Thursday, July 8, 2010

காட்சிப்பிழை

வண்ணத்துப்பூச்சி ஒன்று என் தோளில் வந்த‌ம‌ர்ந்த‌து,

பூக்களைக் கவர்ந்து தேனெடுத்த‌ க‌தையையும்

வான‌வில்லிட‌ம் சென்று வ‌ர்ண‌ம் வாங்கி வ‌ந்த‌தையும்

சாக‌ச‌க் க‌தைக‌ளாய்ச் சொல்லிச் சொல்லி ம‌கிழ்ந்த‌து;

க‌ண்காணாத‌ அதிச‌ய‌மாய் மெய்மறந்து நின்றேன்!

பின்பு தான் தெரிந்த‌து, - த‌ன்

இதயத்தின் குருதியினை நிற‌ப்பிரிகை செய்து தான்

இற‌கின் வ‌ண்ண‌ங்களாய்ச் சும‌ந்து திரியுதென‌...

20 comments:

Uma said...

Poignant! :(

லெமூரியன்... said...

ஆத்தி....கவிதை ரணமா இருக்குதே...!
:-)
நல்லா இருக்கு...!
அப்புறம் அந்த கலர் மேட்டர் இப்போதான் எனக்கு தெரியும்...

அமுதா said...

மனம் கனமானது....

soundr said...

காட்சிப்பிழை...

இந்த டைடில் சரிதானுங்களா..?

http://vaarththai.wordpress.com

க.பாலாசி said...

நல்லாயிருக்குங்க தீபா. த‌ன் இதயத்தின் குருதியினை நிற‌ப்பிரிகை செய்வதால்தான் அதை சாகசப்படுத்துகிறதோ என்னவோ...

Radhakrishnan said...

உண்மையை பார்க்கும் நமக்குத்தான் வலி. நல்ல சிந்தனை தீபா.

ponraj said...

The butterfly's attractiveness derives not only from colors and symmetry: deeper motives contribute to it. We would not think them so beautiful if they did not fly, or if they flew straight and briskly like bees, or if they stung, or above all if they did not enact the perturbing mystery of metamorphosis: the latter assumes in our eyes the value of a badly decoded message, a symbol, a sign.

செ.சரவணக்குமார் said...

ரொம்ப நல்லாயிருக்குங்க.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல சிந்தனை

பனித்துளி சங்கர் said...

கவிதை வார்த்தைகளில் வலிகள் கசிகிறது . மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி

VijayaRaj J.P said...

வண்ணத்துப் பூச்சி
பொய் சொல்லுமா?

VELU.G said...

காட்சி பிழையாய் இருந்தாலும் கருத்தாழம் மிக்கதாய்

அம்பிகா said...

கவிதை நல்லாயிருக்கு தீபா.

தீபா, உனக்கு ஒரு விருது அளித்துள்ளேன். பெற்று கொள்ளவும்.

Deepa said...

நன்றி உமா!
நன்றி லெமூரியன்!
நீங்கள் எதைச் சொல்லுகிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. நான் எதையும் குறிப்பிட்டு இதை எழுதவில்லை.
நன்றி அமுதா!
நன்றி சிதம்பரம்!
தலைப்பு பொருத்தமாக இல்லையா?
நன்றி பாலாசி!
சரியான புரிதலுக்கு நன்றி.
நன்றி இராதாகிருஷ்ணன்!
பொன்ராஜ்!
அற்புதமான சிந்தனை. பகிர்வுக்கு நன்றி.
நன்றி சரவணக்குமார்!
நன்றி பனித்துளி சங்கர்!
நன்றி அங்கிள்!
நல்ல கேள்வி! :)
நன்றி வேலு!
நன்றி அக்கா!
விருதுக்கும் நன்றி.

Riyas said...

ம்ம்ம்ம் அருமை.

பனித்துளி சங்கர் said...

வார்த்தைகளை வலிகள் தெறிக்கிறது . மிகவும் சிறப்பானக் கவிதை . பகிர்வுக்கு நன்றி

Unknown said...

நல்லாயிருக்குங்க.

Unknown said...

ரொம்ப நல்லா இருக்கு.

Dr.Rudhran said...

let butterflies flutter about with their own illusions.

Karthick Chidambaram said...

கடைசி வரி .... எப்படி இப்படி எல்லாம் .... நல்ல கவிதை நடை.