னடக்கமான பதிவு.

ஜெய்லானி said...

அழகா எளிமையா சொல்லிருக்கீங்க

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமை..

Madumitha said...

இது ஒரு சொ.க,சோ.க அல்ல.

இது ஒரு சொ.க,உ.க.

ponraj said...

நன்று!!!
பதில்கள் அனத்தும் superb!!!

over தன்னடக்கம்!!!

மாதவராஜ் said...

:-)))))

Maniblog said...

தீபா, தங்களது வலையை பார்க்கும்போது, ஆண் மேலாதிக்கத்தை தனிமைப்படுத்துவோம் என்பதை கணிமை படுத்துவோம் என்பதுபோல எழுத்து தோன்றுகிறது. அதுவும் கூட வித்தியாசமான முயற்சியோ என்பதாகப்பட்டது. அதாவது கண்ணியமற்ற ஆண் மேலாதிக்கத்தை மாற்றி அமைக்க எதோ வார்த்தை போல என்று எண்ணினேன். எனக்கு ஆண் மேலாதிக்கத்தை தனிமைப்படுத்துவதில்கூட நம்பிக்கை கிடையாது. அதை அழித்தொழிக்கவேண்டும் என்று சொல்லும் கூட்டம் நான்.எனக்கு ஆச்சர்யம் கொடுத்தது எது என்றால், இப்படி சிந்திப்பவர் அதிலும் இலக்கிய ஆர்வத்துடன் உள்ள ஒருவர், அதிலும் வலையை பயன்படுத்துபவர் சென்னையில் உள்ளாரே நமக்கு தெரியவில்லையே என்பதுதான்

'பரிவை' சே.குமார் said...

அழகா எளிமையா சொல்லிருக்கீங்க .

Raks said...

Like this space of yours :)

Thanks for the nice word in my blog :)

அன்புடன் நான் said...

நேர்மையா இருக்கு..... பாராட்டுக்கள்

புலவன் புலிகேசி said...

உங்களின் போபால் பதிவு நமது போபால் தளத்தில் வெளியிடப் பட்டிருக்கிறது. மிக்க நன்றி


போபால் - மறக்கக் கூடாத துரோகம் --- தீபா

Unknown said...

I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .