Tuesday, July 20, 2010

கலி

ஆவி, பேய், பிசாசு வைத்துப் படங்கள் வரும்;
வாய் பிளந்து ரசித்துப் பார்த்துக் கைதட்டுவோம்

பெயரில் எழுத்தை எசகுபிசகாய் புரட்டிப் போட்டுத் தான்,
பெரிய வழி பிறக்கப் போகுதென்று நம்புவோம்

கயிறு, கட்டை, கல் என்று கண்டதையெல்லாம்,
வெட்கமின்றி கழுத்தில் கையில் மாட்டித் திரியுவோம்

பிறந்த குழந்தை பெண்ணென்று தெரிந்த நிமிடமே,
வங்கிக் கணக்குக்கு வந்தது கேடென்று வருந்துவோம்

ஜாதி, ஜாதகம் கச்சிதமாய்ப் பொருந்துது என்றே
ஆசை மகளைக் கிணற்றில் தள்ளிக் கண்ணீர் சிந்துவோம்

காவியுடையும் கவர்ச்சிப் பேச்சும் கண்டமாத்திரம்
காலில் வீழ்ந்து மோட்சம் வேண்டுமென்று வேண்டுவோம்

நாலு நாளில் அவன் சாயம் நாறிப் போனபின்
நாளிதழைப் பிரித்தவுடன் ஃபோட்டோ தேடுவோம்

ஆனால்...

வயிறு வாடிப் பசியென்று வந்து நிற்பவர் - தம்மை
நூறு கேள்வி கேட்டுத் துளைத்துத் துப்பறிந்திடுவோம்!
("இந்தக் காலத்துல‌ யாரை நம்புறது?")

7 comments:

☀நான் ஆதவன்☀ said...

நல்லாயிருக்குங்க கவிதை.

பத்மா said...

nach kavithai

Unknown said...

நல்ல சிந்தனைதான்... ஆனால் ஏமாற்றும் கும்பல் பெருகிவிட்டதே...
அதனால்தான் சந்தேகமே.. பாத்திரம் அறிந்து பிச்சை இடு என பெரியவர்களும் சொல்லியிருக்கின்றனர்...

காமராஜ் said...

நல்லா இருக்கு தீபா.
முடிவு சுருக்கெனத் தைக்கும்.

'பரிவை' சே.குமார் said...

//...கயிறு, கட்டை, கல் என்று கண்டதையெல்லாம்,
வெட்கமின்றி கழுத்தில் கையில் மாட்டித் திரியுவோம்...//


நல்லாயிருக்குங்க கவிதை.

Karthick Chidambaram said...

நல்லாயிருக்குங்க

மாதவராஜ் said...

நல்ல பாட்ல்!
இப்படியும் அவ்வப்போது முயற்சிக்கவும்.